Published:Updated:

“ சிம்புன்னா என்னன்னு தெரியுமா?”

ஏமாலி
பிரீமியம் ஸ்டோரி
ஏமாலி

`` ‘ஏமாலி’ படம் முடிஞ்சதும் சிம்புவுக்கு ஒரு கதை சொன்னேன். அந்தக் கதை அவருக்கு ரொம்பப் பிடிச்சுப்போய், ‘ஊரே அலறுது’ன்னு படத்துக்கு டைட்டிலும் வெச்சிட்டார்.

“ சிம்புன்னா என்னன்னு தெரியுமா?”

`` ‘ஏமாலி’ படம் முடிஞ்சதும் சிம்புவுக்கு ஒரு கதை சொன்னேன். அந்தக் கதை அவருக்கு ரொம்பப் பிடிச்சுப்போய், ‘ஊரே அலறுது’ன்னு படத்துக்கு டைட்டிலும் வெச்சிட்டார்.

Published:Updated:
ஏமாலி
பிரீமியம் ஸ்டோரி
ஏமாலி

ந்தக் கதையை விடிவி.கணேஷ்கிட்ட சிம்பு சொல்ல, கணேஷே அந்தப் படத்தைத் தயாரிக்க முன்வந்தார். ஆனால், அந்த நேரத்தில் மணிரத்னம் படத்தில் சிம்பு பிஸியாகிட்டார். ‘சிம்பு வர்றதுக்குள்ள சுந்தர்.சி-யை வெச்சு ஒரு படம் பண்ணலாமா; அவர் ஆர்வமா இருக்கார்’னு கணேஷ் சொன்னார். இப்படி ஆரம்பமானதுதான் `இருட்டு’ ’’ எனப் பேச ஆரம்பித்தார் இயக்குநர் வி.இசட்.துரை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
“ சிம்புன்னா என்னன்னு  தெரியுமா?”

``சுந்தர்.சி சாரைப் பார்த்தபோது, ‘எனக்கு உங்களோட மேக்கிங் ஸ்டைல் பிடிக்கும். அதே மேக்கிங் ஸ்டைலில் ஒரு பேய்ப்படம் எடுக்கலாம்’னு சொன்னார். ‘ஐயோ சார்... எனக்குப் பேய்ப்படம்னா ரொம்ப பயம். நான் பேய்ப்படம் பார்த்த தேயில்லை’ன்னு சொன்னேன். ‘அப்போ நீங்கதான் பேய்ப்படம் எடுக்க சரியான ஆள். ஏன்னா, உலகையே கலக்குன `கான்ஜுரிங்’ படத்தோட டைரக்டர் ஜேம்ஸ் வானும் பயங்கரமா பயப்படுவாராம். அதனால நீங்க பேய்ப்படம்தான் எடுக்கணும்’னு சொல்லி, ஒரு பேய்ப்படம் எப்படி இருக்கணும்னு பல விஷயங்களை என்கிட்ட விளக்கி, ஒரு ஸ்க்ரிப்ட் பண்ணச் சொன்னார். எனக்கு இந்த அனுபவம் ரொம்பப் புதுசா இருந்துச்சு. ஏன்னா, நான் யார்கிட்டேயும் உதவி இயக்குநரா வேலை பார்த்ததேயில்லை. பி.ஜி படிச்சிட்டிருக்கும்போதுதான் `முகவரி’ படத்தை எடுத்தேன். அதனால நமக்கு ஒரு குரு இல்லையென்ற வருத்தம் எனக்கு முன்பு உண்டு. ஆனால், அந்தக் கவலை சுந்தர்.சி சாரோடு வொர்க் பண்ணும்போது போயிடுச்சு. அவர் சொன்ன பேய்ப்பட விளக்கம் எல்லாத்தையும் கேட்டு, ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணி ஷூட் கிளம்பிட்டோம்.

“ சிம்புன்னா என்னன்னு  தெரியுமா?”

ஓர் இயக்குநரா எப்படி எனக்கு சப்போர்ட் பண்ணுனாரோ அதே மாதிரி நடிகராகவும் எனக்கு ரொம்ப நல்லா ஒத்துழைச்சார் சுந்தர்.சி சார். பயம் காட்றவங்களைவிட பயப்படுறவங்கதான் பயங்கரமா நடிச்சிருப்பாங்க. ஏன்னா, பயப்படுறவங்களைப் பார்த்துத்தான் ஆடியன்ஸுக்கு பயம் வரும். இந்த வேலையை இந்தப் படத்தில் சாக்‌ஷி ரொம்ப நல்லாவே பண்ணியிருக்காங்க. இந்தப் படத்துல இருக்கிற இன்னொரு முக்கியமான நடிகை, நடிகர் கொட்டாச்சியோட பொண்ணு மானஸ்வி. தம்மாத்தூண்டு இருந்துக்கிட்டு அந்தப் பொண்ணு என்னமா எக்ஸ்பிரஷன்ஸ் கொடுக்குது தெரியுமா, சான்ஸே இல்லை. இந்தப் படத்தில் மானஸ்விக்குப் பெரும்பங்கு உண்டு. விமலா ராமன், தன்ஷிகாவுக்கும் சிறப்பான கேரக்டர்கள் இருக்கு. காமெடிக்கு யோகி பாபுவும் இருக்கும்போது படம் சூப்பராத்தானே இருக்கும்?’’

‘` ’ஏமாலி’ படத்தில் சமுத்திரக்கனி; இந்தப் படத்தில் சுந்தர்.சி-னு அடுத்தடுத்து இயக்குநர்களை இயக்குறீங்க; இது சவாலா, சுலபமா?’’

``ஓர் இயக்குநர் ஹீரோவாகும்போது அவருக்குள்ளே பெரிய குழப்பமே இருக்கும். பல படங்கள் பண்ணி, ஒரு லெவலுக்குப் போன பிறகுதான், அவர் நடிக்க வந்திருப்பார். அந்தச் சமயத்தில் இன்னொரு இயக்குநர் பண்ற எல்லா விஷயமுமே அவருக்குத் தப்பாத்தான் தெரியும். ‘என்னடா ஷாட் வைக்கிறான்; என்ன சீன் இது’ன்னு எல்லா விஷயத்திலும் அவரை இயக்குநராகத்தான் பார்த்திட்டிருப்பார். ஒரு நடிகரா செட்டுக்குள்ள போனதுக்கு அப்புறம், தனக்குள்ளே இருக்கிற இயக்குநரைக் கொஞ்சம் அடக்கி வைக்கணும். அப்படிப் பண்ணினால்தான் ஹீரோவாகவும் ஒரு இடத்துக்குப் போக முடியும்.

 வி.இசட்.துரை
வி.இசட்.துரை

அப்படி நான் இயக்கிய ரெண்டு இயக்குநர்களும், என் செட்டில் நடிகராகத்தான் இருந்தாங்க.சமுத்திரக்கனி எனக்குத் தம்பி மாதிரி. அவன் ’ஏமாலி’ ஸ்பாட்டில் ஒரு நடிகராகத்தான் இருந்தான். அதனால எனக்கு எந்த வித்தியாசமும் தெரியலை. அதே மாதிரி சுந்தர்.சி சாரும், இந்தப் படத்தில் தனக்கான வேலை என்ன என்பதில் தெளிவாக இருந்தார். அவர் அப்படி இருக்கிறதனாலதான், 20 படங்கள்கிட்ட ஹீரோவா நடிக்க முடிஞ்சிருக்கு. இது எல்லாத்துக்கும் மேல, நாம அந்த நடிகருக்கு நம்பிக்கை கொடுத்திட்டால் எந்தப் பிரச்னையும் இல்லை. அவங்க அவங்களோட ரோலில் இருப்பாங்க.’’

“ சிம்புன்னா என்னன்னு  தெரியுமா?”

‘`அடுத்து சிம்பு படம்தானா..?’’

``இல்லை. விஜய் ஆண்டனிக்கு ஒரு கதை சொல்லி ஓகே வாங்கியிருக்கேன். அதுதான் என்னோட அடுத்த படம். ‘ஊரே அலறுது’ படத்தை இப்போ எடுக்கிற ஐடியா இல்லை. ஏன்னா, ’தொட்டிஜெயா’ படத்தோட இரண்டாம் பாகத்தை எடுக்கணும்னு சிம்பு தீவிரமா இருக்கார். அதுக்கான கதையும் ஃபைனல் ஆகிடுச்சு. விஜய் ஆண்டனி படத்துக்கு அப்புறம் சிம்பு படம்தான்.’’

“ சிம்புன்னா என்னன்னு  தெரியுமா?”

``சமீபமா சிம்பு மேல் பல குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறாங்க; அதைப்பற்றி என்ன நினைக்கிறீங்க?’’

``நாங்க `தொட்டிஜெயா’ படம் பண்ணும்போது தான் `வல்லவன்’ படத்தோட ஷூட்டிங்கும் போச்சு. இந்த ரெண்டு படத்துக்கும் ஆர்.டி.ராஜசேகர்தான் கேமராமேன். அவர் ஒரு நாள் என்கிட்ட, ‘தலைவா... இந்தப் படத்தோட ஷூட்டிங்கிற்கு மட்டும்தான் சிம்பு கரெக்டான டைமுக்கு வர்றார். `வல்லவன்’ படமும் இவரோடதுதான்; அதுல அவர் டைரக்டர். ஆனால், அந்தப் பட ஷூட்டிங்கிற்கு லேட்டாத்தான் வர்றார். எனக்கு இதைப் புரிஞ்சுக்கவே முடியலை’ன்னு சொன்னார். இதுதான் சிம்பு.’’