Published:Updated:

“அஜித் என் டைரக்‌ஷனில் நடிக்கத் தயங்கினார்”

“அஜித் என் டைரக்‌ஷனில் நடிக்கத் தயங்கினார்”
பிரீமியம் ஸ்டோரி
News
“அஜித் என் டைரக்‌ஷனில் நடிக்கத் தயங்கினார்”

என்னை இம்ப்ரெஸ் பண்ணுற மாதிரி படம் எடுங்க’ன்னு சொல்ல, முகவரியைத் தொடங்கினோம்.

20 ஆண்டுகளுக்கு முன்பு ‘முகவரி’ மூலம் தமிழ் சினிமாவுக்குள் தனக்கான முகவரியை ஏற்படுத்திக் கொண்டவர் இயக்குநர் வி.இசட் துரை. 2020-ல் அமீருடன் ‘நாற்காலி’, சுந்தர்.சி-யுடன் ‘தலைநகரம் -2’, விஜய் ஆண்டனி, சிம்பு என அடுத்தடுத்த கமிட் மென்டுடன் தயாராக இருக்கிறார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
வி.இசட் துரை
வி.இசட் துரை

‘`முதல் படமே அஜித்துடன்... அந்த வாய்ப்பு எப்படி வந்தது?’’

‘`பிரபல தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர் என் மாமா. சென்னைக்கு வரும்போதெல்லாம் ஷூட்டிங் ஸ்பாட் போறது, இயக்குநர்களோடு பழகுறதுன்னு பல பேரோட அறிமுகம் கிடைச்சது. அப்படித்தான், `லக்‌ஷ்மி மூவி மேக்கர்ஸ்’ நிறுவனத்துகிட்ட, ‘காதல் கோட்டை’ படம் மாதிரியான ஒரு கதை சொல்லி யிருந்தேன். அவங்களும் கார்த்திக் சார்கிட்ட கதை சொல்லச் சொன்னாங்க. இந்த ப்ராஸஸ் போயிட்டு இருந்தப்போ, `காதல் கோட்டை’ ரிலீஸாகிடுச்சு. அந்தப் படம் பார்த்துட்டு உடனே முரளி சார் கால் பண்ணி, `துரை நீ சொன்ன கதை மாதிரியே ஒரு படம் வந்துருக்கு. நீ உடனே சென்னை கிளம்பி வா’ன்னு சொன்னார். `காதல் கோட்டை’ மாதிரி ஒரு கதை அறிமுக இயக்குநர்கிட்டேயும் இருந்துச்சுங்கிறது சினிமா வட்டாரத்திற்குள் பரவி, என்னை வெச்சுப் படம் பண்ணுறதுக்கு ரெண்டு, மூணு தயாரிப்பாளர்கள் ரெடியா இருந்தாங்க. ஆனால், நடிகர்கள் `எந்த இயக்குநர்கிட்டயும் உதவி இயக்குநரா இல்லாதவர், எப்படி அவர் சொன்ன கதையை படமா எடுப்பார்’னு யோசிச்சாங்க. அப்படி யோசிச்ச நடிகர்களில் அஜித்தும் ஒருத்தர். என் முதல் படத்தை அஜித்தை வெச்சு இயக்கணும்னு அஞ்சு தயாரிப் பாளர்களை அஜித்கிட்ட அழைச்சிட்டுப் போனேன். ஆனால், அஜித் `என் இயக் கத்தில் நடிக்க மாட்டேன்’னு சொல்லிட்டார். நண்பர் மூலமா சக்கரவர்த்தி சாரை சந்திச்சு ரெண்டு கதை சொன்னேன். ரெண்டாவதா சொன்ன முகவரியைக் கேட்டு ‘இதுதான்யா உன்னோட முதல் படமா இருக்கணும்’னு சொன் னார்.  ஒரு நாள், `அஜித் ஓகே சொல்லிட்டார். நீ போய் அவரை மீட் பண்ணு’ன்னு சொன்னார். நான் போய் அஜித்தைப் பார்த்தப்போ, ‘துரை, நீங்க என்கிட்ட கதையே சொல்ல வேணாம். நான் சக்கரவர்த்தியை நம்புறேன், அவர் உங்களை நம்புறார். என்னை இம்ப்ரெஸ் பண்ணுற மாதிரி படம் எடுங்க’ன்னு சொல்ல, முகவரியைத் தொடங்கினோம்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘`சிம்புவோட கரியரில் அவர் வித்தியாசமா பண்ணின கேரக்டர் `தொட்டி ஜெயா.’ அவரை எப்படி செலக்ட் பண்ணுனீங்க?’’

``ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் `தொட்டி ஜெயா’ படத்தோட கதையைக் கேட்டுட்டு, தயாரிப்பாளர் தாணு சார்கிட்ட அழைச் சிட்டுப் போனார். தாணு சாரோட ஃபேமிலிக்கே `முகவரி’ படம் பிடிக்கும் கிறதனால, இந்தப் படத்தை `நிச்சயம் பண்ணுவோம்’னு சொன்னார். ராஜசேகர்தான் சூர்யா கிட்டயும் சொல்ல வெச்சார். அவருக்குக் கதை பிடிச்சும், கால்ஷீட் பிரச்னை யால பண்ண முடியலை. அப்போ ராஜசேகர், `சிம்புவை வெச்சுப் பண்ணலாமா’ன்னு கேட்டார். அந்தப் படம் முழுக்க சிம்பு நல்லா ஒத்துழைச்சார். இப்ப சிம்பு கிட்ட ரெண்டு கதைகள் சொல்லியிருக்கேன். அதுல `தொட்டி ஜெயா’ படத்தோட ரெண்டாம் பாகமும் இருக்கு.’’

“அஜித் என் டைரக்‌ஷனில் நடிக்கத் தயங்கினார்”

‘`அமீரை வைத்து `நாற்காலி’ புராஜெக்ட் எப்படி உருவானது ?’’

`` `தொட்டி ஜெயா’க்கு அப்புறம் அமீர் அவரோட தயாரிப்புல ஒரு படம் பண்ணுறதுக்காகக் கேட்டார். நானும் ஒரு கதை சொல்லி, ‘இந்தப் படத்துல நீங்க நடிக்கணும்’னு சொன்னேன். அவருக்கு அப்ப நடிக்கற ஐடியா இல்லை. அதனால, தயங்கினார். அப்புறம் பேசி, இயக்குநர் அமீரை நடிகர் அமீராவும் மாற்றினேன். ஆனால், சில காரணங்களால் அந்தப் படம் நடக்காமல் போயிடுச்சு. இப்ப ‘நாற்காலி’ படம் நல்லபடியா ஸ்டார்ட் ஆகிடுச்சு. 80 சதவிகித படப் பிடிப்பு முடிஞ்சிடுச்சு. இந்தப் படத்தில் அமீர் ஒரு முழுமையான நடிகராகத் தெரிவார். . படத்துல 6 வருஷத்துக்கு முன்னாடி நடக்குற ஃப்ளாஷ்பேக் போர்ஷன் இருக்கு. அதோட லுக்கிற்காகவும் ரொம்பவே மெனக்கெட்டார்.’’

“அஜித் என் டைரக்‌ஷனில் நடிக்கத் தயங்கினார்”

‘`சுந்தர்.சி-யோட `தலைநகரம்’ படத்தோட இரண்டாம் பாகம் எடுக்குறீங்களாமே?’’

`` ‘இருட்டு’ படம் முடிஞ்சதும் அதோட இரண்டாம் பாகம் பண்ணலாம்னு சுந்தர்.சி சார் கேட்டார். ஒரு லைன் வொர்க் அவுட் பண்ணி சொன்னேன். அது அவருக்கு ரொம்பப் பிடிச் சிருந்தது. சில வாரங்களுக்கு முன்பு சுந்தர்.சி சாரை நேரில் பார்க்கப் போனேன். அப்போ அவர் லாக்டெளனால முடி, தாடியை வெட்டாமல், நல்லா வளர்த்தி ருந்தார். அவரோட அந்த லுக்கைப் பார்த்ததும் எனக்கு செம ஷாக்கா இருந்துச்சு. ‘செமையா இருக்கீங்க. எந்த காம்ப் ரமைஸும் பண்ணாம, சிட்டி ஆஃப் காட் மாதிரி ஒரு கேங்ஸ்டர் படம் பண்ணுறதுக்கு இந்த கெட்டப் சூப்பரா இருக்கும்’னு சொன்னேன். ‘கேங்ஸ்டர் டைப்லதான் `தலைநகரம்’ படத்தோட இரண்டாம் பாகத்தை ப்ளான் பண்ணினேன். ஆனால், அது நான் நினைச்ச மாதிரி வரலை. இப்போ நீங்க சொல்ற பேட்டர்ன்ல கதை இருந்தால் சொல்லுங்க, அதையே நாம `தலைநகரம் - 2’ன்னு வெச்சு எடுக்கலாம்’னு சொன்னார். சுந்தர்.சி சாரை வெச்சு எத்தனை படம்னாலும் பண்ண லாம். அவர் பல ஹிட் படங் களைக் கொடுத்த இயக்குநரா இருந்தாலும், ஒரு நடிகரா ஸ்பாட்டுக்கு வந்துட் டார்னா, ‘என்ன பண்ணணும் சார், ஓகேவா சார்’ங்கிற வார்த்தை யைத் தாண்டி வேற எதுவுமே பேச மாட்டார்.’’

``20 வருடங்களில் 7 படங்கள் என்கிற எண்ணிக்கை உங்களுக்குப் போதுமானதா இருக்கா?’’

`` ‘நேபாளி’க்கு அப்புறம் அஞ்சு வருஷம் விளம்பரப் படங்களில் பிஸியாகிட்டேன். அப்புறம் ஷாமுக்காகப் பண்ணின படம்தான் `6 மெழுகுவத்திகள்.’ அதுக்கப் புறம் மறுபடியும் விளம்பரப் படங்கள். நான் பண்ணுற படங்கள் எல்லாமே வித்தியாச மான ஜானர்களில் இருக் கணும்னு நினைப்பேன். 2020-ல் இருந்து அடுத்தடுத்து படங்கள் பண்ணணும்னு ப்ளான் பண்ணியிருக்கேன். லாக்டெளன் முடிஞ்சதும் ‘நாற்காலி’ படத்தை முடிச்சிட்டு, `தலைநகரம் - 2’ படத்துக்கான ஷூட்டிங்கை ஆரம்பிக்கணும். அடுத்து விஜய் ஆண்டனியை வெச்சு ஒரு படம் பண்ணுறேன். அதுக் கடுத்து சிம்பு படம் இருக்கு. இனிதான் என் கரியரோட பீக் ஆரம்பிக்கும்.’’