Published:Updated:

``டைரக்டர் இல்ல... இனி, சினிமால பணமும் டிமாண்டும் அந்த வேலைக்கு மட்டும்தான்!'' - வெங்கட் பிரபு

வெங்கட்பிரபு

அந்த சிரிப்பும் சந்தோஷமும் அவருடன் சில நிமிடங்கள் பேசினாலே நமக்கும் தொற்றிக்கொள்ளும். வெற்றி, தோல்வி என எது வந்தாலும் போனாலும் பார்ட்டி கொண்டாடியே பாப்புலர் ஆனவர் வெங்கட்பிரபு. அவரிடம் பேசினேன்!

``டைரக்டர் இல்ல... இனி, சினிமால பணமும் டிமாண்டும் அந்த வேலைக்கு மட்டும்தான்!'' - வெங்கட் பிரபு

அந்த சிரிப்பும் சந்தோஷமும் அவருடன் சில நிமிடங்கள் பேசினாலே நமக்கும் தொற்றிக்கொள்ளும். வெற்றி, தோல்வி என எது வந்தாலும் போனாலும் பார்ட்டி கொண்டாடியே பாப்புலர் ஆனவர் வெங்கட்பிரபு. அவரிடம் பேசினேன்!

Published:Updated:
வெங்கட்பிரபு

``வெங்கட் பிரபு அண்ட் டீம்னாலே பார்ட்டிகள்தான் ஞாபகம் வரும். இந்த லாக்டெளன்ல பார்ட்டிகளை ரொம்பவே மிஸ் பண்ணுவீங்களே?'

``அதெல்லாம் இல்ல. விர்ச்சுவல் பார்ட்டீஸ் நடந்துட்டுதான் இருக்கு. என் வீட்லயிருந்து நான் வீடியோ கால் மூலமா சியர்ஸ் சொல்லுவேன். அங்கே இருந்து பசங்க ஒவ்வொருத்தவங்களும் சியர்ஸ் சொல்லுவாங்க. சியர்ஸ்ல ஆரம்பிச்சு அப்படியே பல மணி நேரம், பல கதைகள் போகும். இதுவும் ஒரு மாதிரி நல்லாத்தான் இருக்கு.''

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`` `லாக்கப்' படத்துல வாணி போஜன், பூர்ணா, ஈஸ்வரி ராவ்னு பெண்கள் புடைசூழ வருவீங்க போலயிருக்கே?''

வெங்கட் பிரபு - சார்லஸ்
வெங்கட் பிரபு - சார்லஸ்

``படத்துல எனக்கு நிறைய காம்பினேஷன் சீன்ஸ் ஈஸ்வரி ராவ் மற்றும் பூர்ணா மேடம் கூடத்தான். அடிப்படையாவே ரெண்டு பேரும் நல்ல நடிகர்கள். என்னோட கேரக்டரும் ரொம்ப ஸ்ட்ராங்கா இருந்ததுனால நடிக்குறதுக்கான ஸ்கோப் நிறைய இருந்தது. நான், ஒரு விஷயத்தை குழப்பி பிளாக்மெயில் பண்ணி பூர்ணாவை வேலை பண்ண வைக்குற மாதிரி சீன் வரும். அந்த சீன்ல என்னோட நடிப்பை மக்கள் பாராட்டுவாங்கனு நினைக்குறேன். ஏன்னா, இந்த சீன்ல நான் மட்டும் பேசிக்கிட்டே இருப்பேன். பூர்ணா ரியாக்‌ஷன் மட்டுமே சூப்பரா கொடுத்துட்டே இருப்பாங்க. வாணி போஜனும் படத்துல சிறப்பா நடிச்சிருக்காங்க. 35 நாள்ல `லாக்கப்' படத்தோட ஷூட்டிங்கை முடிச்சிட்டோம்.''

`` `லாக்கப்' படம் தியேட்டர்ல ரிலீஸ் ஆகலையேன்ற வருத்தம் இருக்கா?''

நிதின் சத்யா, வைபவ் மற்றும் வெங்கட் பிரபு
நிதின் சத்யா, வைபவ் மற்றும் வெங்கட் பிரபு

``ஒரு டைரக்டர் படத்தோட ஸ்க்ரிப்ட்டை எழுதும்போதே, ஆடியன்ஸ் இந்த இடத்துல கைதட்டி விசில் அடிப்பாங்க, அந்த சீனுக்கு ரியாக்‌ஷன் இப்படி இருக்கும்னு யூகிச்சு எழுதுவாங்க. முக்கியமான காட்சிகள்ல ஆடியன்ஸோட ரெஸ்பான்ஸ் எப்படியிருக்கும்னு நினைச்சிக்கிட்டே இருப்போம். படம் ரிலீஸூக்குப் பிறகு நாங்க நினைச்ச மாதிரியே ஆடியன்ஸூம் ரெஸ்பான்ஸ் பண்ணிட்டா டைரக்டரா ஒரு ஓரமா நின்னு பார்க்குறப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கும். இதெல்லாம் ஓ.டி.டி-ல ரிலீஸாகுறப்போ டைரக்டரால பார்க்க முடியாது. இருந்தும், தியேட்டர்ல கிடைக்குற ரீச்சைவிடவும் ஓ.டி.டி-ல கிடைக்கிற ரீச் அதிகம். அந்த விதத்துல எங்களோட படத்தை நிறைய பேர் பார்க்க சான்ஸ் இருக்குனு நினைக்குறப்போ ஹேப்பியா இருக்கு.''

``உங்களுடைய உதவி இயக்குநர் பா.இரஞ்சித் உங்களோட டச்ல இருக்காரா?''

பா.இரஞ்சித்
பா.இரஞ்சித்

``ரஞ்சித் நல்ல க்ரியேட்டர், அற்புதமான ஆர்டிஸ்ட். என்னோட நண்பர் பிலிப் மூலமாதான் ரஞ்சித்தை தெரியும். அவருக்கு லிங்குசாமி சார்கிட்ட அசிஸ்டென்ட்டா சேரணும்னுதான் ஆசை. ஆனா, அவரோட தலையெழுத்து என்கிட்ட வேலை செய்யணும்னுதான் இருந்திருக்கு. அப்பவே `அட்டகத்தி', `மெட்ராஸ்' கதையையெல்லாம் என்கிட்ட சொல்லியிருக்கார். இப்போ, ஆர்யாவை வெச்சு எடுத்துட்டிருக்குற படம்கூட ரஞ்சித் அப்ப சொன்ன ஐடியாதான். ரஞ்சித் என்னோட அசிஸ்டென்ட்டா இருந்தவர்னு சொல்றதுல நான் ரொம்பப் பெருமைப்படுறேன். தலைவரோட ரெண்டு படம் பண்ணியிருக்கார். அவரோட இன்னும் தொடர்புல இருக்கேன். என்னோட சமகால டைரக்டர்கள்கூட டிராவல் ஆகுறதை விடவும் என்னோட ஜூனியர்ஸ், இப்போ வர்ற இளம் இயக்குநர்களோட டிராவல் ஆகுறப்போதான் புதிய ஐடியாஸ் வரும். ஆரோக்கியமான போட்டி எப்பவும் இருக்கணும்னு நினைக்குறேன். அப்போதான் வளர முடியும்.''

``சினிமா உலகம் ரொம்ப வேகமா மாறிட்டே இருக்கே... இந்த மாற்றங்களை எப்படிப் பார்க்குறீங்க?''

``மாற்றங்களை இன்னும் நிறைய பார்க்கப் போறோம். மாற்றம் ஒன்றே மாறாதது. `ஒரே நாள்ல ரெண்டு இடத்துல எஸ்பி.முத்துராமன் சாரோட படத்தோட ஷூட்டிங் நடக்கும்'னு பஞ்சு சார் சொல்லி கேட்டிருக்கேன். ஆனா, இப்போ அப்படி நடக்குறதுக்கான வாய்ப்பே இல்லை. அந்த காலத்துல பஞ்சு சார் மாதிரியான ரைட்டர்ஸ் இருந்தாங்க. அவங்க டைரக்டர்களோட ப்ரஷரை, வொர்க் லோடை குறைச்சாங்க. இப்போ வர்ற இளைஞர்கள் எல்லாருமே கதை எழுதி முடிச்சிட்டு டைரக்ஷன் பண்ணணும்கிற நினைப்புலயே வர்றாங்க. கதையாசிரியரா மட்டுமே உள்ள வர யாரும் விரும்புறது இல்ல. ஆனா, இனி சினிமா உலகத்துல ரைட்டர்களுக்குத்தான் டிமாண்ட் அதிகம் ஆகப்போகுது. ஒரு படம் மற்ற மொழிக்கு ரீமேக் ஆகுறப்போ ரைட்டருக்குதான் ஷேரிங் வருமே தவிர டைரக்டருக்கு வராது. இதைப் புரிஞ்சிக்கிட்டாலே போதும். ஒரு கதாசிரியர் எழுதுற ஒரு கதை ஹிட்டாகிட்டா எல்லா மொழிக்கும் ஈஸியா எடுத்துட்டு போயிடலாம். அதனால நான் இப்போ நல்ல ரைட்டரைத்தான் தேடிட்டு இருக்கேன். நிறைய டைரக்டர் மற்றும் தயாரிப்பாளர்களும் நல்ல எழுத்தாளர்களைத்தான் தேடிட்டு இருக்காங்க."

``வெங்கட் பிரபு வெறும் தமிழ்ல மட்டும்தான் படங்கள் பண்ணுவாரா?''

``சில வாய்ப்புகள் இந்தி மற்றும் தெலுங்குல வந்தது. சில காரணங்களால் பண்ண முடியல. மற்ற மொழி படத்தை டைரக்‌ஷன் பண்ணுறப்போ அங்கே இருக்குற டயலாக் ரைட்டர்கிட்ட காட்சியை சொல்லி, அவர் நடிகர்கள்கிட்ட சொல்லி, அப்புறம் அந்தக் காட்சியை எடுக்குற ப்ராசஸ் பெருசா தெரிஞ்சது. `எப்படி அடுத்த மொழி படங்களை டைரக்‌ஷன் பண்றீங்க'னு பிரபுதேவா மாஸ்டர்கிட்ட கூட கேட்டிருக்கேன். `அதெல்லாம் ஒன்னுமில்ல பிரபு. ஈஸியா பண்ணிடலாம். எல்லாம் சரியா செட் பண்ணி வெச்சிருப்பாங்க. ரியாக்‌ஷன் மட்டும் வாங்கிட்டா போதும்'னார். நிறைய ஐடியாஸ் கூட கொடுத்திருக்கார். பார்ப்போம்.''

`` `பார்ட்டி' படம் என்னதான் ஆச்சு, ஓடிடில எதிர்பார்க்கலாமா?''

பார்ட்டி டீம்
பார்ட்டி டீம்

``நிஜமா எனக்குத் தெரியல. ஃபைனான்ஸ் பிரச்னை கொஞ்சம் இருக்கு. டி.சிவா சார்தான் படத்தை தயாரிச்சார். ஃபிஜி தீவுல படத்தோட ஷூட்டிங் நடந்ததுனால அந்த கவர்மென்ட் கூட சேர்ந்து சிவா சார் வொர்க் பண்ணார். நிறைய விஷயங்கள் இருக்கு. இதெல்லாம் சுலபமா முடிஞ்சிருச்சுனா படம் ரிலீஸாகிடும். இந்தப் படம் ஒரு தியேட்டர் ரிலீஸுக்கான படம். ஜாலியா, நம்ம ஃபிரெண்ட்ஸ் கூட உட்கார்ந்து பார்க்குறதுக்கான படமா `பார்ட்டி' பண்ணியிருக்கோம். எனக்கு ரொம்பப் பிடிச்ச ரைட்டர் கிரேஸி மோகன். அவரோட பேட்டன்ல பண்ணணும்னு நினைச்சு பண்ண படம்தான் `பார்ட்டி.' ''