Published:Updated:

கவுண்டமணி டான்ஸ்... வடிவேலு டப்பிங்... - சுவாரஸ்ய சீக்ரெட் பகிரும் சுராஜ்!

வெப் சீரிஸில் வடிவேலு
வெப் சீரிஸில் வடிவேலு

ஒரு நாள் ஷூட்டிங் ஸ்பாட்ல நாளைக்கு அந்தப் பாட்டு எடுக்கப்போறோம்னு பேசிட்டு இருந்தப்போ, 'யப்பா நான் அந்தப் பாட்டுல இல்லையா'ன்னு கேட்டார். 'இல்ல சார்... ஹீரோ மட்டும்தான்'னு சொன்னோம்.

வடிவேலுவை வெடிவேலுவாக்கிச் சிரிக்கவைத்தவர்களில் முக்கியமானவர் இயக்குநர் சுராஜ். நாய் சேகராகவும், சிரிப்புப் போலீஸாகவும் வடிவேலுவை இன்றுவரை டிரெண்டில் வைத்திருக்கும் பல படங்களின் இயக்குநர், வசனகர்த்தா சுராஜ்தான். கவுண்டமணி, வடிவேலு உடனான அனுபவம் குறித்து அவர் பகிர்ந்தது...

"நான் 'முறைமாமன்' படத்துல உதவி இயக்குநரா இருந்ததுல இருந்து கவுண்டமணி அண்ணன் நல்ல பழக்கம். 'உள்ளத்தை அள்ளித்தா' படம் பண்ணும் போது, முதலில் 'அழகிய லைலா' பாட்டுல கவுண்டமணி அண்ணன் ஆடுற மாதிரி எதுவும் ப்ளான் பண்ணலை.

ஒரு நாள் ஷூட்டிங் ஸ்பாட்ல நாளைக்கு அந்தப் பாட்டு எடுக்கப்போறோம்னு பேசிட்டு இருந்தப்போ, 'யப்பா நான் அந்தப் பாட்டுல இல்லையா'ன்னு கேட்டார். 'இல்ல சார்... ஹீரோ மட்டும்தான்'னு சொன்னோம். 'அது எப்படிப்பா, நானும் ஹீரோவும் சேர்ந்துதான மெக்கானிக் செட்டுல வேலை பார்க்குறோம். அந்த இடத்துல பாட்டு வந்தால், ஹீரோ என்னை மட்டும் கழட்டிவிட்டுடுவாரா'ன்னு கேட்டார். அதுக்கப்புறம்தான் அந்தப் பாட்டுல கவுண்டமணி அண்ணன் இருக்குற மாதிரி பண்ணினோம்.

அதுல அவர் ஆடுன டான்ஸ் ஃபேமஸானதும் அடுத்து எடுத்த 'மேட்டுக்குடி' படத்துல நக்மாகூட கவுண்டமணி அண்ணன் தனியா ஆடுற மாதிரி 'வெல்வெட்டா வெல்வெட்டா' பாட்டைப் பண்ணினோம்.

வெப் சீரிஸில் வடிவேலு
வெப் சீரிஸில் வடிவேலு

'தலைநகரம்' படத்துல சுந்தர்.சி சார் நடிக்கிறது உறுதியானதுக்கு அப்புறம்தான் வடிவேலுகிட்ட கேட்டேன். அப்போ அவர் செம பிஸியா இருந்த டைம். 'பங்காளி அஞ்சு நாள் கால்ஷீட் தரேன். அதுல என்னெல்லாம் எடுக்க முடியுமோ, எடுத்துக்கோங்க'ன்னு சொன்னார். படத்துல இருந்த நாய் சேகர் காமெடி போர்ஷன் எல்லாம் அஞ்சு நாளில் எடுத்ததுதான். படத்துல வடிவேலு நடிச்ச சீன் எல்லாம், ஒரே ஷாட்ல எடுத்தோம். கட் பண்ணி, கட் பண்ணி எடுக்காம ஒரே லென்த் ஷாட்டா எடுப்போம். படத்தோட பல வசனங்களும் டப்பிங்கில் சேர்த்ததுதான்.

குறிப்பா, வடிவேலு ரெளடிங்ககிட்ட பேசிட்டிருக்கும்போது போலீஸ் வந்து எல்லா ரெளடிகளையும் ஜீப்பில் ஏத்துற மாதிரி ஒரு சீன் இருக்கும். அதுல வடிவேலுவை அந்தப் போலீஸ் ஏத்தமாட்டார். இவரே ஜீப் பின்னாடி ஏறிட்டுப் போவார். அந்த சீன் எடுக்குறதுக்கு முன்னாடி என்கிட்ட, 'பங்காளி, நான் சொல்ற வரைக்கும் கட் சொல்லிடாத'ன்னு சொல்லிட்டுத்தான் போனார். அவர் ஜீப்பில் ஏறிப்போகும் போது, 'பங்காளி கட் பண்ணிடாத; கட் பண்ணிடாத. டப்பிங்ல பார்த்துக்கலாம்'னுதான் சொல்லுவார். அதைத்தான் டப்பிங்ல, 'நான் ஜெயிலுக்குப் போறேன்; ஜெயிலுக்குப் போறேன். நானும் ரெளடிதான்'னு பேசினார்."

- வடிவேலுவை வைத்து எடுக்கப்போகும் வெப் சீரிஸ் குறித்து இயக்குநர் சுராஜ் பகிர்ந்த எக்ஸ்க்ளூசிவ் தகவல்களை முழுமையாக ஆனந்த விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/2Er7gmm > "கோவாலு... கோவாலு... 'பேய் சேகர்' வந்திருக்கேன் கோவாலு!" - வெப் சீரிஸில் வடிவேலு https://bit.ly/2Er7gmm

சிறப்புச் சலுகை

விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு