Published:Updated:

"கோவாலு... கோவாலு... 'பேய் சேகர்' வந்திருக்கேன் கோவாலு!" - வெப் சீரிஸில் வடிவேலு

வெப் சீரிஸில் வடிவேலு
பிரீமியம் ஸ்டோரி
வெப் சீரிஸில் வடிவேலு

‘இந்தப் படம் சரியா போகலைனா உனக்கு வாழ்க்கை போயிடும். எனக்கு வாழ்க்கையோடு சேர்ந்து பணமும் போயிடும். அதை மட்டும் மனசுல வெச்சுக்கோ’ன்னு சொன்னார்.

"கோவாலு... கோவாலு... 'பேய் சேகர்' வந்திருக்கேன் கோவாலு!" - வெப் சீரிஸில் வடிவேலு

‘இந்தப் படம் சரியா போகலைனா உனக்கு வாழ்க்கை போயிடும். எனக்கு வாழ்க்கையோடு சேர்ந்து பணமும் போயிடும். அதை மட்டும் மனசுல வெச்சுக்கோ’ன்னு சொன்னார்.

Published:Updated:
வெப் சீரிஸில் வடிவேலு
பிரீமியம் ஸ்டோரி
வெப் சீரிஸில் வடிவேலு

டிவேலுவை வெடிவேலுவாக்கிச் சிரிக்கவைத்தவர்களில் முக்கியமானவர் இயக்குநர் சுராஜ். நாய் சேகராகவும், சிரிப்புப் போலீஸாகவும் வடிவேலுவை இன்றுவரை டிரெண்டில் வைத்திருக்கும் பல படங்களின் இயக்குநர், வசனகர்த்தா சுராஜ்தான். வடிவேலுவுடன் புதுக் கூட்டணிக்குத் தயாராகியிருக்கும் சுராஜிடம் பேசினேன்.

"கோவாலு... கோவாலு... 'பேய் சேகர்' வந்திருக்கேன் கோவாலு!"  - வெப் சீரிஸில் வடிவேலு

‘`இயக்குநர் சுந்தர்.சி-யை நடிகர் ஆக்கியது நீங்கள்தான். எப்படி நடந்தது அது?’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``நான் சுந்தர்.சி சாரிடம் உதவி இயக்குநர். சரத்குமார் நடிப்பில் ‘மூவேந்தர்,’ சத்யராஜை வெச்சு ’குங்குமப்பொட்டு கவுண்டர்’, ’மிலிட்டரி’ படங்களை இயக்கினேன். நான் நினைச்ச பெரிய வெற்றி கிடைக்காததால், மீண்டும் சுந்தர்.சி சார்கிட்ட வேலை பார்க்கப்போயிட்டேன். ’வின்னர்’, ’கிரி’னு ரெண்டு படங்களில் அவர்கிட்ட மறுபடியும் வேலை பார்த்தேன். ’கிரி’ படத்தை அவரோட தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமாக எடுத்தார். அந்தப் படத்தோட ஷூட்டிங் நடக்கும் போது, ‘இந்தப் படம் ஹிட்டாகிடுச்சுன்னா, நான் தயாரிக்கிற அடுத்த படத்துக்கு நீதான் இயக்குநர்’னு சுந்தர்.சி சார் என்கிட்ட சொன்னார். அவர் அப்படிச் சொன்னதுக்கு அப்புறம் எழுதுன கதைதான் ’தலைநகரம்’. முதல்ல இந்தப் படத்தில் நடிக்கிறதுக்கு சில ஹீரோக்கள்கிட்ட கதை சொன்னேன். க்ளைமாக்ஸில் ஹீரோ இறக்குற மாதிரி இருந்ததால யாரும் நடிக்கிறதுக்குத் தயாராயில்லை. ஒரு கட்டத்தில் சுந்தர்.சி சார்கிட்ட, ‘உடம்பைக் கொஞ்சம் குறைச்சீங்கன்னா, நீங்களே ஹீரோவா நடிக்கலாம்’னு சொன்னேன். இப்படித்தான் சுந்தர்.சி சார் ஹீரோவா நடிக்கலாம்கிற பேச்சு ஆரம்பமாச்சு. ஆனால் ‘இதில் நான் நடிகன் மட்டும்தான். நீதான் என்னை வேலை வாங்கணும்’னு சொல்லிட்டார். அதுமட்டுமல்லாம, இந்தப் படம் பண்ணும் போது சுந்தர்.சி சார் ஒரே ஒரு விஷயம்தான் என்கிட்ட சொன்னார்.

சுராஜ்
சுராஜ்

‘இந்தப் படம் சரியா போகலைனா உனக்கு வாழ்க்கை போயிடும். எனக்கு வாழ்க்கையோடு சேர்ந்து பணமும் போயிடும். அதை மட்டும் மனசுல வெச்சுக்கோ’ன்னு சொன்னார். ஜெயிக்கணும்கிற வெறியில் பண்ணுன படம்தான் தலைநகரம். வெற்றியும் கிடைச்சது. சினிமாவில் எதிர்பார்த்த வெற்றி, நான் சினிமாவுக்கு வந்து பத்து வருஷம் கழிச்சித்தான் கிடைச்சது. இப்பவரைக்கும் சுந்தர்.சி சார், ‘உன்னை இயக்குநராக்குனதுல நான் உனக்கு குரு; என்னை நடிகனாக்குனதுல நீ எனக்கு குரு’ன்னு சொல்லிட்டே இருப்பார்.’’

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘`கவுண்டமணி, வடிவேலு, விவேக், சந்தானம், சூரினு தமிழ் சினிமாவின் முக்கியமான காமெடி நடிகர்கள் எல்லோரையுமே இயக்கியிருக்கீங்க... அவங்களுடனான அனுபவம் சொல்ல முடியுமா?’’

“நான் ’முறைமாமன்’ படத்துல உதவி இயக்குநரா இருந்ததுல இருந்து கவுண்டமணி அண்ணன் நல்ல பழக்கம். ’உள்ளத்தை அள்ளித்தா’ படம் பண்ணும் போது, முதலில் ’அழகிய லைலா’ பாட்டுல கவுண்டமணி அண்ணன் ஆடுற மாதிரி எதுவும் ப்ளான் பண்ணலை. ஒரு நாள் ஷூட்டிங் ஸ்பாட்ல நாளைக்கு அந்தப் பாட்டு எடுக்கப்போறோம்னு பேசிட்டு இருந்தப்போ, ‘யப்பா நான் அந்தப் பாட்டுல இல்லையா’ன்னு கேட்டார். ‘இல்ல சார்... ஹீரோ மட்டும்தான்’னு சொன்னோம். ‘அது எப்படிப்பா, நானும் ஹீரோவும் சேர்ந்துதான மெக்கானிக் செட்டுல வேலை பார்க்குறோம். அந்த இடத்துல பாட்டு வந்தால், ஹீரோ என்னை மட்டும் கழட்டிவிட்டுடுவாரா’ன்னு கேட்டார். அதுக்கப்புறம்தான் அந்தப் பாட்டுல கவுண்டமணி அண்ணன் இருக்குற மாதிரி பண்ணினோம். அதுல அவர் ஆடுன டான்ஸ் ஃபேமஸானதும் அடுத்து எடுத்த ’மேட்டுக்குடி’ படத்துல நக்மாகூட கவுண்டமணி அண்ணன் தனியா ஆடுற மாதிரி ’வெல்வெட்டா வெல்வெட்டா’ பாட்டைப் பண்ணினோம்.

"கோவாலு... கோவாலு... 'பேய் சேகர்' வந்திருக்கேன் கோவாலு!"  - வெப் சீரிஸில் வடிவேலு
"கோவாலு... கோவாலு... 'பேய் சேகர்' வந்திருக்கேன் கோவாலு!"  - வெப் சீரிஸில் வடிவேலு

’தலைநகரம்’ படத்துல சுந்தர்.சி சார் நடிக்கிறது உறுதியானதுக்கு அப்புறம்தான் வடிவேலுகிட்ட கேட்டேன். அப்போ அவர் செம பிஸியா இருந்த டைம். ‘பங்காளி அஞ்சு நாள் கால்ஷீட் தரேன். அதுல என்னெல்லாம் எடுக்க முடியுமோ, எடுத்துக்கோங்க’ன்னு சொன்னார். படத்துல இருந்த நாய் சேகர் காமெடி போர்ஷன் எல்லாம் அஞ்சு நாளில் எடுத்ததுதான். படத்துல வடிவேலு நடிச்ச சீன் எல்லாம், ஒரே ஷாட்ல எடுத்தோம். கட் பண்ணி, கட் பண்ணி எடுக்காம ஒரே லென்த் ஷாட்டா எடுப்போம். படத்தோட பல வசனங்களும் டப்பிங்கில் சேர்த்ததுதான். குறிப்பா, வடிவேலு ரெளடிங்ககிட்ட பேசிட்டிருக்கும்போது போலீஸ் வந்து எல்லா ரெளடிகளையும் ஜீப்பில் ஏத்துற மாதிரி ஒரு சீன் இருக்கும். அதுல வடிவேலுவை அந்தப் போலீஸ் ஏத்தமாட்டார். இவரே ஜீப் பின்னாடி ஏறிட்டுப் போவார். அந்த சீன் எடுக்குறதுக்கு முன்னாடி என்கிட்ட, ‘பங்காளி, நான் சொல்ற வரைக்கும் கட் சொல்லிடாத’ன்னு சொல்லிட்டுத்தான் போனார். அவர் ஜீப்பில் ஏறிப்போகும் போது, ‘பங்காளி கட் பண்ணிடாத; கட் பண்ணிடாத. டப்பிங்ல பார்த்துக்கலாம்’னுதான் சொல்லுவார். அதைத்தான் டப்பிங்ல, ‘நான் ஜெயிலுக்குப் போறேன்; ஜெயிலுக்குப் போறேன். நானும் ரெளடிதான்’னு பேசினார்.

"கோவாலு... கோவாலு... 'பேய் சேகர்' வந்திருக்கேன் கோவாலு!"  - வெப் சீரிஸில் வடிவேலு
"கோவாலு... கோவாலு... 'பேய் சேகர்' வந்திருக்கேன் கோவாலு!"  - வெப் சீரிஸில் வடிவேலு

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விவேக் சாரோட ’படிக்காதவன்’, ’மாப்பிள்ளை’ன்னு ரெண்டு படங்களில் வொர்க் பண்ணினேன். ரெண்டுலயும் வித்தியாசமான விவேக்கைக் காட்டணும்னு ஆசைப்பட்டு, அவரோட உடை, முடி, பேச்சுன்னு எல்லாத்தையும் மாத்தினேன். அவர் எப்போதும் படங்களில் வேகமாகப் பேசுவார். ஆனால், என் படங்களில் அதை மாற்றி வித்தியாசமான மாடுலேஷனில் பேச வெச்சேன்.

’அலெக்ஸ் பாண்டியன்’ படத்துல சந்தானம். மூணு தங்கச்சிகளுக்கு அண்ணனா பிறந்தவன், பசங்ககிட்ட இருந்து தன் தங்கச்சிகளைக் காப்பாத்த எவ்வளவு கஷ்டப்படுவான்னு அந்தப் படத்தில் சந்தானத்தை வெச்சுக் காட்டியிருந்தேன். அந்தக் காமெடிக் காட்சிகளையெல்லாம் ரொம்பவே ரசிச்சு ரசிச்சு எடுத்தேன். சந்தானமும் மக்களுக்குப் பிடிச்சதைக் கொடுக்கணும்னு ரொம்பவே உழைப்பார்.

"கோவாலு... கோவாலு... 'பேய் சேகர்' வந்திருக்கேன் கோவாலு!"  - வெப் சீரிஸில் வடிவேலு

சூரி எனக்குத் தம்பி மாதிரி. ரொம்பப் பாசக்காரன். சூரியோடும் ’சகலகலா வல்லவன்’, ’கத்திசண்டை’ன்னு ரெண்டு படங்களில் வொர்க் பண்ணினேன். ’கத்திசண்டை’ படத்துல வடிவேலு இரண்டாவது பாதியில்தான் வருவார். முதல் பாதியில் எனக்கு இன்னொரு காமெடியன் தேவைப்பட்டுச்சு. உடனே சூரிகிட்டதான் கேட்டேன். அந்த டைம் சூரி பரபரப்பா நிறைய படங்களில் நடிச்சிட்டிருந்தார். ‘அண்ணே உங்களுக்காக நடிக்கிறேண்ணே’ன்னு சொல்லி நடிச்சுக்கொடுத்தார். இத்தனை காமெடி நடிகர்களோடு இணைந்து மக்களுக்குப் பிடிக்கிற மாதிரி பல காமெடிகளைக் கொடுத்திருக்கோம்னு நினைக்கும்போதே ரொம்ப பெருமையா இருக்கு’’

‘’வடிவேலுவை வெச்சு நீங்க ஒரு வெப் சீரிஸ் எடுக்கப்போறீங்களாமே?’’

’’வடிவேலு ஒருநாள் போன் பண்ணி, ‘பங்காளி ஃப்ரீயாத்தான் இருக்கேன். இப்போ நீங்க ஒரு கதை கொண்டு வந்தீங்கன்னா, நாம பண்ணலாம். ஆனால், நீங்க கொண்டு வர கதையைக் கேட்டு நான் சிரிச்சுக்கிட்டே இருக்கணும் பங்காளி’ன்னு சொன்னார். ‘பேய்ப் படத்தில் காமெடி பண்ணுற டிரெண்ட்டையே நீங்கதான் ’சந்திரமுகி’ படத்துல அறிமுகப்படுத்துனீங்க. அதுக்கப்புறம்தான் ’காஞ்சனா’, ’அரண்மனை’ படங்கள் அதே ஃபார்முலாவுல வந்துச்சு. இப்போ அதை நீங்க திரும்பவும் பண்ணணும்’னு சொல்லிட்டு ஒரு பேய்க்கதை சொன்னேன். கதையை ரொம்பவே என்ஜாய் பண்ணிக் கேட்டார். நான் இதைப் படமா பண்ணலாம்கிற ஐடியாவில்தான் அவர்கிட்ட கதையைச் சொன்னேன். கதையைக் கேட்டுட்டு, ’நாம இதை வெப் சீரிஸா பண்ணலாம் பங்காளி. இப்போ அதான் டிரெண்ட். இந்தக் கதையை வெப் சீரிஸா மாத்துங்க’ன்னு சொன்னார். நானும் இந்தக் கதையை ஒன்பது எபிசோடுகளாகப் பிரிச்சு, வெப் சீரிஸுக்குத் தகுந்தமாதிரி மாத்தியிருக்கேன். இப்போ வடிவேலுதான் அமேசான், ஹாட் ஸ்டார் நிறுவனங்கள்கிட்ட பேசிட்டிருக்கார். எந்த பிளாட்பார்ம்கிறது உறுதியாகிடுச்சுன்னா, அறிவிப்பை வெளியிடு வோம். சீக்கிரமே எல்லாம் நல்லபடியா நடக்கும்.’’

"கோவாலு... கோவாலு... 'பேய் சேகர்' வந்திருக்கேன் கோவாலு!"  - வெப் சீரிஸில் வடிவேலு

டிவேலு நடிக்கவிருக்கும் வெப்சீரிஸ் தலைப்பு என்னவாக இருக்கலாம், வடிவேலு கேரக்டருக்கு என்ன பெயர் வைக்கலாம், என்ன காமெடி பஞ்ச் டயலாக் வைக்கலாம் என்று உங்கள் கருத்துகளை #லகுடபாண்டிகளுக்கு_ஒரு _சவால் என்ற ஹேஷ்டேக்கில் ஆனந்த விகடனின் சோஷியல் பக்கங்களில் பகிரலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism