Published:Updated:

``சீக்கிரமே விஜய் சாரை இயக்குவேன். அந்தப் படம்..?'' - இயக்குநர் சுசீந்திரன்

இயக்குநர் சுசீந்திரன்

"நான் இயக்கின 'ஏஞ்சலினா' ரிலீஸுக்குத் தயாரா இருக்கு. காலேஜ் பசங்களைப் பத்தின கதை. த்ரில்லர் ஜானர். கெளதம் மேனன் சார் படங்கள்ல இருக்கிற ஒரு 'க்ளாஸ்' இதுல இருக்கும். படம் நிச்சயம் பேசப்படும்னு நம்புறேன்."

``சீக்கிரமே விஜய் சாரை இயக்குவேன். அந்தப் படம்..?'' - இயக்குநர் சுசீந்திரன்

"நான் இயக்கின 'ஏஞ்சலினா' ரிலீஸுக்குத் தயாரா இருக்கு. காலேஜ் பசங்களைப் பத்தின கதை. த்ரில்லர் ஜானர். கெளதம் மேனன் சார் படங்கள்ல இருக்கிற ஒரு 'க்ளாஸ்' இதுல இருக்கும். படம் நிச்சயம் பேசப்படும்னு நம்புறேன்."

Published:Updated:
இயக்குநர் சுசீந்திரன்

"ஷூட்டிங் ரத்து செய்தபோதே கிளம்பி என் சொந்த ஊர் ஒட்டன்சத்திரத்துக்கு வந்துட்டேன். அங்கே என் குடும்பம், தம்பி குடும்பம், தங்கச்சி குடும்பம்னு எல்லோரும் ரொம்ப நாள் கழிச்சு ஒண்ணா இருந்தோம். தினமும் தோட்டத்துக்குப் போயிட்டு கிராமத்துல குடும்பத்தோட சந்தோஷமா இருந்தோம். அடுத்து கொடுமுடியில இருக்கிற என் மாமியார் வீட்டுக்கு வந்தேன். தினம்தினம் நாட்டுக்கோழிதான். மருமகனை நல்லா பார்த்துக்கிறாங்க" என நகைச்சுவையுடன் பேச ஆரம்பித்தார் இயக்குநர் சுசீந்திரன்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த க்வாரன்டைன் உங்களுக்கு எப்படி போகுது?

"என்னைப் பொறுத்தவரை இந்த க்வாரன்டைன் கேப் ரொம்ப உதவியா இருக்கு. ஒரு கதையை முழுமையா எழுதி முடிச்சு பவுண்டடா ரெடி பண்ணி வெச்சிருக்கேன். இப்போ ஹாரர் ஜானர்ல ஒரு படத்துக்கான ஸ்கிரிப்ட் எழுதிக்கிட்டிருக்கேன். இதுவரை நான் ஹாரர் கதை பண்ணதில்லை. அதனால் கொஞ்சம் மெனக்கெட்டு எழுதிட்டு இருக்கேன். இந்தப் படம் வித்தியாசமான ஃபிலிம் மேக்கிங்கா இருக்கும். அதேபோல, நம்மளைப் பத்தி தெரிஞ்சுக்க இந்த க்வாரன்டைன் ரொம்ப உதவியா இருக்கும்னு நினைக்கிறேன். இவ்ளோ நாளா சினிமா, கதை, ஷூட்டிங்னு ஓடிக்கிட்டு இருந்திருப்போம். இப்போ முழுக்க முழுக்கக் குடும்பத்தோட நேரம் செலவழிக்கிறது நல்லாயிருக்கு. என் அப்பா அவருடைய சின்ன வயசு கதை எல்லாம் எங்களுக்கு தினமும் சொல்லிக்கிட்டிருக்கார். இது இல்லைனா, அந்தக் கதைகளை மிஸ் பண்ணியிருப்பேன்."

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

க்வாரன்டைன்ல என்ன கத்துக்கிட்டீங்க?

இயக்குநர் சுசீந்திரன் குடும்பத்துடன்...
இயக்குநர் சுசீந்திரன் குடும்பத்துடன்...

"வேலை காரணமா நண்பர்கள்கிட்ட பேசமுடியாம இருந்திருக்கும். இப்போ தினமும் ஒவ்வொரு நண்பனுக்கும் போன் பண்ணி ஒரு மணி நேரம் பேசுறேன். அப்புறம், நம்மை தயார் பண்ணிக்கிறதுக்கான நேரமா இதைப் பாக்குறேன். சென்னையில இருந்தபோது கொஞ்சம் தாமதா எழுந்திருச்சுட்டா, நம்ம மேல நமக்கே டென்ஷனாகிடும். அதனால உடற்பயிற்சி செய்யவோ, நல்லா சாப்பிடவோ நேரம் இருக்காது. ஆனா, இப்போ நல்லா சாப்பிடுறேன், காலை, மாலைனு வாக்கிங் போறேன். தவிர, சமீபமா எனக்கு ஒரு விபத்துல கை பயங்கரமா அடிபட்டிடுச்சு. அதனால தினமும் கைக்கு ஃபிசியோதெரபி பண்ணிட்டு இருக்கேன். அப்புறம், கிராமத்துல இருக்கிறதுனால நைட் சீக்கரமா தூங்கிட்டு காலையில 4.30 மணிக்கு எழுந்திச்சிடுறேன்."

விக்ரம் பிரபுவை இயக்குறீங்கனு கேள்விப்பட்டோமே?

இயக்குநர் சுசீந்திரன்
இயக்குநர் சுசீந்திரன்

"ஆமாம் பிரதர். விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையானு 'கும்கி' காம்போ இந்தப் படத்துல சேருது. பாலசுப்ரமணியம் சார் ஒளிப்பதிவு பண்றார், இமான் இசையமைக்கிறார். 1985-ல நடக்குற கதை. மார்ச் 23-ம் தேதி ஷூட்டிங் ஆரம்பிக்க பிளான் பண்ணியிருந்தோம். அதுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி ஷூட்டிங் ரத்துனு அறிவிச்சதுனால ஷூட்டிங் போகமுடியலை. தவிர, நான் இயக்கின 'ஏஞ்சலினா' ரிலீஸுக்குத் தயாரா இருக்கு. காலேஜ் பசங்களைப் பத்தின கதை. த்ரில்லர் ஜானர். கெளதம் மேனன் சார் படங்கள்ல இருக்கிற ஒரு 'க்ளாஸ்' இதுல இருக்கும். படம் நிச்சயம் பேசப்படும்னு நம்புறேன்."

இவரை வெச்சு ஒரு படம் இயக்கிடணும்னு நீங்க நினைக்கிற ஹீரோ யார். இந்தக் கதையை எப்படியாச்சும் படமாக்கிடணும்னு நினைக்கிற கதை என்ன?

"எனக்கு விஜய் சார், தனுஷ் சார் ரெண்டு பேரும் ரொம்பப் பிடிக்கும். விஜய் சாரை வெச்சு பக்கா ஃபேமிலி என்டர்டெய்னரா ஒரு படம் பண்ணணும்னு ஆசை. 'அழகர்சாமியின் குதிரை' முடிஞ்ச பிறகு, உயரம் குறைவா இருக்கிறவங்களை வெச்சு இரு கதை பண்ணேன். பல சாதனையாளர்கள் வழக்கமான உயரத்தைவிட குறைவாதான் இருந்திருக்காங்க. உதாரணத்துக்கு பெரிய லிஸ்ட்டே இருக்கு. நம்ம உயரம் குறைவா இருக்கிறதுனால எல்லோரையும் அண்ணாந்து பார்க்குறோமேனு ஒரு எண்ணம் அவங்களுக்குள்ள இருக்கும். இதை வெச்சு எழுதின கதைதான் அது. எந்த ஹீரோ வேணாலும் அதுல நடிக்கலாம். அதை நான் விக்ரம் சார்கிட்ட சொன்னேன். அவருக்கும் பிடிச்சிருந்தது. ஆனா, அந்த சமயத்துல அதுக்கு பெரிய பட்ஜெட் தேவைப்பட்டுச்சு. அதனால அதைப் பண்ணலை. என்னைக்கா இருந்தாலும் இந்தக் கதையை மறுபடியும் வொர்க் பண்ணி படமாக்கணும்னு எண்ணம் இருக்கு"

'நான் மகான் அல்ல', 'பாண்டியநாடு' மாதிரி ஒரு படத்தை உங்ககிட்ட இருந்து எப்போ எதிர்பார்க்கலாம்?

"அப்படியொரு படம் விஜய் சாரை வெச்சு பண்ணுவேன். அதுக்கான கதையும் எழுதிட்டிருக்கேன்."

க்வாரன்டைன் பத்தி மக்களுக்கு என்ன சொல்லணும்னு நினைக்கிறீங்க?

"எல்லோரும் பத்திரமா விட்டிலேயே இருங்க. இது நம்மளை நாமளே பாதுகாப்பா வெச்சுக்கிறதுக்கான காலம். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் உங்களை புதுப்பிச்சு அப்டேட் பண்ணிக்கோங்க."

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism