Published:Updated:

12 கிலோ சிண்ட்ரெல்லா கவுன்!

ராய்லட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
ராய்லட்சுமி

எனக்கு ஐந்து மொழிகள் பேசவும் எழுதவும் தெரியும் என்பதால, பல படங்களுக்கு சைலன்ட்டா ஒர்க் பண்ணின அனுபவம் இருக்கு.

12 கிலோ சிண்ட்ரெல்லா கவுன்!

எனக்கு ஐந்து மொழிகள் பேசவும் எழுதவும் தெரியும் என்பதால, பல படங்களுக்கு சைலன்ட்டா ஒர்க் பண்ணின அனுபவம் இருக்கு.

Published:Updated:
ராய்லட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
ராய்லட்சுமி

ராய்லட்சுமி இப்போது சிண்ட்ரெல்லா. யெஸ், இன்ஸ்டாகிராமில் செம ஸ்டைலிஷ் டால் ஆகப் புன்னகைக்கும் பொண்ணு, நீண்ட இடைவெளிக்குப் பின் ‘சிண்ட்ரெல்லா'வாகத் தமிழுக்கு வருகிறார். இப்படத்தின் அறிமுக இயக்குநர் வினோ வெங்கடேஷ், எஸ்.ஜே.சூர்யாவின் பட்டறையிலிருந்து வந்தவர். வினோவிடம் பேசினேன்.

12 கிலோ சிண்ட்ரெல்லா கவுன்!

``படத்தோட டைட்டில் நல்லா இருக்கே..?’’

‘‘நன்றிங்க. ஒரு படத்துக்கு டைட்டில் நல்லா இருந்தாதான், எல்லார்கிட்டேயும் அது போய்ச் சேரும். இந்த டைட்டில் ஒரு பெரிய போராட்டத்துக்குப் பின் எங்க கைக்குத் திரும்ப வந்துச்சு. ஏன்னா, ஒரு கம்பெனியில இந்தக் கதையைச் சொன்னதும், அவங்க தயாரிக்கறேன்னு சொல்லிட்டு டைட்டிலை எடுத்துக்கப் பார்த்தாங்க. அப்புறம், அவங்ககிட்ட சண்டை போட்டு வாங்க வேண்டியதாகிடுச்சு.

எனக்கு ஐந்து மொழிகள் பேசவும் எழுதவும் தெரியும் என்பதால, பல படங்களுக்கு சைலன்ட்டா ஒர்க் பண்ணின அனுபவம் இருக்கு. எஸ்.ஜே.சூர்யாவின் `இசை'யில் அசோசியேட் ஆனது அதுல இனிமையான அனுபவம். அதன்பிறகு தனியா படம் பண்ணலாம்னு இறங்கினேன். அப்ப, ஒரு விநியோகஸ்தர் ‘உங்ககிட்ட பேய்க் கதை இருந்தா சொல்லுங்க. அதைத் தயாரிக்கறேன்'ன்னார். வழக்கமான க்ளீஷேவா இல்லாமல், ஒரு ஹாரர் படம் பண்ண விரும்பிப் பண்ணினதுதான் இந்த ‘சிண்ட்ரெல்லா.' நான் கிராபிக்ஸ்ல முன்னாடி வேலை பார்த்ததால இருந்ததால, ஃபேன்டஸி ஹாரர் ஆகப் பண்ணியிருக்கேன்.''

12 கிலோ சிண்ட்ரெல்லா கவுன்!

``ராய்லட்சுமிக்கு இது செகண்ட் இன்னிங்ஸ்... என்ன சொல்றாங்க?’’

‘‘அவங்களுக்கு கிளாமர் இமேஜ் இருக்கு. இந்தப் படத்துல அதை உடைச்சிருக்காங்க. துளசிங்கற வேலைக்காரப் பெண்ணா, அவங்க நடிப்பு உருக வச்சிடும். படத்துல அவங்களுக்கு மூணு கெட்டப். அவங்கள மனசுல வச்சுதான் இந்தக் கதையை எழுதினேன். ஆனா, அப்ப அவங்களப் பிடிக்க முடியல. வேற வேற ஹீரோயின்கள்கிட்ட கதையைச் சொல்லிட்டு, கடைசியில அவங்ககிட்டே இந்தக் கதை போய் நின்னது, இன்னும் ஆச்சரியம்.

நான் ஃப்ரீலான்ஸ் இயக்குநரா பல படங்கள்ல ஒர்க் பண்ணியிருக்கேன். அப்ப சில ஹீரோயின்கள், ‘அதைப் பண்ணாதீங்க. இதைப் பண்ணாதீங்க'ன்னு சொல்லியிருக்காங்க. ஆனா, ராய்லட்சுமி அப்படி எதுவும் சொன்னதில்ல. எந்த பந்தாவும் பண்ணாமல், கேரக்டரை உணர்ந்து நடிச்சுக் கொடுத்தாங்க. படத்துல மூணு ஆக்‌ஷன்லேயும் செமையா ஸ்கோர் பண்ணியிருக்காங்க. டெக்னீஷியன் டீமும் பக்கா. ‘யாமிருக்க பயமே' ராமி ஒளிப்பதிவு பண்ணியிருக்கார். ‘காஞ்சனா 2' அஷ்வமித்ராவின் இசை, ஃபேன்டஸி ஹாரருக்கு பலம் சேர்த்திருக்கு. ‘நெற்றிக்கண்' லாரன்ஸ் கிஷோரின் எட்டிங்கும் கதையை விறுவிறுப்பாக்கியிருக்கு.''

12 கிலோ சிண்ட்ரெல்லா கவுன்!

``படத்துல சிண்ட்ரெல்லா டிரஸ் அசத்துதே?’’

‘‘உண்மைதாங்க. ‘சிண்ட்ரல்லா'னாலே நமக்கு ஹாலிவுட் படம்தான் ஞாபகத்திற்கு வரும். பெண்கள்னாலே நகை, ஆடை, மேக்கப்னு பல விஷயங்கள் உண்டு. ஆபரணங்கள் வச்சு பேய்ப்படங்கள் தமிழ்ல வந்திருக்கு. ஆடையை மையமா வச்சு, ஹாரர் வந்ததில்ல. ‘சிண்ட்ரெல்லா'வோட கவுன் ரொம்ப பிரபலம். அதுக்காக ஒரிஜினல் சிண்ட்ரெல்லாவோட கவுன் மாதிரியே பண்ணணும்னு நானும் ராய்லட்சுமியும் சேர்ந்து டிசைன் செய்தோம். மும்பையில நாலஞ்சு டிசைனர்கள் கைவண்ணத்தில் ஒரு மாச கலைநுணுக்க வேலைப்பாடுகளுடன் ரெடியாச்சு. பட ரிலீஸ் டைமில் புரொமோஷன்களுக்கு அதைப் பயன்படுத்தப் போறோம். கவுனோட எடையே 12 கிலோவுக்கு மேல இருக்கும். ராய்லட்சுமி அந்த காஸ்ட்யூம்ல இருந்தால் அவங்களுக்கு மட்டுமே தனி இனோவா கார் தேவைப்படும். அப்படி ஒரு பிரமாண்ட கவுன். ஸ்பாட்லேயும் அந்த கவுனைப் பிடித்து வர, நாலு பேர் எப்பவும் ரெடியா இருப்பாங்க.''

வினோ
வினோ

``உங்க குருநாதர் எஸ்.ஜே.சூர்யாகிட்ட ஒர்க் பண்ணின அனுபவம்..?’’

‘‘நிறைய இருக்கு. உதவி இயக்குநர்களின் மனசைப் புரிஞ்சுவச்சிருப்பார். சில நாள் நைட் நாம தூங்குறதுக்கு நள்ளிரவு தாண்டிப் போனாலோ, அல்லது, தூங்காமல் இருந்தாலோ, மறுநாள் நல்லா ரெஸ்ட் எடுக்கச் சொல்லிடுவார். ஸ்பாட்ல அவருக்கு ரொம்பவே அரிதாதான் கோபம் வரும். திட்டமிடல் அவர்கிட்ட கச்சிதமா இருக்கும். அவருக்குத் திருப்தியாகறவரை டென்ஷன் ஆகாமல் பணிபுரிய வைப்பார். அவரது ஒர்க்கிங் ஸ்டைல் பிரமிக்க வைக்கும்.''