Published:Updated:

``இன்றைய கதாநாயகர்கள்கிட்ட பேசவே முடியலையேங்க!" - தங்கர் ஆதங்கம்

தங்கர் பச்சான்
தங்கர் பச்சான்

'அழகி', 'களவாடிய பொழுதுகள்' தந்த தங்கர் பச்சானை ஊரடங்கு பொழுதில் சந்தித்தபோது...

"தங்கர் பச்சன் மாஸ் ஹீரோக்களை வைத்துப் படம் பண்ண மாட்டார்'னு ஒரு பிம்பம். அதை மாற்ற விரும்பலையா?"

"திரைப்படக் கல்லூரியில் சேருவதற்கு முன்னாடி வரை நான் தீவிரமான எம்.ஜி,.ஆர் ரசிகன். அங்க போய் உலக சினிமாக்களைப் பார்த்த பிறகுதான், நாம எந்த அளவு பின்தங்கியிருக்கோம்னு தெரிஞ்சது. இன்னைக்கும் அந்த சினிமாக்களுடன் ஒப்பிடறப்ப நாம 90 வருஷமாவது பின்னாடிதான் இருக்கோம். சினிமாவுல நுழையறப்பவே இந்த மாதிரியான புரிதலோடு வந்ததாலேயோ என்னவோ, கதாநாயகனைப் போற்றுகிற மாதிரியான கற்பனை எனக்குள்ள வரலை.

ஒளிப்பதிவு செய்தபோதும் சரி, இயக்கினபோதும் சரி, படங்களை நானேதான் தேர்ந்தெடுத்தேன். ஏன்னா, 'உச்சநட்சத்திரம் நடிச்சாலும், புதுமுக நடிகர் நடிச்சாலும் கேமராவும் லைட்டும் ஒண்ணுதானே'ன்னு நினைக்கிறவன் நான். அதுக்காக மாஸ் ஹீரோவா, கண்ணை மூடிக்கிட்டு வேண்டாம்னு சொல்லணும்னு நினைக்கிற ஆளும் கிடையாது.

விஜய்
விஜய்

தம்பி விஜய் 'ஒன்பது ரூபாய் நோட்டு' பட நிகழ்ச்சியில் 'அண்ணாகூட ஒரு படம் பண்ணணும்'னு விருப்பத்தைச் சொன்னார். 'ஒரு வருடம் காத்திருக்க முடியுமா'ன்னு கேட்டார். ஆனா அது நடக்கலை. வருங்காலத்துல நடந்தாலும் நடக்கலாம். ஏன்னா விஜய்க்கு இப்ப ஒரு அரசியல் தெளிவு வந்திருக்கறதா நான் கருதறேன்.

ஆனா, கொரோனாவுக்குப் பிறகு கதாநாயகனை மையமா வெச்சு வருகிற படங்கள் குறையலாம்னு எனக்குத் தோணுது. முன்னாடி 450 பேருடன் அரங்கு நிறைந்து காட்சியளித்த தியேட்டர்களில் அடுத்த ரெண்டு வருஷத்துக்காவது 150 பேர் மட்டுமே பார்க்க முடியும்கிற நிலை உருவாகலாம். அப்ப படத்தின் பட்ஜெட் குறையும். ஆனா நம்ம கதாநாயகர்கள் மூணுல ஒரு பங்கு ஊதியத்தைக் குறைச்சுப்பாங்களா? முன்வர மாட்டாங்க.

இன்னைக்கு இருக்கிற கதாநாயகர்கள்கிட்ட பேசவே முடியலையேங்க. ரஜினி அண்ணன்கிட்ட போன்ல பேசினாக்கூட ஒரு மணி நேரம் பேசுவார். அஜித் விஜய்யுமே மதிப்பு மரியாதை ரொம்பவே தெரிஞ்சவங்க. இவங்களுக்குப் பிறகு வந்த கதாநாயகர்கள் உயிர் வாழறதே பணம் சம்பாதிக்க மட்டும்தான்னு நினைச்சுட்டு சினிமாவுக்குள் வந்தவங்களா இருக்காங்க. அதனால நாம நம்ம வழியிலேயே போவோம்."

"ஒ.டி.டி-யில் திரைப்படங்கள் வெளியாவது பற்றி என்ன நினைக்கிறீங்க?"

"ஆன்லைன்ல வெளியாகிற படங்கள் முப்பது சதவிகிதம் பேருக்கு மேல் சினிமா ரசிகர்களைப் போய்ச் சேராதுங்கிறதுதான் என்னுடைய கணிப்பு. ஏன்னா, நகரத்தை மட்டுமே வெச்சு படங்களின் வரவேற்பை, வெற்றியைத் தீர்மானிக்க முடியாது. 'அமேசான்', 'நெட்ஃபிளிக்ஸ்'னெல்லாம் என் கிராமத்துல போய்ப் பேசினா ஒருத்தனுக்கும் ஒண்ணும் தெரியாது."

தங்கர் பச்சான்
தங்கர் பச்சான்

? "ஐந்தரை மாத ஊரடங்கு நாள்கள் எப்படி நகர்ந்தன?"

? "நீட் தேர்வு, புதிய கல்விக்கொள்கை எனப் பல விஷயங்களில் தமிழ்நாடு வடக்கின் தாக்குதலுக்கு ஆளாகிறது என்கிற குரல் கேட்கிறது. தமிழ் உணர்வாளரா நீங்க என்ன சொல்றீங்க?"

? " `அழகி' இரண்டாம் பாகம் எதிர்பார்க்கலாமா?"

? "கந்த சஷ்டி சர்ச்சை, தடையை மீறி விநாயகர் சதுர்த்தி என்கிற இந்தச் சூழல்கள் பா.ஜ.க தமிழகத்தில் வளர்கிறது என்பதன் அடையாளமா?"

? "தமிழ்நாட்டில் 2021 தேர்தலில் முதல்வர் பதவிக்குப் பொருத்தமானவரா நீங்க யாரைப் பார்க்கறீங்க?"

- இந்தக் கேள்விகளுக்கான விரிவான பதில்களுடன், முழுமையான பேட்டியை ஆனந்த விகடன் இதழில் வாசிக்க > "ரஜினியை மட்டும்தான் மக்கள் முதல்வரா ஏத்துக்குவாங்க!" - தடாலடி தங்கர் https://bit.ly/32sFDln

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு