சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

“ஆடியன்ஸுக்கும் ஸ்க்ரிப்ட்டுக்கும் கெமிஸ்ட்ரி வேண்டும்!”

எஸ்.ஜே.சூர்யா
பிரீமியம் ஸ்டோரி
News
எஸ்.ஜே.சூர்யா

அவங்கவங்க கடமையை ஒழுங்கா செய்தா, எந்தப் பிரச்னையும் இல்ல. அதுக்கான பலன் தானாகத் தேடிவரும்னு சொல்ற கதைதான் படம்.

“என் குருநாதர் சுந்தர்.சி சாரின் ‘நகரம்’ல இருந்து சமீபத்திய ‘அரண்மனை 3’ வரைக்குமே நான் டயலாக் எழுதியிருந்தாலும், இயக்குநரா நான் அறிமுகமானது ‘முத்தின கத்திரிக்காய்’லதான். இப்ப ‘கடமையைச் செய்’ மூலமா டைரக்‌ஷன்ல அடுத்த ரவுண்டை ஆரம்பிக்கறேன்.

‘கலகலப்பு 2’, ‘அரண்மனை 3’ன்னு டயலாக்குகள் எழுதிட்டு ஃப்ரெஷ்ஷா வந்து நின்னா, பட்டுனு லாக்டௌன் விழுந்திடுச்சு. அந்த டைம்ல எழுதின கதைதான் ‘கடமையைச் செய்.’ போன பிப்ரவரியில் ஆரம்பிச்சு, இப்ப முழுப்படத்தையும் முடிச்சிட்டோம். என் முதல் பட ஹீரோவான சுந்தர்.சி சார் எப்படி இயக்குநர் கம் ஹீரோவோ அப்படி என் ரெண்டாவது பட ஹீரோவும் டைரக்டர் கம் ஹீரோவான எஸ்.ஜே.சூர்யா சார் கிடைச்சிருக்கார்” - கலகலக்கிறார் இயக்குநர் வேங்கட் ராகவன்.

வேங்கட் ராகவன்
வேங்கட் ராகவன்


`` `கடமையைச் செய்’னு யாரைச் சொல்றீங்க?’’

‘‘எல்லாரையும்தான். அவங்கவங்க கடமையை ஒழுங்கா செய்தா, எந்தப் பிரச்னையும் இல்ல. அதுக்கான பலன் தானாகத் தேடிவரும்னு சொல்ற கதைதான் படம். எஸ்.ஜே.சூர்யா இதுல யார், என்ன பண்றார் அப்படின்னு இப்பவே சொன்னா சுவாரசியம் போயிடும். ஃபேமிலி ஆடியன்ஸ்ல இருந்து அத்தனை பேரையும் கவர்ந்து இழுக்கற படமா எல்லா ஜானரையும் வச்சிருக்கோம்.

படத்துல எஸ்.ஜே.சூர்யாவுக்கு டபுள் டைம் ஸ்டிராங் கேரக்டர். அவர் இப்படித்தான் இருப்பார்னு ஒரு இமேஜை மனசுல வச்சு வருவீங்க இல்லீயா. அப்படி அவர் இதுல இருக்க மாட்டார். யாஷிகா ஆனந்தையும் இதுவரை கிளாமர் டாலாதான் பாத்திருப்பீங்க. அந்த இமேஜை இதுல உடைச்சிட்டோம்.

மூணாவது அலை வர்றதுக்குள்ள படத்தை முடிச்சிடணும்னு நினைச்சு ஓடினோம். என் வேகத்துக்கு சமமா டெக்னீஷியன் டீமும் கூடவே வந்தாங்க. ஒளிப்பதிவாளர் வினோத் ரத்னசாமி வேகத்தோடு தரத்தையும் தந்திருக்கார். இதுக்கு முன்னாடி அவர் சசிகுமாரின் ‘எம்.ஜி.ஆர்.மகன்’ பண்ணினவர். ‘தடம்’ அருண்ராஜ் இசையமைச்சிருக்கார். பாடல்கள் அருமையா வந்திருக்கு. சுந்தர். சி சார் டீம்ல உள்ள ஸ்ரீகாந்த் எடிட்டர்னால என் அலைவரிசையை உணர்ந்து பண்ணியிருக்கார். கொரோனாச் சூழல்ல தயாரிப்பாளர்கள் ரமேஷும், ஜாகிர் ஹுசைனும் திட்டமிட்டு, பாதுகாப்பா ஷூட்டை நடத்தவச்சாங்க.’’

 “ஆடியன்ஸுக்கும் ஸ்க்ரிப்ட்டுக்கும் கெமிஸ்ட்ரி வேண்டும்!”

``பட பூஜைக்கு செல்வராகவன் வந்திருந்தாரே..?’’

“ஆமாங்க. அந்த டைம்ல ‘நெஞ்சம் மறப்பதில்லை’ ரிலீஸ் வேலைகள் நடந்துட்டிருந்துச்சு. ஸோ, எஸ்.ஜே.சூர்யா சார் செல்வராகவன் சாரையும் அவரது நண்பர்கள் பலரையும் பூஜைக்கு அழைச்சிருந்தார். அப்படித்தான் செல்வராகவன் சார் வந்து வாழ்த்தினார். எஸ்.ஜே.சூர்யா இன்னிக்கு ஹீரோவா சக்சஸ்ஃபுல்லா ஆகியிருக்கார்னா அதுக்கு பின்னாடி அவரது உழைப்பும், தொழில்பக்தியும், தொழில்பயமும்தான் காரணமா இருக்க முடியும். அவர் இவ்ளோ படங்கள் இயக்கியிருக்கார். நடிச்சிருக்கார். ஆனா, ஒவ்வொரு ஷாட்டிலும் ஒரு புதுமுக நடிகர் மாதிரி ஆர்வத்தோடும் உழைப்போடும் வந்து நின்னார்.’’

 “ஆடியன்ஸுக்கும் ஸ்க்ரிப்ட்டுக்கும் கெமிஸ்ட்ரி வேண்டும்!”

``தொடர்ந்து சுந்தர்.சியின் படங்களுக்கு ரைட்டராகவும் ஒர்க் பண்றீங்களே?’’

“சுந்தர்.சியின் மெயின் பலமே ஒரு டயலாக்கை கதைக்கு யதார்த்தமானதா இருக்கணும்னு விரும்புவார். யாரையும் கலாய்ச்சாகூட புண்படுத்தாத டயலாக்ஸா இருக்கணும்னு நினைப்பார். அவருடைய பல்ஸ் முழுசா தெரியும்ங்கறதால ஈஸியா ட்ராவலாகுறேன். ‘அரண்மனை 3’ முடிஞ்சதும் அவர் நடிக்கவும், பட புரொடக்‌ஷன்லேயும் பிஸியா இருக்கறதால அந்த இடைவெளியில் நான் ஒரு படம் பண்ணிடுறேன். ‘கலகலப்பு’ ‘அரண்மனை’ எல்லாம் அடுத்தடுத்த பார்ட்கள் வர்றது சந்தோஷமா இருக்கு. ஒவ்வொரு சீரிஸும் ஒவ்வொரு கதையாக இருந்தாலும், முந்தின பார்ட்ல உள்ள சீனோ, டயலாக்கோ அடுத்த பார்ட்டிலும் ரிபீட் ஆகாமல் பார்க்கறது பெரிய சவாலான வேலையா இருக்கு. இல்லன்னா ‘இதுதான் ஒண்ணாவது பார்ட்லேயே வந்திடுச்சே’ன்னு ஆடியன்ஸ் எளிதா சொல்லிடுவாங்க.

ஹீரோ - ஹீரோயின் கெமிஸ்ட்ரி எல்லாம் சும்மா. சினிமாவுல ஆடியன்ஸுக்கும் ஸ்கிரிப்ட்டுக்குமான பிணைப்பா கெமிஸ்ட்ரி இருக்கணும். அந்த கெமிஸ்ட்ரி ஜெயிச்சாதான் படமும் ஜெயிக்கும். தியேட்டர்லதான் அந்த கெமிஸ்ட்ரி வரும்.’’