Published:Updated:

“இது வலியைப் பதிவு செய்யும் வரலாறு!”

மேதகு 2 படத்தில்...
பிரீமியம் ஸ்டோரி
மேதகு 2 படத்தில்...

போரின்போது ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியாது. அன்றைக்கு சகோதர யுத்தம் என்று பிரிந்த அமைப்புகள் எல்லாம் இன்று யாருடன் இருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள்

“இது வலியைப் பதிவு செய்யும் வரலாறு!”

போரின்போது ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியாது. அன்றைக்கு சகோதர யுத்தம் என்று பிரிந்த அமைப்புகள் எல்லாம் இன்று யாருடன் இருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள்

Published:Updated:
மேதகு 2 படத்தில்...
பிரீமியம் ஸ்டோரி
மேதகு 2 படத்தில்...

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்து பாராட்டுகளைக் குவித்தது ‘மேதகு’ திரைப்படம். இதன் இரண்டாம் பாகம் ‘மேதகு 2’ இப்போது தயார். ‘‘அழிக்கப்பட்ட இனத்தின் உணர்வுகள் நம் இதயத்தை விட்டு அகலவில்லை. முதல் பாகத்தின் வெற்றியால் இரண்டாம் பாகத்தை இன்னும் சிறப்பாகக் கொடுக்கவேண்டும் என்ற பொறுப்பு கூடியிருக்கிறது. அதிக மக்களிடம் போய்ச் சேரவேண்டும் என்பதற்காக ஓ.டி.டி மட்டுமல்லாமல் தியேட்டர்களிலும் வெளியிட முயற்சி செய்துவருகிறோம். சென்சாருக்குப் பிறகுதான் தெரியும்” என்று தயக்கத்துடனும் ஏக்கத்துடனும் பேசத் தொடங்குகிறார், படத்தின் இயக்குநர் யோகேந்திரன்.

“இது வலியைப் பதிவு செய்யும் வரலாறு!”

`` ‘மேதகு’ முதல் பாகத்தைக் கிட்டு இயக்கினார். இரண்டாம் பாகத்திற்குள் நீங்கள் எப்படி வந்தீர்கள்?’’

‘‘பிரபாகரன் வாழ்வை ஒரு பாகத்திலேயே முடிக்க முடியாது. அவரின் வாழ்க்கை வரலாற்றை இளம் தலைமுறையினருக்குக் கடத்தவேண்டும் என்ற நோக்கத்தில் படத்தைத் தயாரிக்கும் தஞ்சை குகன்குமார், சுமேஷ், திருக்குமரன் ஆகியோர் மொத்தம் ஆறு பாகங்களாக வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். ஒவ்வொரு பாகத்திலும் புதிய இயக்குநருக்கு வாய்ப்பளிக்க முடிவெடுத்துள்ளதால், எனக்கு இரண்டாம் பாகத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. மூன்றாவது பாகத்தை வேறு இயக்குநர் இயக்குவார். யார் இயக்கினாலும் ஈழமக்களின் வலியைப் பதிவு செய்யவேண்டும். எனக்கு இதுதான் முதல் படம். 300-க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களை இயக்கிய அனுபவமே ‘மேதகு 2’ வாய்ப்பை அளித்தது.’’

‘‘பிரபாகரனின் இளமைக்காலத்தை ‘மேதகு’ பதிவு செய்தது. ‘மேதகு 2’?’’

‘‘முதல் பகுதியில் பிரபாகரன் கையில் ஆயுதம் ஏன் திணிக்கப்பட்டது என்பதைக் காட்டினார்கள். ‘மேதகு 2’-ல் அவர் இயக்கத்தை எப்படிக் கட்டமைத்தார், மக்களை எப்படி ஒருங்கிணைத்தார், எப்போது தலைமறைவானார், தலைமறைவுக்குப் பிறகு மக்கள் எப்படி தேடிவர ஆரம்பிக்கிறார்கள் போன்றவற்றையெல்லாம் பதிவு செய்துள்ளோம். 1987-ம் ஆண்டு சுதுமலையில் நிகழ்த்திய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் வரை படத்தில் இடம்பெறுகிறது. நிறைய தாக்குதல் காட்சிகள், மாநாடுகள், துப்பாக்கிச்சூடு காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தேனி, தஞ்சாவூர், காரைக்குடி, மன்னார்குடி, பாண்டிச்சேரி என முழுக்க முழுக்க ‘மேதகு 2’-ஐ தமிழ்நாட்டில்தான் எடுத்தோம். மன்னார்குடி அருகேயுள்ள எனது சொந்த ஊரான திருமைக்கோட்டை, தஞ்சையைச் சுற்றியுள்ள கிராமங்கள் பார்ப்பதற்கு யாழ்ப்பாணம் போலவே இருக்கும். அதனால், அங்கும் சில காட்சிகளைப் படமாக்கினோம்.

படத்தின் பட்ஜெட் 5 கோடி ரூபாய் வரை வந்திருக்கவேண்டும். குறைந்த பட்ஜெட்டில் முடிக்கக் காரணம், ‘இது நம் இனத்துக்கான கடமை’ என்று நான் உட்பட படத்தில் பணியாற்றும் பலர் சம்பளமே வாங்கவில்லை.”

“இது வலியைப் பதிவு செய்யும் வரலாறு!”
“இது வலியைப் பதிவு செய்யும் வரலாறு!”

`` ‘மேதகு 2’ டிரெய்லரில் எம்.ஜி.ஆர் வருகிறாரே, படத்தில் கலைஞரும் வருகிறாரா?’’

‘‘எம்.ஜி.ஆர் உதவிக்குப் பிறகுதான் இயக்கம் கட்டமைக்கப்பட்டது. கலைஞரும் வருகிறார். பழநெடுமாறன் அய்யா, வைகோ, புலமைப்பித்தன் என்று தமிழகத்திலிருந்து உதவிய அனைத்துத் தலைவர்களின் பங்களிப்பையும் பதிவு செய்துள்ளோம்.’’

``பிரபாகரன் சாயலைக்கொண்ட ஹீரோவை எப்படித் தேடிப்பிடித்தீர்கள்?’’

‘‘முதல் பாகத்தில் நடித்த குட்டிமணியையே இதிலும் நடிக்கவைக்க நினைத்தோம். ஆனால், ‘மேதகு 2’ பிரபாகரனின் 25 வயதிலிருந்து 30 வயது வரையான காலகட்டத்தைக் காட்டக்கூடியது. குட்டிமணி மிகவும் இளமையாக இருந்ததால் பொருந்தவில்லை. அதனால், அவர் முகச்சாயல் கொண்டவரைத் தேடிக்கொண்டே இருந்தோம். எங்கள் கலை இயக்குநர் மார்ட்டின் சார்தான் ஈரோட்டைச் சேர்ந்த கெளரிசங்கரை அறிமுகப்படுத்தினார்.’’

``புலிகள்மீது சகோதர யுத்தம், இயக்கத்தில் ஜனநாயகமே இல்லை போன்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறதே?’’

‘‘போரின்போது ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியாது. அன்றைக்கு சகோதர யுத்தம் என்று பிரிந்த அமைப்புகள் எல்லாம் இன்று யாருடன் இருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள். அவர் துரோகிகளை ஒதுக்கி வைத்தார். ஆனால், அவர் எடுத்த முடிவு சரியானது என்றுதானே நிரூபணம் ஆனது. விடுதலைப் புலிகள் யாரையெல்லாம் இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் துரோகம் செய்வார்கள் என்று நம்பினார்களோ, அது நடந்துகொண்டுதானே இருக்கிறது?”

“இது வலியைப் பதிவு செய்யும் வரலாறு!”
“இது வலியைப் பதிவு செய்யும் வரலாறு!”

``இலங்கையில் மக்கள் புரட்சி வெடித்திருக்கிறதே?’’

“இலங்கையில் இன்று நடக்கும் பிரச்னை மூன்றாண்டுக்கால ஆட்சிக் குளறுபடியால் ஏற்பட்டவை மட்டுமல்ல. அவர்களின் 50 ஆண்டுக்கால இனவெறியாலும் சிங்கள, பெளத்தவெறி ஆட்சியாலும்தான் வீழ்ச்சியே ஆரம்பமானது. போரை முடிக்க தமது சக்திக்குமீறி எல்லா நாடுகளிடமும் கடன் வாங்கினார்கள். இனவெறி கண்ணை மறைத்துவிட்டது. இனி மீண்டு வருவது கஷ்டம். எப்படி மீள்கிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.”