சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

திறக்கப்படுமா கோலிவுட் கதவுகள்?

கோலிவுட்
பிரீமியம் ஸ்டோரி
News
கோலிவுட்

ஐபிஎல் போட்டிகள் ஆரம்பமாக இருப்பதால், அந்தப் போட்டிகளையும் தியேட்டரில் திரையிடுவதற்கு அனுமதி கேட்டோம்.

யில்கள், பேருந்துகள் ஓடத்தொடங்கிவிட்டன. ஷாப்பிங் மால்களும் திறக்கப்பட்டுவிட்டன. இனி திறக்கப்பட வேண்டியை தியேட்டர்கள் மட்டுமே! தமிழ்த்திரையுலகம் அதற்குத் தயாராக இருக்கிறதா? கடந்த ஆறு மாதங்களாக திரையரங்குகள் திறக்கப்படாததால், தங்களின் பொருளாதாரப் பிரச்னைகளை கவனத்தில் எடுத்துக்கொண்டு தங்களுக்குச் சில சலுகைகளை அளிக்க வேண்டும் என அவர்கள் மாநில அரசிடம் கேட்டிருக்கிறார்கள். அந்தச் சலுகைகள் என்னென்ன, அவர்களின் திட்டம் என்ன…. தமிழ்நாடு திரைப்பட தியேட்டர் மற்றும் மல்டிபிளக்ஸ்உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியமிடம் கேட்டோம். ``ஆறு மாசமா தியேட்டர்கள் திறக்கப்படாததால் சொத்து வரி, மாநகராட்சி வரியில் இருந்து விலக்கு கேட்டிருக்கிறோம். ஜி.எஸ்.டி-யைக் குறைக்கச் சொல்லியும், மின் கட்டணத்தில் சலுகையும் கேட்டிருக்கிறோம். குறைவான ஆள்களை மட்டும்தான் தியேட்டருக்குள் அனுமதிக்கணும்கிற நிலைதான் வரும். அதுமட்டுமல்லாமல், இந்த மாதிரியான சூழலில் கேன்டீனில் வியாபாரமும் எப்படியிருக்கும்னு சொல்ல முடியாது. அதற்காக, டிக்கெட் விலையை உயர்த்தவும் முடியாது. ஏன்னா, இந்த மாதிரியான சூழலில் மக்கள் தியேட்டருக்கு வருவதே பெரிய விஷயம். அதனால், அரசாங்கம் எங்களுக்கு இந்தச் சலுகைகளைக் கட்டாயம் செய்ய வேண்டும். முக்கியமான தமிழ்ப்படங்கள் மட்டுமல்லாது, கிறிஸ்டோபர் நோலனின் `டெனட்’, ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தையும் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளோம். அதுமட்டுமல்லாமல், ஐபிஎல் போட்டிகள் ஆரம்பமாக இருப்பதால், அந்தப் போட்டிகளையும் தியேட்டரில் திரையிடுவதற்கு அனுமதி கேட்டோம். இதுவரைக்கும், ஐ.பி.எல் போட்டிகளை தியேட்டரில் திரையிட்டது இல்லை என்பதால் அனுமதி கிடைப்பதில் கொஞ்சம் தாமதம் ஏற்படுகிறது. எதுவாக இருந்தாலும் தியேட்டர் திறக்கப்பட்டால்தான் விடிவுகாலம் கிடைக்கும். அதனால், அரசாங்கத்திடம் இருந்து சீக்கிரம் நல்ல செய்தி வரவேண்டும்’’ என்கிறார் திருப்பூர் சுப்பிரமணியம். அக்டோபரிலிருந்து திரையரங்குள் திறக்கப் பட்டால் அரசாங்கம் கடுமையான விதிமுறைகளையும் பின்பற்றச் சொல்லும் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

திறக்கப்படுமா கோலிவுட் கதவுகள்?
திறக்கப்படுமா கோலிவுட் கதவுகள்?
திறக்கப்படுமா கோலிவுட் கதவுகள்?
திறக்கப்படுமா கோலிவுட் கதவுகள்?
திறக்கப்படுமா கோலிவுட் கதவுகள்?
திறக்கப்படுமா கோலிவுட் கதவுகள்?

இதற்கிடையில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் நடிகர்கள் கடந்த ஆறு மாத காலமாக, தங்களது குடும்பத்தினரோடு நேரத்தைச் செலவழித்துவருகின்றனர். எப்போது தியேட்டர் திறக்கும் எனக் காத்திருக்கிறார்கள். இடையே டச் விட்டுப்போன ஜிம், நடனம் ஆகியவற்றால், கொஞ்சம் வழக்கமான ஷேப்பில் இல்லாதவர்கள், மீண்டும் பேக் டூ ஃபார்ம் திரும்ப மெனக்கெட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் சிலர் கொரோனா முழுக்கவே எண்டு கார்டு போட்டால்தான், க்ளாப் போர்டு முன் நிற்க முடியும் எனத் திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்கள். அதனால், தியேட்டர்கள் திறந்தாலும் வழக்கம் போல் செயல்பட சில மாதங்களாகும். அதுவரை பெரிய படங்கள் வெளியிடப்படுவதிலும் சிக்கல்கள் இருக்கலாம். கொரோனா சுணக்கம் முடிந்து படப்பிடிப்புகள் முழுவேகத்தில் நடைபெறவும் சில மாதங்களாகும் என்பதால், தியேட்டர்கள் வழக்கமான பரபரப்புடன் செயல்பட குறைந்தபட்சம் 6 மாதங்களேனும் ஆகும் என்பதுதான் இப்போதைய நிலவரம். அதுவரை ஆங்கிலப் படங்களும், ஐ.பி.எல்-லும்தான் கைகொடுக்க வேண்டும்!