Published:Updated:

``விஜய்யின் அழைப்புக்காக வெயிட் பண்ணப்போறேன்!''- வெற்றிமாறன் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி

வெற்றிமாறன்
வெற்றிமாறன்

இயக்குநர் வெற்றிமாறனின் முழுமையான பேட்டி ஆனந்த விகடனில்...

ஆனந்த விகடனுக்காக அன்று பார்த்தது வித்தியாச வெற்றிமாறன். பரபர சினிமாக்கள் இயக்கும் வெற்றிமாறன் சத்தம் இல்லாமல் வேடந்தாங்கலில் இயற்கை விவசாயம் செய்கிறார். இன்னொரு பக்கம் 600 ரேஸிங் புறாக்கள் வளர்க்கிறார். இந்தப் புறாக்கள் சர்வதேச புறா ரேஸ் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெறுகின்றன... என வெற்றிமாறனின் வெவ்வேறு முகங்களைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது.

லாக்டெளன் முடிந்த ஒரு காலையில் வேடந்தாங்கல் அருகே 'கட்டியாம்பந்தல்' எனும் கிராமத்தில் இருக்கும் அவரது பசுமைப் பண்ணையில் சந்தித்தேன். விவசாயம், அரசியல், சினிமா, புறா ரேஸ் எனப் பல விஷயங்கள் பேசினோம். அதில் எல்லோரும் எதிர்பார்க்கும் விஜய் - வெற்றிமாறன் காம்போ குறித்தும் பேசினோம்.

வெற்றிமாறன்
வெற்றிமாறன்

''சினிமாவுக்கு வந்த இந்த 13 வருஷங்களில் ஐந்து படங்கள்தான் பண்ணியிருக்கீங்க. ஐந்துமே வெற்றிப்படங்கள். ஆனா, இப்ப சூரி படம், சூர்யா படம், விஜய் படம், அப்புறம் எல்ரெட் குமார் தயாரிப்புக்காக இன்னொரு படம்னு நாலு படங்கள் பைப்லைன்ல சேர்ந்துடுச்சே... இந்த திடீர் மாற்றம் எப்படி?''

'' 'அசுரன்' படத்துக்கு அப்புறம் தைரியம் வந்துடுச்சுனு நினைக்கிறேன். ஒரு வருஷத்துக்குள்ள ஒரு படம் எடுத்துடமுடியும்னு நானே நம்பல. எல்லாம் வேகவேகமா பண்ண ஆரம்பிச்சேன், அதுக்குள்ள இந்த கொரோனா வந்துடுச்சு. இப்ப என்ன பண்ணப்போறோம்னு ஒரு க்ளாரிட்டியே இல்ல. இந்த லாக்டெளனால தொடர்ந்து வெவ்வேறு எண்ணங்கள் வந்துட்டே இருக்கு. இன்னும் இன்ஃபெக்ஷனுக்கான சரியான மெடிக்கேஷன் இல்லை. அதனால இப்ப ஷூட்டிங் நடத்தலாம்னு சொல்லிட்டாலும் நடத்த முடியுமான்னு தெரியல. எல்லாத்துக்கும் ஒரு க்ளாரிட்டி வந்த பிறகுதான் என்ன படம், எவ்ளோ வேகமா பண்ணப்போறோம்னு தெரியும். ஆனா, எப்படியிருந்தாலும் முதல்ல ஆர்.எஸ் இன்ஃபோடெய்ன்மென்ட்டுக்கு ஒரு படம், அது முடிச்சிட்டு தாணு சார் தயாரிப்புல சூர்யா கூட 'வாடிவாசல்'. அதுக்கு அப்புறம் விஜய் சாரின் அழைப்புக்காக வெயிட் பண்ணப்போறேன். அவருக்கான கதையையும் வொர்க் பண்ண ஆரம்பிச்சிட்டேன்'' என்றார்.

வெற்றிமாறன்
வெற்றிமாறன்

'' EIA 2020 (Environment Impact Assessment) சட்ட வரைவை எப்படிப் பார்க்கிறீங்க?’’

"`ஒரே மொழி, ஒரே மதம், ஒரே உணவு, ஒரே அரசு என ஒற்றைத்தன்மையை நோக்கி இந்திய அரசியல் நகர்வதாக நீங்க பார்க்கிறீங்களா?’’

''இளம் இயக்குநர்களுக்கு அரசியல் தெளிவும், அரசியல் பார்வையும் வேண்டும்னு நினைக்கிறீங்களா?’’

'' ‘வாடிவாசல்’ படத்துக்குள் சூர்யா எப்படி வந்தார்?’’

''வடிவேலுவோட படம் பண்ணுற ஐடியா இருக்கா?’’

'' ‘வடசென்னை-2’ கதை அதன் தொடர்ச்சியா இருக்குமா?''

அத்தனை கேள்விகளுக்கும் பதில் சொல்லியிருக்கிறார் வெற்றிமாறன். முழுமையான பேட்டியை ஆனந்த விகடன் இதழில் வாசிக்க > தமிழகத்துல விவசாயி... டெல்லியில தீவிரவாதி! - விசாரணையில் வெற்றிமாறன் https://bit.ly/34YfcqD

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு