Published:Updated:

``ஒரே நாளில் 4,500 ஓவியங்கள்!" - கொரோனா போட்டி வின்னர்களை அறிவிக்கும் வசந்தபாலன்

இயக்குநர் வசந்தபாலன்
இயக்குநர் வசந்தபாலன்

பிரதமர் அறிவித்த ஒரு நாள் சுய ஊரடங்கில், தான் நடத்திய ஓவியப்போட்டி குறித்து நம்மிடம் பகிர்ந்துகொள்ளும் இயக்குநர் வசந்தபாலன், அந்தப் போட்டியின் முடிவுகளையும் விகடன்.காமில் அறிவித்திருக்கிறார்...

மார்ச் 22-ம் தேதி. மக்கள் சுய ஊரடங்கு நடைபெற்ற நாள். அன்று இயக்குநர் வசந்தபாலன், வீட்டிலேயே இருக்கும் குழந்தைகளுக்கு ஓவியப்போட்டி ஒன்றை நடத்த இருப்பதாகத் தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். அந்த அறிவிப்புக்கு மக்கள் மத்தியில் செம வரவேற்பு. அந்த ஓவியப் போட்டிக்கான எண்ணம் எப்படி வந்தது, மொத்தம் எத்தனை ஓவியங்கள் வந்துசேர்ந்தன, அவற்றை தேர்ந்தெடுக்க நடைபெற்ற வழிமுறைகள் என்ன, வெற்றியாளர்கள் யார் என்பதைப் பற்றி இயக்குநர் வசந்தபாலனிடம் கேட்டோம்.

``கொரோனா காரணமா குழந்தைகளுக்கு விடுமுறை கொடுத்து பள்ளிகளையெல்லாம் மூடச் சொல்லியிருந்தாங்க. பரீட்சைகளை எல்லாம் அப்போ தள்ளிவைக்கிறதா இருந்தது. அந்த சமயத்துலதான் மக்கள் ஊரடங்கு அறிவிச்சாங்க. இப்படி ஒரு நிகழ்வு வரலாற்றுல முக்கியமானதுனு நினைக்கிறேன். பரீட்சை எப்போனு தெரியாததுனால, என் குழந்தைகளைப் படிக்கச் சொல்லி என் மனைவி துன்புறுத்திட்டு இருந்தாங்க. இதே மாதிரிதான் எல்லோருடைய வீட்டிலேயும் குழந்தைகளைத் துன்புறுத்துவாங்கன்னு யோசனை வந்தது. அப்போ, இந்த நாள்கள்ல அவங்களுக்கு கலை மூலமா ஒரு விடுதலையை ஏற்படுத்திக் கொடுக்கணும்னு தோணுச்சு. எவ்வளவு இக்கட்டான சூழல் வந்தாலும் மனிதன் ஓவியம், கவிதை, இசைனு ஏதோ ஒரு கலையின் படிமத்தின் மூலமா தன்னைத்தானே விடுதலை செஞ்சுக்கிறான். அதனால, கலை மூலமா விடுதலைனு வேணும்னு நினைச்சு ஒரு ஓவியப்போட்டி அறிவிக்கலாம்னு தோணுச்சு.

இயக்குநர் வசந்தபாலன்
இயக்குநர் வசந்தபாலன்

`கொரோனா'... இந்த வார்த்தை வரலாற்றுப் பக்கங்கள்ல இடம் பிடிச்சிருச்சு. அதனால, `கொரோனாவை வெல்வோம்'ங்கிற தலைப்புல அந்தப் போட்டி இருக்கலாம்னு முடிவு பண்ணேன். மார்ச் 22-ம் தேதி காலை 9 மணியில இருந்து 23-ம் தேதி காலை 10 மணி வரைக்கும் வர்ற ஓவியங்கள் மட்டுமே போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படும்னு 21-ம் தேதி அறிவிச்சேன். 100-க்குள்ள வரும்னு எதிர்பார்த்தேன். ஆனா, 4,500 ஓவியங்கள் என் மெயிலுக்கு வந்ததைப் பார்த்து அதிர்ச்சியாகிட்டேன். நான் அறிவிச்ச கொஞ்ச நேரத்துலேயே புதுக்கோட்டை கலெக்டர், திருநெல்வேலி டிஜிபி இவங்க எல்லோரும் கூப்பிட்டு, `இந்த ஐடியா நல்லாயிருக்கு. நாங்களும் எங்க மாவட்டத்துல பண்றோம்'னு சொன்னாங்க. இலங்கையில இருந்தும்கூட மெயில் வந்துச்சு. என்னுடைய புரொஃபசர்கள், நண்பர்கள் சிலர் இந்தப் போட்டியில ஜெயிக்கிறவங்களுக்கு பரிசுத்தொகை கொடுக்க முன்வந்தாங்க.

அந்த 4,500 ஓவியங்களை ஒரே நாளில் நான் மட்டுமே டவுன்லோடு பண்ண முடியாதுல. அப்போ, அமெரிக்காவுல சாஃப்ட்வேர் இன்ஜினீயரா இருக்கிற என் நண்பன்கிட்ட சொன்னேன். அப்போ அவன் இதுக்கு ஒரு புரோகிராம் எழுதி அந்த மெயில்ல இருந்த ஓவியங்களையும் மத்த விவரங்களையும் தனியா பிரிச்சு டவுன்லோடு பண்ணிக் கொடுத்தான். என் உதவியாளர்களும் இந்த முயற்சிக்கு உறுதுணையா இருந்தாங்க. என்னுடைய புரொஃபசர் ஜெயக்குமார், ``4,500 ஓவியங்கள்ல மூணு பரிசு கொடுத்தா சரியா இருக்காது. எல்.கே.ஜி முதல் மூன்றாம் வகுப்பு வரை ஒரு பிரிவு, நான்காம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை ஒரு பிரிவு, ஏழாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை ஒரு பிரிவுனு பிரிச்சுக்கலாம்"னு சொன்னார். அப்புறம், ஒவ்வொரு பிரிவுக்கும் நான்காம் பரிசு வரை கொடுக்கலாம்னு முடிவு பண்ணோம். இந்த அளவுக்கு பெரிய விஷயமா இது மாறினதும் ஓவியர் மருது சார்கிட்ட இதைப் பத்தி சொன்னேன். அவரும் சம்மதிச்சார். என் நண்பர்களும் ஓவியர்களுமான குலசேகரன், சீராளன் ஜெயந்தன் இவங்க ரெண்டு பேரும் அந்த 4,500 ஓவியங்கள்ல இருந்து ஒவ்வொரு பிரிவுக்கும் 30 ஓவியங்களைத் தேர்ந்தெடுத்து மருது சாருக்கு அனுப்பினாங்க. அப்புறம், அதுல சிறந்த ஓவியங்களை மருது சார் தேர்ந்தெடுத்திருக்கார். முதல் பரிசுக்கு 5,000 ரூபாய், இரண்டாம் பரிசுக்கு 3,000 ரூபாய், மூன்றாம் பரிசுக்கு 2,000 ரூபாய், நான்காம் பரிசுக்கு1,000 ரூபாய்னு பணமாகவோ பரிசுக் கூப்பனாகவோ வழங்கப்படும்" என்றார் மகிழ்ச்சியுடன். அந்தப் போட்டியின் முடிவுகள் இங்கே...

எல்.கே.ஜி முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள பிரிவின் முடிவுகள்:

முதல் பரிசு : மிருதுளா விக்ரம் (ஒன்றாம் வகுப்பு), சுங்குவார்சத்திரம்

``ஒரே நாளில் 4,500 ஓவியங்கள்!" - கொரோனா போட்டி வின்னர்களை அறிவிக்கும் வசந்தபாலன்
மிருதுளா விக்ரம்

இரண்டாம் பரிசு : நிமிலன் (ஒன்றாம் வகுப்பு), சென்னை

``ஒரே நாளில் 4,500 ஓவியங்கள்!" - கொரோனா போட்டி வின்னர்களை அறிவிக்கும் வசந்தபாலன்
நிமிலன்

மூன்றாம் பரிசு : ஆண்டர்சன் பால் (ஒன்றாம் வகுப்பு), கேரளா

``ஒரே நாளில் 4,500 ஓவியங்கள்!" - கொரோனா போட்டி வின்னர்களை அறிவிக்கும் வசந்தபாலன்
ஆண்டர்சன் பால்

நான்காம் பரிசு : சாலமன் மேக்ஸிமஸ் (ஒன்றாம் வகுப்பு), சென்னை

``ஒரே நாளில் 4,500 ஓவியங்கள்!" - கொரோனா போட்டி வின்னர்களை அறிவிக்கும் வசந்தபாலன்
சாலமன் மேக்ஸிமஸ்

நான்காம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை உள்ள பிரிவின் முடிவுகள்:

முதல் பரிசு : தக்‌ஷின் சாய்ராம் (ஆறாம் வகுப்பு ), பல்லாவரம், சென்னை.

``ஒரே நாளில் 4,500 ஓவியங்கள்!" - கொரோனா போட்டி வின்னர்களை அறிவிக்கும் வசந்தபாலன்
தக்‌ஷின் சாய்ராம்

இரண்டாம் பரிசு : ஷிவ் வதினா (ஐந்தாம் வகுப்பு), சென்னை

``ஒரே நாளில் 4,500 ஓவியங்கள்!" - கொரோனா போட்டி வின்னர்களை அறிவிக்கும் வசந்தபாலன்
ஷிவ் வதினா

மூன்றாம் பரிசு : (ஐந்தாம் வகுப்பு)

``ஒரே நாளில் 4,500 ஓவியங்கள்!" - கொரோனா போட்டி வின்னர்களை அறிவிக்கும் வசந்தபாலன்
அபர்ணா

நான்காம் பரிசு : உதய் சரண் (நான்காம் வகுப்பு), சென்னை

``ஒரே நாளில் 4,500 ஓவியங்கள்!" - கொரோனா போட்டி வின்னர்களை அறிவிக்கும் வசந்தபாலன்
உதய் சரண்

ஏழாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள பிரிவின் முடிவுகள்:

முதல் பரிசு : ஶ்ரீவத்ஸ் தேஜ்குமார் (ஏழாம் வகுப்பு), சென்னை

``ஒரே நாளில் 4,500 ஓவியங்கள்!" - கொரோனா போட்டி வின்னர்களை அறிவிக்கும் வசந்தபாலன்
ஶ்ரீவத்ஸ் தேஜ்குமார்

இரண்டாம் பரிசு : ஹரிணி (ஏழாம் வகுப்பு), தஞ்சாவூர்

``ஒரே நாளில் 4,500 ஓவியங்கள்!" - கொரோனா போட்டி வின்னர்களை அறிவிக்கும் வசந்தபாலன்
ஹரிணி

மூன்றாம் பரிசு: ஆர். பாரத் (ஏழாம் வகுப்பு)

``ஒரே நாளில் 4,500 ஓவியங்கள்!" - கொரோனா போட்டி வின்னர்களை அறிவிக்கும் வசந்தபாலன்
ஆர்.பாரத்

நான்காம் பரிசு : நந்திகா (பத்தாம் வகுப்பு)

``ஒரே நாளில் 4,500 ஓவியங்கள்!" - கொரோனா போட்டி வின்னர்களை அறிவிக்கும் வசந்தபாலன்
நந்திகா
அடுத்த கட்டுரைக்கு