சினிமா
Published:Updated:

“அஜித் கூப்பிட்டா ஆட்டத்துக்கு ரெடி!”

மன்மத லீலை படத்தில்...
பிரீமியம் ஸ்டோரி
News
மன்மத லீலை படத்தில்...

எப்பவும் நான் நகைச்சுவையை ரொம்ப உயர்வாக நினைச்சு வந்திருக்கிறேன். ‘சென்னை 28’லிருந்து எனது படங்களில் அடிநாதம் காமெடியாகத்தான் இருக்கும்.

“இளைஞர்களுக்கான கலர்புல், ஜாலி, கேலி, காதல்களுக்கான கொண்டாட்டம்தான் ‘மன்மத லீலை.’ படத்தின் பெயரைக் கேட்டதுமே ஒரு ஹாலிடே உற்சாகம் உள்ளுக்குள்ளே உதைக்குதில்ல... அதுதான் படத்தோட பக்கா பேக்கேஜ். கடைசியா எந்த இடத்தில் சிரிச்சோம்னு மறந்துபோற அளவுக்கு உங்களைச் சிரிக்க வெச்சுட்டே இருக்கும். நிஜமாகவே ஒவ்வொரு படம் ஆரம்பிக்கும்போதும் மக்களுக்கு என்ன பிடிக்கும், எப்படிச் சொல்லணும்னு ஒரு சின்னத் தயக்கத்திற்குப் பிறகுதான் தொடங்குவோம். பிறகு மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. உண்மையில் ஆடியன்ஸ்தான் தெய்வம் மாதிரி. தெய்வம் என்ன நினைக்குதுன்னு நம்ம யாருக்கும் தெரியாது. எல்லோரும் ‘மாநாடு’ படத்தைக் கொண்டாடிட்டாங்க. அதிலேயே உட்கார்ந்திட்டிருக்கமுடியாது. இது கொஞ்சமாய் அடல்ட் வகைதான். ஆனால் பார்க்கிறதுக்கு எந்த இடைஞ்சலும் வராது” அருவியாகக் கொட்டுகிறார் இயக்குநர் வெங்கட்பிரபு. ஒளி குறைந்து குளிர் கூடியிருக்கிற காபி ஹவுசில் கூடிப் பேசினோம்.

“அஜித் கூப்பிட்டா ஆட்டத்துக்கு ரெடி!”
“அஜித் கூப்பிட்டா ஆட்டத்துக்கு ரெடி!”

“சத்தம் போடாமல் ‘மன்மதலீலை'ன்னு வேற பக்கம் இறங்கிட்டீங்க?”

“ ‘மாநாடு’ தள்ளித் தள்ளிப் போய்கிட்டே இருந்தது. நடுவில் ஒண்ணு செய்து பார்க்கலாம்னு எண்ணம் வர, என் அசிஸ்டன்ட் மணிவண்ணன்கிட்டே ஒரு ஐடியா சொன்னேன். அவன் அதையே ஒரு கதையாக்கிட்டு வந்தான். அருமையாக இருந்தது. பழைய பாக்யராஜ் படத்தோட வடிவம். விரசம் எட்டிப் பார்க்காமல் ரசிச்சுப் பார்க்கிற மாதிரி இருக்கும். ‘மாநாடு’ படத்தோட இதை ஒப்பிட முடியாது. இது இன்னொரு ஜானர். இங்கே ஒரு பெரிய ஹீரோவை வச்சு செய்த பிறகு அடுத்தும் அப்படித்தான் எதிர்பார்ப்பாங்க. என்னால் எப்படியும் ஒர்க் பண்ண முடியும். அசோக் செல்வன் முத்தம் கொடுக்கிற டீஸர் பார்த்ததும் இளைஞர்களுக்குப் பிடிச்சுப் போச்சு. பலர் ‘என்னங்க, மக்களைக் கெடுக்குறாங்களே’ன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. கத்தியில் குத்தி மூஞ்சியைத் தரையில் தேய்ச்சு, வாயை உடைச்சுக் கொலை பண்ணினால் உட்கார்ந்து ரசிக்கிறாங்க. இளமையாக, கிளாமரே இல்லாமல் ஜாலியாக முத்தம் கொடுத்தால் சண்டைக்கு வர்றாங்க. வன்முறையைத் தவிர்த்து காதலைப் பரப்புவோம்னு இதில் முடிவு பண்ணியிருக் கோம்.

டீஸரில் வருமே அந்த அளவுக்கு மட்டும்தான் படத்தில் முத்தங்கள் இருக்கு. மீதியெல்லாம் இலைமறை காயாகத்தான் இருக்கும். அசோக் செல்வன் காலேஜ் படிக்கிற சமயமும், ஒரு நல்ல வேலையில் இருக்கிற தருணத்தில் இருக்கிற அவரது காதல்களையும் இந்தப் படம் பேசும். ஜாலியாகப் பெண்களைக் கவர்வதற்காகச் செய்கின்ற வேலைகள் கடைசியில் என்ன ஆகிறதுன்னு சொல்லியிருக்கேன்.

எப்பவும் நான் நகைச்சுவையை ரொம்ப உயர்வாக நினைச்சு வந்திருக்கிறேன். ‘சென்னை 28’லிருந்து எனது படங்களில் அடிநாதம் காமெடியாகத்தான் இருக்கும். அசோக் செல்வன் நன்றாக நடித்திருக்கிறார். ஸ்ம்ருதி வெங்கட், ரியா சுமன், சம்யுக்தா ஹெக்டேன்னு அசோக் செல்வன் வாழ்க்கையில் வரும் மூன்று பெண்கள். நமக்கு எப்போதும் யுவன்தான் பெஸ்ட். சின்னப்படம் என்பதால் இதில் பிரேம்ஜி மியூசிக் போட்டுட்டான்.”

“அஜித் கூப்பிட்டா ஆட்டத்துக்கு ரெடி!”
“அஜித் கூப்பிட்டா ஆட்டத்துக்கு ரெடி!”
“அஜித் கூப்பிட்டா ஆட்டத்துக்கு ரெடி!”

“நீங்க ‘மாநாடு’ வெற்றியை எதிர்பார்த்தீங்களா?”

“இவ்வளவு பெரிய வெற்றியை எதிர்பார்க்கலை. ஆனா நிச்சயம் வெற்றிபெறும்னு நினைச்சேன். என்னுடைய கரியரில் மாநாடுதான் பெரிய ஹிட். அந்தப் படம் வெற்றிக்குப் பின்னாடிதான் இதோ அடுத்து ‘நாக சைதன்யா’ படம் பண்றேன். மாநாடு படத்தை இந்தியில் பண்றேன். இந்த ‘டைம் லூப்’ விஷயத்தை மட்டும் மக்கள் நம்பலைன்னா என்ன ஆகியிருக்கும் பாருங்க. கடவுளுக்குத்தான் நன்றி சொல்லணும். எத்தனையோ பேருடைய பாராட்டுகள், வாழ்த்து, தட்டிக்கொடுத்தல்கள் இதில் நிறைய நடந்திருக்கு. எனக்கு ஒரு நல்ல வெற்றி அவசியமாக இருந்த நேரம்.”

“நீங்களும் அஜித்தும் சேர்ந்து படம் பண்ணப் போறீங்கன்னு செய்திகள் வந்துகிட்டே இருக்கே?”

“எனக்கும் அவருக்கும் எப்பவும் நல்ல கம்யூனிகேஷன் இருந்துக்கிட்டே இருக்கும். ரெண்டு பேருக்கும் பேச்சுவார்த்தைகள் வரை வந்து அடுத்தடுத்து வேற படத்திற்குப் போயிருப்போம். ‘மங்காத்தா’ கூட அவராகவே கூப்பிட்டுதான் பண்ணினேன். ஒரு சமயம் நெகட்டிவ் ரோல் பண்ணணும்னு ஆர்வமாக இருந்தார். நாங்க சொல்வதையெல்லாம் படத்தில் செய்தார். இப்ப ‘விஸ்வாசம்’ படத்திற்குப் பிறகு அதிகம் ஃபேமிலி சென்டிமென்ட் பக்கம் போய்க்கிட்டு இருக்கார். இப்ப ‘வலிமை’ வரைக்கும் அது தொடர்ந்து கிட்டே இருக்கு. அண்ணே எப்ப கூப்பிட்டாலும் ஆட்டத்திற்கு ரெடியாக இருப்பேன். ஏதோ அண்ணன் தம்பிகிட்டே வேலை பார்க்கிற மாதிரி அவ்வளவு சுதந்திரமாக இருக்கும்.”

“அஜித் கூப்பிட்டா ஆட்டத்துக்கு ரெடி!”
“அஜித் கூப்பிட்டா ஆட்டத்துக்கு ரெடி!”
“அஜித் கூப்பிட்டா ஆட்டத்துக்கு ரெடி!”

“அஜித், சூர்யா, கார்த்தி, சிம்புன்னு செய்திட்டு அடுத்த வரிசைல செய்யலையே!”

“விஜய் சார்கூட படம் பண்ணணும். சார் இதுவரைக்கும் பண்ணாத ஒரு கதையை ரெடி பண்ணிவிட்டால் அவரை அணுகிடலாம். தனுஷ் பாருங்க, பக்கா கமர்சியல் படம் பண்ணுகிறார். சட்னு ‘அசுரன்’னு மாறி விடுகிறார். விஜய் சேதுபதியெல்லாம் வித்தியாசமாக எதையாவது செய்துகிட்டே இருக்கார். விஷாலை வேறுமாதிரி பயன்படுத்தலாம். எனக்கு ரஜினி, கமலை டைரக்ட் பண்ண ஆசையிருக்கு. இப்ப இருக்கிற ஹீரோக்கள் பலரும் எனக்கு நண்பர்கள்தான். மாமா, மச்சான்னு பழகிக் கூப்பிட்டுக்குவோம். அதுதான் நம்ம மச்சான்தானேன்னு கூப்பிட மறந்திடுறாங்களோ என்னவோ!”

“சினிமாவுக்கு வந்து 15 வருஷத்திற்கு மேலே ஆச்சு! தெரிந்துகொண்ட படிப்பினைகள் என்ன?”

“இங்கே நிரந்தர நண்பனும் கிடையாது. எதிரியும் கிடையாது. இங்கே நேரம் முக்கியம்னு நினைக்கிறேன். சச்சினைவிட பேட்ஸ்மேன்கள் இருந்தாங்க. திறமையோடு, நல்ல நேரம் அவருக்குத்தான் இருந்தது. ‘சென்னை-28’ பெரிய ஹிட் ஆச்சு. அதற்கடுத்து ‘சரோஜா’ படமும் ஹிட். நான் என்ன எடுத்தாலும் ஹிட்டாகும் போலன்னு நினைச்சிட்டேன். ‘நாம பயங்கரமான ஆளு.. நாமதான் இனிமேல் சினிமா’ன்னு தோண ஆரம்பித்துவிட்டது. அடுத்த படம் ‘கோவா’ சரியா போகலை. இங்கே இருக்கிறவங்க எல்லோரையும்விடப் பெருசு சினிமாதான். அதுதான் நீங்க இண்டஸ்ட்ரியில் இருக்கணுமா கூடாதான்னு முடிவு பண்ணுது. அதற்குள் ஆடினால் தலையில் இரண்டு கொட்டு கொட்டி உட்கார வைக்குது. ‘அடுத்த பத்து வருஷத்துக்கு நான்தான்’னு யாரும் இங்கே சொல்லக்கூட முடியாது. ஆயிரத்தெட்டு கஷ்டங்களோடு வீட்டிலிருக்கிற மக்களை சந்தோஷப்படுத்தணும்ங்கிறதுதான் என்னோட என்றைக்குமான ஆசை.”