Published:Updated:

``சிம்பு லேட்டா வருவார்தான்... ஆனா...!?'' - `வாலு’ விஜய் சந்தர்

விஜய் சந்தர்
விஜய் சந்தர்

'வாலு', 'ஸ்கெட்ச்', 'சங்கத்தமிழன்' படங்களின் இயக்குநர் விஜய் சந்தரின் நேர்காணல்...

"'ஸ்கெட்ச்' படத்துக்குப் பிறகு விஜயா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துக்கு படம் பண்ணலாம்னு கதை ரெடி பண்ணினேன். வெங்கட் ராம ரெட்டி மற்றும் பாரதி மேடம் ரெண்டு பேருமே கதை கேட்டுட்டு ஓகே சொன்னாங்க. படத்துகான பட்ஜெட் அதிகம்தான், இருந்தும் அவங்க எந்த பிரச்னையும் இல்லனு சொல்லிட்டாங்க'' என்று பேசுகிறார், 'சங்கத்தமிழன்' படத்தின் இயக்குநர் விஜய் சந்தர்.

விஜய் சேதுபதி - ராஷி கண்ணா: சங்கத்தமிழன்
விஜய் சேதுபதி - ராஷி கண்ணா: சங்கத்தமிழன்
`உங்களால கஷ்டம் மட்டும்தான் இருக்கு..!' - `மாநாடு' சர்ச்சையும் சிம்பு ரசிகரின் வீடியோ பதிவும்

விஜய் சேதுபதி எப்படி கதைக்குள்ளே வந்தார்?

சங்கத்தமிழன்
சங்கத்தமிழன்

’’கதை மாஸா இருக்கும், டபுள் ஆக்‌ஷன் சப்ஜெக்ட் வேற. விஜய் சேதுபதி பண்ணுனா நல்லாயிருக்கும்னு தோணுச்சு. அதனால அவர்கிட்ட கதை சொன்னேன். என்னோட 'வாலு' படம் பண்ணுன நேரத்துல விஜய் சேதுபதி எனக்கு அறிமுகமானார். ’உங்களுடைய ப்ளஸ் வசனம்தான் தலைவா, விட்டுறாதீங்க’னு சொல்லுவார். நம்ம படம் பண்ணலாம்னு பார்க்கும்போதெல்லாம் சொல்லுவார். இடையில் ரெண்டு படங்களில் சேர்ந்து வேலை பார்க்க வாய்ப்பு வந்தது. கால்ஷீட் பிரச்னை காரணமா பண்ண முடியல. இந்த கதையைக் கேட்டவுடனே, ’நம்ம பண்ணிடலாம் தலைவா'னு சொல்லிட்டார். இதுவரைக்கும் அவர் நடிச்ச படங்களில் பண்ணாத பல விஷயங்களை இந்தப் படத்துல பண்ணியிருக்கார். அதே மாதிரி ஒரு பாட்டுக்கு செம குத்து டான்ஸூம் ஆடியிருக்கார்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விஜய் சேதுபதிக்கு எந்த மாதிரியான ரோல் கொடுத்திருக்கீங்க?

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

’’நம்ம பக்கத்து வீட்டு பையன் எப்படியிருப்பானோ அது மாதிரியான ரோல்தான். நம்ம பார்க்கிற, பேசுற கேரக்டரைத்தான் படமா பண்ணியிருக்கோம். 'எங்க வீட்டுப் பிள்ளை', 'உங்களில் ஒருவன்'னு சொல்ற மாதிரியான ஒரு ரோல் பண்ணியிருக்கார். அக்டோபரில்தான் படம் ரிலீஸ். அதனால இப்போ என்னால விளக்கி பேச முடியாது. முழுக்க முழுக்க இது கமர்ஷியல் படம்தான். ரஜினி சார் படத்துல டான்ஸ், பைட், பன்ச் எப்படி இருக்குமோ அதே மாதிரிதான் இதுல இருக்கும்.’’

படத்தோட ஹீரோயின்ஸ் நிவேதா பெத்துராஜ் மற்றும் ராஷி கண்ணா பற்றி..?

விஜய் சேதுபதி - ராஷி கண்ணா
விஜய் சேதுபதி - ராஷி கண்ணா

’’இந்தப் படத்துல நடிச்சிருக்கிற ரெண்டு ஹீரோயின்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம்தான் கொடுத்திருக்கேன். ஏதோ பாட்டுக்கு வந்து டான்ஸ் ஆடணும்கிற மாதிரி இவங்களுடைய கேரக்டர் இருக்காது. நிவேதா பெத்துராஜ் தேன்மொழியாகவும், ராஷி கண்ணா கமாலினியாகவும் நடிச்சிருக்காங்க. படத்துக்கு தமிழ் பேர்தான் வைக்கணும்னு முடிவு எடுத்து 'சங்கத்தமிழன்'னு பேர் வெச்சோம். விஜய் சேதுபதிகூட முழுக்க ட்ராவல் பண்ணுற கேரக்டரில் சூரி நடிச்சிருக்கார். இதுதவிர ஜான் விஜய், துளசி, ஶ்ரீரஞ்சனி, ஶ்ரீ ராம், தீபா, ’நான் கடவுள்’ ராஜேந்திரன் எனப் பல நட்சத்திரங்கள் இந்தப் படத்துல இருக்காங்க.’’

சிம்புகூட 'வாலு' படம் பண்ணுனீங்க. அடுத்தாக அவரை வைத்து இன்னொரு படமும் பண்ணலாம்னு இருந்தீங்க. அவரால் ஷூட்டிங் தள்ளிப் போகுதுனு செய்திகள் வருவதை எப்படிப் பார்க்குறீங்க?

சிம்புவுடன் விஜய் சந்தர்...
சிம்புவுடன் விஜய் சந்தர்...

’’ 'டெம்பர்' படத்தை தமிழில் அவரை வைத்து ரீமேக் செய்ய இருந்தோம். ஆனா, கடைசி நேரத்தில் முடியாமல் போய்விட்டது. அப்போ அவர் ரொம்ப வருத்தப்பட்டு, 'கதையிருந்தா சொல்லுங்க; அடுத்த மாதம் ஷூட்டிங் போலாம்'னு சொன்னார். என்னால ஒரு மாசத்துல திடீர்னு ஸ்க்ரிப்ட் ரெடி பண்ண முடியாது'னு சொன்னேன். அவர் அப்போதும் பெருந்தன்மையா 'பரவாயில்லயா... நான் வேறொரு படம் பண்ணட்டுமா'னு கேட்டார். அவர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரலைனா அவர் நடிச்ச படங்கள் எப்படி ரிலீஸ் ஆகும்? அவர் வருவார்; ஆனா லேட்டா வருவார். லேட்டா வந்தாலும் அவருடைய வேலையை சரியா முடித்துக் கொடுத்துருவார். அவரால எப்போதும் ஷூட்டிங் தேதி தள்ளிப் போனதே கிடையாது.

அவர்கூட வேலை பார்த்த அனுபவத்தில்தான் சொல்றேன். 'வாலு' படத்தை தயாரிப்பாளர் சொன்ன தேதிக்குள்ளேதான் முடிச்சி கொடுத்தோம். சொல்லப்போனா, 'எனக்கு ஒரு படம் பண்ணிக் கொடுங்க; கால்ஷீட் கொடுங்க'னு நம்மதான் அவரை தேடிப் போறோம். அவர் யார்கிட்டேயும் 'எனக்கு ஒரு படம் கொடுங்க'னு கேட்குறதில்ல. அவருடைய சினிமா அனுபவமே வேற.

"'வாலு' ஷூட்டிங்குக்கு முன்னாடியே சிம்புவை சந்திச்சு பேசியிருக்கேன். அப்போ அவர் மீது இருந்த மரியாதையும் அன்பும் இன்னைக்கு வரைக்கும் குறையாமதான் இருக்கு.’’
விஜய் சந்தர்
`` `மாநாடு' சம்பந்தமா எல்லா ரெக்கார்டும் எங்ககிட்ட இருக்கு!" - சிம்பு தரப்பில் விளக்கம்

கமர்ஷியல் படங்கள் மட்டுமே பண்ணலாம்கிற முடிவுல இருக்கீங்களா?

’’யதார்த்தமான படங்களும் பண்ணணும்னு விருப்பம் இருக்கு. ஆனா, கமர்ஷியல் படங்களை நல்ல முறையில் டைரக்‌ஷன் பண்றதால இப்போ இந்த ஃபார்மெட்ல போயிட்டிருக்கேன்.’’

அடுத்த கட்டுரைக்கு