Published:Updated:

“லெஜண்டை குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் பிடிக்கும்!”

தி லெஜண்ட்' படத்தில்...
பிரீமியம் ஸ்டோரி
தி லெஜண்ட்' படத்தில்...

சரவணன் சாரை எங்களுக்கு 15 வருடங்களாகத் தெரியும். அவர் கடைகளுக்கான விளம்பரப் படங்களை நாங்கள்தான் செய்திட்டு வர்றோம்

“லெஜண்டை குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் பிடிக்கும்!”

சரவணன் சாரை எங்களுக்கு 15 வருடங்களாகத் தெரியும். அவர் கடைகளுக்கான விளம்பரப் படங்களை நாங்கள்தான் செய்திட்டு வர்றோம்

Published:Updated:
தி லெஜண்ட்' படத்தில்...
பிரீமியம் ஸ்டோரி
தி லெஜண்ட்' படத்தில்...

‘ஹாய்... மீட் பண்ணி நாளாச்சில்ல?' அழுத்தமாகக் கைகுலுக்குகிறார்கள் டைரக்டர்கள் ஜேடி - ஜெர்ரி. சினிமா, விளம்பரம் என எப்போதும் நீரோட்டத்தில் இருக்கிற இரட்டையர். சற்று இளைப்பாறலுக்குப் பிறகு ‘தி லெஜண்ட்' படத்தோடு வந்திருக்கிறார்கள்.

“கால இடைவெளி ஒண்ணும் பெருசா கிடையாது. அனுதினமும் சினிமாவைக் கவனிச்சுக்கிட்டே அதுக்குள்ளேதான் இருந்திருக்கோம். இன்னமும் நாங்க சினிமா ரசிகர்கள்தான். ஜனங்க மாறியிருக்காங்களா? ரசனை எப்படியிருக்கு? ஒரு படத்தை ஏத்துக்கிற வேகம் எந்த விதத்தில் இருக்கு? எல்லாத்தையும் கவனிச்சுக்கிட்டே இருக்கோம். அப்படி நல்ல உழைப்பைக் கொடுத்த படம் தான் ‘தி லெஜண்ட்.' நல்ல பொழுபோக்கு அம்சங்கள் நிறைஞ்ச படம். எந்த முன்தயாரிப்பும் எண்ணமும் இல்லாமல் வந்தால், சந்தோஷமா ரசிச்சிட்டுப் போகலாம். மிகச் சாதாரணமான மனிதன் தன் புத்திசாலித்தனத்தாலும், உழைப்பாலும் எப்படி முன்னேறித் தடைகள் பல கடந்து, பெரிய லெஜண்டாக உருவாகிறான் என்பதுதான் ஒன்லைன். இதனோட விரிவுதான் படம். கலகலன்னு ஒரு சினிமா. படம் பார்த்தால் சும்மா திருவிழா பார்த்த மாதிரி சந்தோஷமா இருக்கணும். அப்படி வந்திருக்கு படம்’’ நிதானமாகத் தொடர்கிறார்கள் இரட்டையர்.

“லெஜண்டை குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் பிடிக்கும்!”
“லெஜண்டை குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் பிடிக்கும்!”

“விளம்பரங்களில் பார்த்த லெஜண்ட் சரவணன் சினிமாவில் எப்படி வந்திருக்கார்?”

“சரவணன் சாரை எங்களுக்கு 15 வருடங்களாகத் தெரியும். அவர் கடைகளுக்கான விளம்பரப் படங்களை நாங்கள்தான் செய்திட்டு வர்றோம். ஒரு கட்டத்தில் அவரே மாடலாக வந்துவிட்டார். அவருக்கு அது பிடித்தது மாதிரி எல்லோருக்கும் பிடிக்க ஆரம்பித்தது. அவரே சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டார். அதற்கான பயிற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்தார். டான்ஸ், பைட் எல்லாவற்றிலும் பயிற்சி எடுத்துக்கிட்டுதான் ஸ்பாட்டுக்கே வந்தார். அவர் ஒன்றை நினைத்துவிட்டால் அதற்கான உழைப்பைப் போட தயங்கவே மாட்டார். சாத்தியமான்னு ஒரு கேள்வி தொக்கி நிற்கும். ஆனால் அதைச் சாத்தியம்னு ஆக்கிக் காட்டுவார். அப்படிப்பட்ட ஒருத்தர் ‘படம் பண்ணுங்க’ன்னு கேட்கும்போது எங்களுக்கு சந்தோஷமா இருந்தது. இப்படி ஒரு உத்வேகமான புரொட்யூசர் கிடைக்கும்போது ஒரு நல்ல படம் செய்ய முடியும்னு தோணுச்சு. சில பேர் விளையாட்டாகவும், கிண்டலாகவும் பேசியிருக்கலாம். படம் பார்க்கிற யாருக்கும் ஆரம்பித்து பத்தாவது நிமிஷமே சினிமாவின் சுவாரஸ்யத்தைப் புரிஞ்சுக்க முடியும்.

ஆரம்பிக்கும்போதே, ஒரு ரஜினிகாந்த், விஜய் படம் மாதிரி பண்ணிக் கொடுங்கன்னு கேட்டார். அதற்கேற்ற குவாலிட்டியிலும், கதைக்களனிலும்தான் இறங்குவோம். இது விஷூவல் ட்ரீட். உக்ரைன், குலுமணாலி பொள்ளாச்சி, கும்பகோணம், பெரிய சயின்ஸ் லேப்லன்னு ஒவ்வொரு ஷாட்டிலும் வித்தியாசமும் பிரமாண்டமும் காட்டியிருக்கோம். அவரோட அக்கறை எப்படின்னா... செட்டில் முதல்ல நுழையறதும், கடைசியா போறதும் அவர் கார்தான்.”

“லெஜண்டை குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் பிடிக்கும்!”

“அவரை ஹீரோவாக்க முடியும் என்கிற நம்பிக்கை எப்படி வந்தது?”

“30 வருஷமாக சினிமாவில் இருக்கோம். எத்தனையோ நடிகர்களோடு சினிமா, விளம்பரங்களில் சம்பந்தப்பட்டு வந்திருக்கோம். இவர் படம் பண்ணணும்னு சொன்னதும் நல்ல டைம் எடுத்து ஸ்கிரிப்ட் ஒர்க் பண்ணினோம். அந்த ஸ்கிரிப்ட்டே கதாநாயகனையும் படத்தையும் வழி நடத்தும்னு நம்பினோம். எங்க மேல எங்களுக்கு இருந்த நம்பிக்கையும் அவர் மேல எங்களுக்கு இருந்த நம்பிக்கையும்தான் இந்த சினிமா தொடங்கி நல்லபடியாக முடிஞ்சதுக்குக் காரணம். அதோட இந்தப் படத்தில் யுனிவர்சல் கன்டென்ட் ஒண்ணு வச்சிருக்கோம். அதனால்தான் இந்தப் படத்தை ஐந்து மொழிகளில் ரிலீஸ் பண்றோம். சிரிப்பு, நட்பு, காதல், நெகிழ்ச்சி, வெற்றினு படத்தில் கமர்ஷியல் படத்துக்கான எல்லா அம்சங்களும் இருக்கு.”

“லெஜண்டை குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் பிடிக்கும்!”
“லெஜண்டை குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் பிடிக்கும்!”

“ஏகப்பட்ட நடிகர்கள் இருக்காங்க...”

“தேவைப்பட்டது. அதனோட பெரிய கேன்வாஸ் அப்படி. விவேக், பிரபு, முனீஸ்காந்த், ரோபோ ஷங்கர், சிங்கம்புலி, தம்பி ராமையா, நாசர், லிவிங்ஸ்டன்னு நிறைய பேர் இருக்காங்க. ஊர்வசி ரவதுல்லா, கீத்திகா திவாரின்னு இரண்டு ஹீரோயின்கள். பாடல்கள் வெளியீட்டின் போது இந்தியாவின் டாப் 10 ஹீரோயின்களை ஒரே ஸ்டேஜில் கொண்டாந்து நிறுத்தினார். எல்லோரும் ஆச்சரியப்பட்டாங்க. எவ்வளவு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் கேட்டாலும், ‘கதை கேட்டதுன்னா பண்ணுங்க’ன்னு சொல்வார். படத்தோட இசையை ஹாரிஸ் ஜெயராஜ் கவனிச்சுக்கிட்டார். அவரோட ‘கொஞ்சிக் கொஞ்சி’ பாடலை உக்ரைனில் போய் எடுத்தோம். இப்ப போரில் அந்த இடங்கள் என்ன ஆகியிருக்கும்னு தெரியலை. நாங்கள் அந்த இடங்களின் அழகை அள்ளிட்டு வந்திருக்கோம். வேல்ராஜின் கேமரா அப்படி உழைச்சிருக்கு.”

“லெஜண்டை குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் பிடிக்கும்!”
“லெஜண்டை குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் பிடிக்கும்!”

“சரவணன் தொடர்ந்து நடிப்பாரா!”

“நிச்சயம். நம்ம ஆடியன்ஸ் அவரைப் பிடித்துக் கொள்வார்கள். நீங்க ஒவ்வொருத்தரும் அவரை விரும்பத் தொடங்கிடுவீங்க. அவர் முழு நேர நடிகர் ஆகணும்னு எல்லோரும் ஆசைப்படுவாங்க. சில முகங்கள் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் பிடிக்கும். அப்படிப்பட்ட கேரக்டரா சரவணன் எங்களுக்குத் தெரிகிறார்.”