Published:Updated:

`` `கே.ஜி.எஃப்' பார்த்ததும் சிம்புவுக்கு`தொட்டி ஜெயா' ஞாபகம் வந்துடுச்சு!'' - வி.இஸட்.துரை

சிம்புவைப் போய் பார்த்து கதை சொன்னேன். சின்ன வயசு போர்ஷனை கேட்டுட்டே, `நான் நிச்சயம் பண்றேன்'னு சொன்னார். ஆனால், டி.ஆர் சார் குடும்பத்துக்கும், தாணு சாருக்கும் ஏதோ மனக்கசப்பு இருந்ததனால, `வேற ஹீரோ பார்க்கலாம்'னு தாணு சார் சொன்னார்.

Thotti Jaya
Thotti Jaya

லவ்வர் பாயாக இருந்த சிம்பு, `தொட்டி ஜெயா' படத்தில் ப்ளாக் அண்ட் ப்ளாக் ட்ரஸ்; தாடி என லோக்கல் தாதா லுக்கில் வித்தியாசம் காட்டியிருந்தார். இந்தப் படம் வெளியாகி தற்போது 14 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, இயக்குநர் வி.இசட்.துரையிடம் படத்தைப் பற்றிய நினைவுகளைப் பகிரச் சொன்னேன்.

`தொட்டி ஜெயா' படம் எப்படி ஆரம்பமானது?

``கலைப்புலி தாணு சாருக்கு ஒரு படம் பண்ணலாம்னு ப்ளான் பண்ணிட்டு இருந்தோம். அந்த சமயத்தில்தான் `காக்க காக்க' படம் வந்து ஹிட்டாகி இருந்துச்சு. அதில் பாண்டியன் கேரக்டரில் நடிச்ச நடிகர் ஜீவனை வெச்சுத்தான் படத்தை ஆரம்பிக்கலாம்னு இருந்தோம். ஆனால், கால்ஷீட் பிரச்னையால் அவரால பண்ண முடியாம போச்சு. அப்போ இந்தப் படத்தோட கேமராமேன் ஆர்.டி.ராஜசேகர்தான், `சிம்புவை வெச்சுப் பண்ணலாம்'னு சொன்னார்.  சிம்புவைப் போய் பார்த்து கதை சொன்னேன். சின்ன வயசு போர்ஷனை கேட்டுட்டே, `நான் நிச்சயம் பண்றேன்'னு சொன்னார். ஆனால், டி.ஆர் சார் குடும்பத்துக்கும், தாணு சாருக்கும் ஏதோ மனக்கசப்பு இருந்ததனால, `வேற ஹீரோ பார்க்கலாம்'னு தாணு  சார் சொன்னார்.

`ஸ்கிரிப்ட் நல்லா இருக்கு. நான் வேற தயாரிப்பாளர்களை சிபாரிசு பண்ணட்டுமா'னு சிம்பு கேட்டார். ஆனால், நான் ரெண்டு பேர்கிட்டேயும், `இந்தப் படம் தாணு சார் தயாரிப்புல சிம்பு நடிச்சாதான் நடக்கும்'னு சொல்லிட்டேன். தாணு சார் எனக்காக கொஞ்சம் இறங்கி வந்தார். அதுக்கப்புறம்தான் இந்தப் படம் ஸ்டார்ட் ஆச்சு. முதலில் வேற ஹீரோ எங்க ஆப்ஷனில் இருந்த மாதிரி, இசையமைப்பாளராகவும் முதலில் யுவன் தான் கமிட்டானார். ஒரு பாட்டும் ரெக்கார்ட் பண்ணிட்டோம். அதுக்கப்புறம் யுவனால் இந்தப் படம் பண்ண முடியாத நிலைமை. பிறகுதான் ஹாரிஸ் ஜெயராஜ்கிட்ட போனோம். அவரும் இந்தப் படத்துக்காக நல்லா வொர்க் பண்ணிக்கொடுத்தார்.''

சிம்பு மேல சமீபமா பல குற்றசாட்டுகளை வைக்கிறாங்க. `தொட்டி ஜெயா' ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் எப்படி?

Simbu
Simbu

`` `சிம்பு ஷூட்டிங்கிற்கு வரமாட்டிக்கிறார்; லேட்டா வரார்'னு சொல்றாங்க. ஆனால், `தொட்டி ஜெயா' ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அவர் ஒரு நாள்கூட லேட்டா வந்தது இல்லை. 48 நாள் ஷூட் எடுத்தோம்; அதிகமா நைட் ஷூட். எல்லா நாளுமே சரியா ஷூட்டிங் வந்தார். பேக்அப் பண்ற வரைக்கும் ஸ்பாட்டில்தான் இருப்பார். சிம்புவால் எந்தப் பிரச்னையும் வரலை.'' 

`தொட்டி ஜெயா' படம் வந்து 14 வருஷம் ஆச்சு. ரிலீஸானப்ப நடந்த சம்பவங்கள் ஞாபகம் இருக்கா?

``நல்லா ஞாபகம் இருக்கு. தாணு சார் அன்னைக்கு செம ஹேப்பியா இருந்தார். பல தியேட்டர்களில் இருந்து போன் வந்துச்சு. படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ் வருதுனு எல்லாரும் சொன்னாங்க. ரெண்டே நாளில் படத்துக்கு போட்ட காசு வந்துடுச்சுனும் சொன்னாங்க. இதுக்கு மேல எனக்கு என்ன சந்தோஷம்னா, இந்தப் படம் மூலமா தாணு சாருக்கும் டி.ஆர் சாருக்கும் இடையே இருந்த மனக்கசப்பு போயிடுச்சு. அது என்னால மறக்கவே முடியாது. இதுக்கு மேல என்ன வேணும்.''

'சிம்புவால் என் உழைப்பு வீணானது!' - 'சிம்பு ஒரு குழந்தை'... வெங்கட் பிரபு Vs சுந்தர்.சி

`தொட்டி ஜெயா' படம் குறித்து சிம்பு சமீபத்தில் பேசினாரா?

``நாங்க அடிக்கடி பேசிப்போம். `கே.ஜி.எஃப்' படம் பார்த்துட்டு, `தொட்டி ஜெயா' படத்தைப் பத்தி சிம்பு பேசினார். `சார் நம்ம படத்துல வெச்சிருந்த மாதிரியே சின்ன வயசு போர்ஷன் `கே.ஜி.எஃப்' படத்துல இருந்துச்சு, பார்த்தீங்களா'னு கேட்டார். `தொட்டி ஜெயா'ல அடிக்கிறேன் காசு கொடுக்குறீயா'னு சின்ன வயசு ஹீரோ கேரக்டர் கேட்டதும், `கே.ஜி.எஃப்' படத்துல, `இந்த உலகம்தான் எனக்கு வேணும்'னு  சின்ன வயசு ஹீரோ கேரக்டர் சொன்னதையும் சொல்லிக்காட்டினார். அதுமட்டுமில்லாமல், `தொட்டிஜெயா'ல, `மிரட்டுறதுக்குத்தான் பத்து பேரு; அடிக்கிறதுக்கு ஒரே ஆளுதான்'னு வசனம் வெச்சிருப்பேன். அதே மாதிரி `கே.ஜி.எஃப்'ல, `நான் பத்து பேரை அடிச்சு டான் ஆகலை. நான் அடிச்ச பத்து பேருமே டான்'ங்கிற வசனம் இருக்கும். இதெல்லாம்தான் `கே.ஜி.எஃப்' படம் பார்க்கும்போது, `தொட்டி ஜெயா' படத்தை சிம்புவுக்கு ஞாபகப்படுத்தியிருக்கும்னு நினைக்கிறேன்.''

`தொட்டி ஜெயா' படத்தோட இரண்டாம் பாகம் ஆரம்பிக்கப் போறீங்கனு நியூஸ் வந்துச்சே?

Thotti Jaya
Thotti Jaya

``நானும் சிம்பு சாரும் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம்னு பேசிட்டு இருந்தோம். அந்த சமயத்தில்தான் சுந்தர்.சி சாரை வெச்சு ஒரு படம் பண்ணறதுக்கு வாய்ப்பு வந்துச்சு. இப்போ அவரை வெச்சு `இருட்டு'னு ஒரு படம் எடுத்திருக்கேன். அது ரிலீஸுக்கு ரெடியா இருக்கு. அடுத்து விஜய் ஆண்டனியை வெச்சு ஒரு படம் எடுக்கப் போறேன். அதை முடிச்சிட்டு நான் சிம்பு படம் பண்ணப்போறது உறுதி. முதலில் வேற கதை சொல்லியிருந்தேன். ஆனால், அது இப்போ `தொட்டி ஜெயா - 2'வா மாறியிருக்கு. அதுக்கான ஸ்கிரிப்டும் ரெடியா இருக்கு. சிம்புவும் கதை கேட்டுட்டு ஆர்வமா இருக்கார். சீக்கிரமே அறிவிப்பு வரும்.''

1,200 நடிகர்கள்... லட்சங்களில் சம்பளம்... ஆனால், ஷூட்டிங்குக்குத் தடை! - கே.ஜி.எஃப் 2 அப்டேட்ஸ்