Published:Updated:

ஆச்சர்யங்கள் நிறைந்த ஆஸ்கர் 2021!

ஆஸ்கர்
பிரீமியம் ஸ்டோரி
ஆஸ்கர்

ஒரு பெண் சிறந்த இயக்குநர் விருது வாங்குவது இது இரண்டாம் முறை.

ஆச்சர்யங்கள் நிறைந்த ஆஸ்கர் 2021!

ஒரு பெண் சிறந்த இயக்குநர் விருது வாங்குவது இது இரண்டாம் முறை.

Published:Updated:
ஆஸ்கர்
பிரீமியம் ஸ்டோரி
ஆஸ்கர்
ஆச்சர்யங்கள் நிறைந்த ஆஸ்கர் 2021!
Mark Terrill
கொரோனா எல்லாவற்றையும் மாற்றியிருக்கிறது. ரெட் கார்ப்பெட் இல்லை, பார்ட்டிகள் இல்லை. ஆனாலும் நடந்து முடிந்திருக்கிறது உலகின் மிகப்பெரும் திரைப்பட விருது விழாவான ஆஸ்கர். திரையரங்குகளில் படங்கள் வெளியாகாதது, ஓடிடி ரிலீஸ், பெரிய படங்கள் தள்ளிப்போனது எனப் பல்வேறு காரணிகளால் பிப்ரவரி கடைசி வாரத்தில் நடக்க வேண்டிய ஆஸ்கர், இந்த முறை ஏப்ரல் கடைசி வாரத்தில் நடந்திருக்கிறது. இந்த ஆண்டு ஆஸ்கர் விருது வென்ற படங்கள் குறித்துப் பார்ப்போம்.
ஆச்சர்யங்கள் நிறைந்த ஆஸ்கர் 2021!
ஆச்சர்யங்கள் நிறைந்த ஆஸ்கர் 2021!
ஆச்சர்யங்கள் நிறைந்த ஆஸ்கர் 2021!
Chris Pizzello
ஆச்சர்யங்கள் நிறைந்த ஆஸ்கர் 2021!
ஆச்சர்யங்கள் நிறைந்த ஆஸ்கர் 2021!

NOMADLAND

கணவரை இழந்து, வாழத் தவிக்கும் ஃபெர்ன், தன்னிடம் இருக்கும் எல்லாப் பொருள்களையும் விற்று, ஒரு வேனுக்குள் தஞ்சம் அடைகிறார். இனி, அந்த வேன் தான் ஃபெர்னின் எல்லாமும். பிழைப்புக்காக சின்னச் சின்ன வேலைகள் செய்யும் ஃபெர்ன், சந்திக்கும் மனிதர்களும், பிரச்னைகளும்தான் படத்தின் கதை. எல்லோரும் எதிர்பார்த்தது போல, சிறந்த நடிகைக்கான விருதை ஃபெர்ன் கதாபாத்திரத்தில் அசத்திய ஃப்ரான்சிஸ் மெக்டார்மண்ட் மூன்றாம் முறையாக வென்றார். வெள்ளை நிறத்தவர்கள் மட்டுமே அலங்கரித்து வந்த இயக்குநர் விருதை, முதல்முறையாக வென்றிருக்கிறார் சீனப் படைப்பாளி க்ளோயி ஸாவ். ஒரு பெண் சிறந்த இயக்குநர் விருது வாங்குவது இது இரண்டாம் முறை. (ஹர்ட்லாக்கர் - கேத்ரின் பிக்கலோ முதல் பெண்). சிறந்த படத்துக்கான விருதையும் வென்றுள்ளது NOMADLAND.

ஆச்சர்யங்கள் நிறைந்த ஆஸ்கர் 2021!

Ma Rainey’s Black Bottom

பிளாக் பேந்தராக நம் எல்லோருக்கும் அறிமுகமான சாட்விக் போஸ்மேனின் கடைசிப் படம். ஹீத் லெட்ஜரைப் போல, சாட்விக் போஸ்மேனும் மரணத்திற்குப் பின்னர் விருதை வெல்வார் என எதிர்பார்த்திருந்த நிலையில், அவரால் சிறந்த நடிகருக்கான விருதை வெல்ல முடியவில்லை. சிறந்த காஸ்ட்யூம் டிசைனுக்கான விருதை 89 வயதான ஆன் ரோத் வென்றார். ஆஸ்கர் விருது வெல்லும் வயதான பெண்மணி இவர்தான். சிறந்த மேக் அப்புக்கு மியா நீலும், ஜமைக்கா வில்சனும் பெற்றனர். ஆப்ரோ அமெரிக்கப் பெண்கள் இந்த விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது இதுவே முதல் முறை. “எங்களைப் போன்றவர்கள் வெல்வது மிகப்பெரிய அதிசயமாகப் பார்க்கப்படாத சூழல் விரைவில் உருவாகும்” என்றார் மியா நீல்.

ஆச்சர்யங்கள் நிறைந்த ஆஸ்கர் 2021!

JUDAS AND THE BLACK MESSIAH

அமெரிக்காவில் வெள்ளை அதிகார வர்க்கத்துக்கு எதிராக உருவாகிய பிளாக் பேந்தர் இயக்கத்தின் வரலாற்றைப் பேசியது இப்படம். பிளாக் பேந்தர்களின் தலைவரான ஃப்ரெட் ஹேம்ப்டனின் கூட்டத்தில் இருக்கும் பில் என்னும் இன்ஃபார்மரை வைத்து ஃப்ரெட் ஹேம்டனைத் தீர்த்துக்கட்டுகிறது FBI. படத்தின் ஒவ்வொரு சட்டமும் அரசியல் பேசியது. ஃப்ரெட் ஹேம்ப்டனாக நடித்த டேனியல் கலூயா, ஜூடாஸ் என்னும் பில்லாக நடித்த லேகித் ஸ்டேன்ஃபீல்டு இருவரும் சிறந்த துணை நடிகருக்கான பரிந்துரையில் இடம் பெற்றார்கள். டேனியல் கலூயா விருதை வென்றார். ‘இதற்கு மேல் பொறுத்திருக்க முடியாது, உனக்காக நீ சண்டை போடு’ என்கிற Fight for you (அந்த நாட்டின் ‘போராடடா ஒரு வாளேந்தடா’) பாடல் சிறந்த பாடலுக்கான விருதைப் பெற்றது.

ஆச்சர்யங்கள் நிறைந்த ஆஸ்கர் 2021!

THE FATHER

வயது முதிர்ந்த ஆண்டனி டிமென்ஷியாவால் பாதிக்கப்படுகிறார். தன் ஃபிளாட்டை தன்னிடமிருந்து பிடுங்கிக்கொள்ள சிலர் சதி செய்கிறார்கள் என்பது முதல் பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கும் அவருக்கு என்ன நடந்தது, அவர் எங்கு இருக்கிறார் என்பதைச் சொல்கிறது The Father திரைப்படம். 2012-ல் பிரெஞ்சு கதாசிரியர் ஃப்ளோரியன் ஜெல்லர் மேடை நாடகமாக இயற்றிய தி ஃபாதரை, திரைப்படமாக மாற்றியிருக்கிறார்கள். சிறந்த தழுவிய திரைக்கதைக்கான விருதை வென்றார் ஃப்ளோரியன் ஜெல்லர். வயது முதிர்ந்த தந்தையாகப் படத்தில் மிரட்டியிருப்பார் 83 வயதான ஆண்டனி ஹாப்கின்ஸ். 1992-ம் ஆண்டு சைலன்ஸ் ஆஃப் தி லேம்ப்ஸ் படத்துக்காகச் சிறந்த நடிகர் விருதை வென்றிருந்தார் ஹாப்கின்ஸ். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பின்னர், அதே விருதை வெல்கிறார் அவர். 83 வயதான ஒரு நபர் சிறந்த நடிகர் விருது வாங்குவதும் இதுதான் முதல் முறை.

ஆச்சர்யங்கள் நிறைந்த ஆஸ்கர் 2021!

MANK

பத்து விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்ட டேவிட் ஃபிஞ்சரின் MANK திரைப்படம் சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த புரொடக்‌ஷன் டிசைன் என இரு விருதுகளை வென்றது. கிளாசிக் படமான ‘சிட்டிசன் கேன்’ படத்துக்குத் திரைக்கதை எழுதிய, குடிக்கு அடிமையான எழுத்தாளர் ஹெர்மன் மன்கிவிக்ஸ்ஸின் (Herman J. Mankiewicz) வாழ்க்கை அனுபவங்களைப் பேசியது MANK. 1941-ல் வெளியான இந்த ‘சிட்டிசன் கேன்’ படம் அப்போது சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை மட்டுமே வென்றது. ஹெர்மனின் அனுபவங்களையும் ‘சிட்டிசன் கேன்’ படம் உருவான விதத்தையும் வைத்து எடுக்கப்பட்ட ‘மேங்க்’, தற்போது ‘சிட்டிசன் கேன்’ படத்தைவிடவும் ஓர் ஆஸ்கர் அதிகமாக வென்றிருக்கிறது.

* கிரெய்க் ஃபோஸ்டர் தன் வாழ்நாளில் ஓராண்டு பின்தொடர்ந்த ஆக்டோபஸின் வாழ்க்கையைச் சொன்ன My octopus teacher சிறந்த டாக்குமென்டரி விருதை வென்றது. எவ்வளவு தப்பிக்க முயன்றாலும், ஓர் ஆப்ரோ அமெரிக்கரின் உயிரை ஒரு வெள்ளை நிற அதிகாரியால் பறிக்க முடியும் என்கிற அரசியலைப் பேசிய Two distant strangers, சிறந்த குறும்படத்துக்கான விருதைப் பெற்றது.

* தன் வாழ்வின் முக்கியத் தருணத்தை அடையாமல் மரணிக்கும் ஓர் ஆப்ரோ அமெரிக்கரின் ஆவியும், வாழவே பிடிக்காத ஒரு வெள்ளை ஆவிக்கும் நடக்கும் ஜாலி எமோஷனல் போராட்டங்கள்தான் அனிமேஷன் படமான Soul. சிறந்த இசை, சிறந்த அனிமேஷன் படம் ஆகிய இரு விருதுகளைத் தட்டிச் சென்றது Soul.

* பெரும் எதிர்பார்ப்பில் வெளியான நோலனின் ‘டெனெட்’, சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் விருதை மட்டுமே வென்றது. மினரி திரைப்படத்தில் பாட்டியாக நடித்த யஹ் - ஜங் - யன் ஆஸ்கரிலும் சிறந்த துணை நடிகைக்கான விருதை வென்றார். நாற்பதுக்கும் மேற்பட்ட விருதுகளை மினரிக்காகப் பெற்றுவிட்டார் இந்தக் கொரிய நடிகை.

* சிறந்த நடிகைக்கான விருதை வென்ற ஃபிரான்சஸ் மெக்டார்மண்டு, “விரைவில் நாம் அனைவரும் திரையரங்குகளில் அருகருகே அமர்ந்து இருட்டில் எல்லாத் திரைப்படங்களையும் பார்க்க வேண்டும்’’ என்றார். அந்த நாளுக்காகக் காத்திருப்போம்.