Published:Updated:

"`வாரிசு'ல `ஆல் தோட்ட பூபதி' பாடல்; `பிரியமுடன்' க்ளைமாக்ஸ் பிடிக்காத எஸ்.ஏ.சி!"- வின்சென்ட் செல்வா

விஜய்யுடன் இயக்குநர் வின்சென்ட் செல்வா

"இந்தப் படத்துல மிஷ்கின் என் உதவியாளரா இருந்தார். அப்ப அவரோட பெயர் ராஜா. தேவா சார்கிட்ட நான் கம்போஸிங் போறப்ப எல்லாம் என் உதவியாளர்கள் அத்தனை பேரையும் அழைச்சிட்டு போவேன்." - வின்சென்ட் செல்வா

"`வாரிசு'ல `ஆல் தோட்ட பூபதி' பாடல்; `பிரியமுடன்' க்ளைமாக்ஸ் பிடிக்காத எஸ்.ஏ.சி!"- வின்சென்ட் செல்வா

"இந்தப் படத்துல மிஷ்கின் என் உதவியாளரா இருந்தார். அப்ப அவரோட பெயர் ராஜா. தேவா சார்கிட்ட நான் கம்போஸிங் போறப்ப எல்லாம் என் உதவியாளர்கள் அத்தனை பேரையும் அழைச்சிட்டு போவேன்." - வின்சென்ட் செல்வா

Published:Updated:
விஜய்யுடன் இயக்குநர் வின்சென்ட் செல்வா
விஜய் சினிமா கரியரில் எவர்கிரீன் பாடல்களைப் பட்டியலிட்டால், அதில் `சர்க்கரை நிலவே...', `ஆல்தோட்ட பூபதி நானடா...' ஆகிய பாடல்கள் தவறாமல் இடம்பெறும். இதில் `ஆல் தோட்ட' பாடல், விஜய் இப்போது நடிக்கும் 'வாரிசு' படத்திலும் வரவிருப்பதாகச் சொல்கிறார்கள். இந்தப் பாடல் இடம்பெற்ற `யூத்' படம் வெளிவந்து 20 வருடங்கள் (ஜூலை 19) ஆகின்றன. `யூத்' இயக்குநர் வின்சென்ட் செல்வாவிடம் பேசினேன்.
யூத் படப் பூஜையின் போது...
யூத் படப் பூஜையின் போது...

திரைப்படக் கல்லூரியில் டைரக்‌ஷன் கோர்ஸ் படித்தவரான வின்சென்ட் செல்வா, கேமராமேனாக விரும்பி, செல்வா என்ற தன் பெயருடன் ஒளிப்பதிவு ஜாம்பவானான வின்சென்ட்டின் பெயரையும் சேர்த்து வின்சென்ட் செல்வா ஆனார். விஜய் நடித்த 'பிரியமுடன்' படத்தின் மூலம் இயக்குநரானவர் வி.செ. இவரிடம்தான் இயக்குநர் மிஷ்கின் உதவியாளராக இருந்திருக்கிறார்.

"'யூத்' இப்பவும் மறக்க முடியாத படம்... ஏன்னா, ஒளிப்பதிவாளர் நட்டி, பாடலாசிரியர் கபிலன், டான்ஸ் மாஸ்டர் தினேஷ்... இப்படிப் பலருக்கும் அதுதான் முதல் படம். அதுக்கு முன்னாடி 'பிரியமுடன்' பத்திப் பேசிடுவோம்.

இப்ப எல்லாருமே ஷார்ட் ஃபிலிம் பத்திப் பேசுறோம். ஆனா, அப்பவே நான் ஷார்ட் ஃபிலிம் பண்ணியிருக்கேன். விஜய் சார் அதைப் பார்த்துதான் எனக்கு 'பிரியமுடன்' வாய்ப்பு கிடைச்சது. எடிட்டர்கள் லெனின் சார், V.T.விஜயன் சார் ரெண்டுபேரையுமே என்னால மறக்க முடியாது. என் ஷார்ட் ஃபிலிம் பத்தி சினிமாவுல உள்ள பலர்கிட்டேயும் சொல்லி, என்னை என்கரேஜ் பண்ணினாங்க.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மணிவண்ணனுடன்
மணிவண்ணனுடன்

'பிரியமுடன்' கதையை விஜய் சார்கிட்ட சொல்றதுக்கு முன்னாடி அவர்கிட்ட ஒரு விஷயம் சொன்னேன். 'முதல் பாதியை சொல்லிடுறேன். நீங்க அடுத்து என்ன நடக்கும்னு கேட்டுட்டா... எனக்கு நீங்க படம் கொடுக்கணும்'ன்னு நிபந்தனையோடு கதையைச் சொன்னேன். அவரும் 'இவர் என்ன பெருசா சொல்லிடப்போறார்'ன்னு ஒரு மனநிலையோடுதான் கதை கேட்க ஆரம்பிச்சார். நான் நினைச்சது மாதிரி இன்டர்வெல் பிளாக்ல 'அடுத்து என்ன நடக்கும்?'ன்னு கேட்டுட்டார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

விஜய் சார் இந்தக் கதையை செலக்ட் பண்ணினதுல எஸ்.ஏ.சி. சாருக்கு ஆச்சர்யம். ஏன்னா, அப்ப விஜய் சார் 'பூவே உனக்காக', 'நேருக்கு நேர்', 'காதலுக்கு மரியாதை'னு சாஃப்ட்டான இமேஜ்ல இருந்தார். இதுல நெகட்டிவ் ரோல்ல நடிக்க எப்படிச் சம்மதிச்சார்னு ஆச்சரியப்பட்டார். ஃபிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்கள்னா ரொம்ப டைம் எடுப்பாங்கனு அவர் நினைச்சிருக்கலாம். எஸ்.ஏ.சி. சார் படம்னா அதிக பட்சம் 30 நாள்களுக்குள் எடுத்து முடிச்சிடுவாங்க. காலையில ஏழு மணிக்கு முதல் ஷாட் வைக்கணும். காலையில ஒன்பது மணிக்குள்ளாக ஒரு சீன் எடுத்து முடிச்சிடணும்னு டைம்டேபிள் போட்டு எடுப்பார்.

ஆல் தோட்ட பூபதி பாடலில் விஜய், சிம்ரன்
ஆல் தோட்ட பூபதி பாடலில் விஜய், சிம்ரன்

ஆனா, விஜய் சார் என்னை நம்பினார். 'இந்தப் படம் ஓடலைனா, இதோட தயாரிப்பாளருக்கு இன்னொரு படம் ஃப்ரீயாகவே பண்ணித்தர்றேன்'ன்னு வாக்குறுதியும் கொடுத்தார். அந்தளவுக்கு 'பிரியமுடன்' மீது அவர் நம்பிக்கை வச்சிருந்தார்.

'யூத்' படத்துல 'ஆல் தோட்ட பூபதி' இந்தளவுக்கு ஹிட் ஆகும்னு எதிர்பார்க்கல. விஜய் சாரோட 'வாரிசு'ல கூட இந்தப் பாடலுக்கு விஜய் சார் டான்ஸ் ஆடப்போறர்னு கேள்விப்பட்டேன். அப்படி நடந்தால், விஜய் சார் பாட்டுக்கு விஜய் சாரே மறுபடியும் ஆடப்போறார் என்பதே சந்தோஷம்தான்.

இந்தப் படத்துல மிஷ்கின் என் உதவியாளரா இருந்தார். அப்ப அவரோட பெயர் ராஜா. தேவா சார்கிட்ட நான் கம்போஸிங் போறப்ப எல்லாம் என் உதவியாளர்கள் அத்தனை பேரையும் அழைச்சிட்டு போவேன். தேவா சாரே ஆச்சரியப்பட்டு, 'என்னப்பா இத்தனை பேர் வந்து நிற்குறீங்க?'ம்பார். அதைப் போல 'சர்க்கரை நிலவே' வைரமுத்து சாருக்கும் ரொம்ப பிடிச்ச பாட்டுன்னு சொல்லியிருக்கார். இந்தப் படத்துல நடிச்ச மணிவண்ணன் சார், விவேக் சார், வி.எம்.சி. ஹனீபா எல்லாரும் இப்ப இல்ல. அதிலும் மணிவண்ணன் சார், படிப்பாளி. நல்ல புத்தகம் எது படிச்சாலும் அதை படிச்சு முடிச்சதும் அவர் கையொப்பமிட்டு எனக்கு அனுப்பி வச்சிடுவார். அப்படி அவர் எனக்கு ஒரு லைப்ரரி வைக்கற அளவுக்கு அனுப்பி வச்சிருக்கார். அதைப் பொக்கிஷமா பாதுகாக்குறேன்.

விஜய்யின் ஆட்டோகிராப் - விஜய், வின்சென்ட் செல்வா
விஜய்யின் ஆட்டோகிராப் - விஜய், வின்சென்ட் செல்வா

'பிரியமுடன்' படத்துல இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் இருக்கு. அந்தப் படத்தோட க்ளைமாக்ஸ்ல விஜய் சார் இறந்துடுவார்னு கதையில எழுதியிருந்தோம். ஆனா, எஸ்.ஏ.சி. சார், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள்னு பலரும் விஜய் சார் இறந்துடுற மாதிரி காட்டக்கூடாதுனு சொன்னாங்க. ஆனா, விஜய் சாரும், அவங்க அம்மாவும்தான், 'கதைப்படி அந்த கேரக்டர் இறக்கறதுதான் சரியானது'ன்னு சொன்னதுடன், இப்ப உள்ள க்ளைமாக்ஸை எடுக்கவும் சம்மதிச்சாங்க. இப்படிக் காலம் கடந்தும் பசுமையா நிறைய நினைவுகள் இருக்கு..." - எனச் சொல்லி நெகிழ்கிறார் வின்சென்ட் செல்வா.