Published:Updated:

`ஊ சொல்றியா' சர்ச்சை: இந்த இலக்கணங்களைத் தாண்டி `புஷ்பா'வில் மட்டும் புதிதாக என்ன இருக்கிறது?

'ஊ சொல்றியா' பாடலில் சமந்தா

தமிழில் இன்றைக்கு நேற்றல்ல; 60-களில் இருந்தே திரைப்படங்களில் `ஐட்டம் சாங்' பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்றைக்கு வரும் படங்களில் கவர்ச்சி மிகுந்திருப்பதாகப் பொதுவாகக் கூறுவார்கள். ஆனால், அப்போதைய கறுப்பு வெள்ளைப் படங்களிலேயே அதிக கவர்ச்சியில் பாடல்கள் வெளியாகியிருக்கின்றன.

`ஊ சொல்றியா' சர்ச்சை: இந்த இலக்கணங்களைத் தாண்டி `புஷ்பா'வில் மட்டும் புதிதாக என்ன இருக்கிறது?

தமிழில் இன்றைக்கு நேற்றல்ல; 60-களில் இருந்தே திரைப்படங்களில் `ஐட்டம் சாங்' பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்றைக்கு வரும் படங்களில் கவர்ச்சி மிகுந்திருப்பதாகப் பொதுவாகக் கூறுவார்கள். ஆனால், அப்போதைய கறுப்பு வெள்ளைப் படங்களிலேயே அதிக கவர்ச்சியில் பாடல்கள் வெளியாகியிருக்கின்றன.

Published:Updated:
'ஊ சொல்றியா' பாடலில் சமந்தா

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகியிருக்கும் `புஷ்பா’ திரைப்படத்தில் சமந்தா ஆடியுள்ள தெலுங்கில் `ஓ அந்தவா’ (தமிழில், `ஊ சொல்றியா மாமா’) பாடல் ஆண் சமூகத்தைக் கொச்சைப்படுத்துவதாகக்கூறி ஆந்திராவில் ஓர் ஆண்கள் சங்கம் அப்பாடலுக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளது.

'ஊ சொல்றியா' பாடலில் சமந்தா
'ஊ சொல்றியா' பாடலில் சமந்தா

அந்தப் பாடலில் அப்படி என்னதான் சொல்லப்பட்டிருக்கிறது என்று கேட்டால், ஆண்களுக்கு எந்த வரையறைகளும் கிடையாது; பெண் என்றாலே அவளை மோகத்துடன்தான் பார்ப்பார்கள் என்றும், அணியும் ஆடையில் எதுவுமில்லை, பெண்ணின் நிறத்தில் எதுவுமில்லை, எப்படியிருந்தாலும் ஆணுக்கு அதெல்லாம் பிரச்னையில்லை என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. அதாகப்பட்டது `விக்ஸ்ங்குறதைத்தான் இப்படி சுத்தி சுத்தி எழுதியிருக்கேன்’ என்பதைப் போல ஆண்கள் எல்லோரும் காய்ந்த மாடுகள் என்பதைத்தான் இவ்வண்ணம் பாடலாய் இயற்றியிருக்கிறார்கள். இதைக் கேட்டதும் நரம்பு புடைக்க ஆந்திராவிலுள்ள ஓர் ஆண்கள் சங்கம் ஆண் சமூகத்தையே அவமதித்துவிட்டதாகக் கொந்தளித்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``காலம்காலமாக `ஐட்டம் சாங்' என்கிற பெயரில் பெண்களை கவர்ச்சியாக ஆட விட்டு, பெண் சமூகத்தையே இழிவுபடுத்தும் விதமாக வரிகள் இயற்றப்பட்ட போதெல்லாம் கொந்தளிக்காத ஆண் சமூகம் இப்போது மட்டும் கொதித்தெழுகிறதா? ஒரு மாற்றத்துக்காக ஆண்களைச் சொன்னால்தான் என்ன?" என்பது ஒரு தரப்பு.

``ஆண்டாண்டு காலமாகப் பெண்களை இழிவுபடுத்திவிட்டதாகப் பெண்கள் அமைப்புதான் வழக்குகள் தொடுத்து வந்துள்ளன. தற்போது ஆண்கள் சார்பாக ஆண் சங்கம் ஒன்று வழக்கு தொடர்ந்தால்தான் என்ன என்பது இன்னொரு தரப்பு.

Allu Arjun | Pushpa
Allu Arjun | Pushpa

உண்மையைச் சொல்லப்போனால் அந்த லிரிக்கல் வீடியோவைப் பார்த்த ஆண்கள் இதை அவ்வளவு ஒன்றும் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை.

தமிழில் இப்பாடலை இயற்றிய பாடலாசிரியர் விவேகா, ஆண்களைத் திட்டும் நோக்கோடு தான் இப்பாடலை எழுதவில்லை என்றும், ஒரு மாற்றமாய் இருக்கட்டும் என்று எழுதிய வரிகள் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்துக்குப் பிடித்துப் போகவே அதை மற்ற மொழிகளிலும் மொழிபெயர்த்து விட்டார்கள் என்று தெரிவித்திருக்கிறார். சொல்ல முடியாது... வழக்கு தொடர்ந்த அந்த ஆண்கள் சங்கம் 'புஷ்பா' திரைப்படக் குழுவின் பி டீமாகக்கூட இருக்கலாம். ஏனென்றால் இந்த சர்ச்சை கூட படத்துக்கு பப்ளிசிட்டிதானே.

இதில் வியக்கத்தகு அம்சங்களின் சிறு பட்டியல்…

அ. இப்பாடல் இடம்பெற்றிருப்பது சுகுமார் திரைப்படத்தில். சுகுமாரின் முதல் படமான ஆர்யா படத்தைத் தவிர்த்து கவர்ச்சி நடனம் இல்லாமல் அவர் படமே எடுத்ததில்லை. இதற்கு முந்தைய படமான `ரங்கஸ்தலம்’ படத்தில் பூஜா ஹெக்டேவை வைத்து ஜிகிலு ராணி பாட்டை எடுத்திருந்தார்.

பூஜா ஹெக்டே
பூஜா ஹெக்டே

ஆ. ஆண் சமூகத்தின் மீதான காட்டமான விமர்சனமாகக் கருதப்படும் இப்பாடலின் வரிகளேகூட ஒரு பெண்ணின் கவர்ச்சி நடனம் வழியாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறது. கிள்ளிக்கொண்டே தொட்டிலை ஆட்டுவது போல.

இ. திட்டமிட்டுச் செய்யப்பட்டதா அல்லது தற்செயலாக நிகழ்ந்ததா என்று தெரியவில்லை. தீவிர பெண்ணியவாதியான ஆண்ட்ரியாவை தமிழில் இப்பாடலை பாட வைத்திருப்பது.

ஈ. வியப்பிலும் வியப்பு ஆந்திராவைச் சேர்ந்த ஆண்கள் சங்கம் இதற்கு வழக்கு தொடர்ந்திருப்பது. நடிகையைக் கவர்ச்சியாகக் காண்பிக்கும் வித்தையில் தெலுங்கு சினிமாவிடமெல்லாம் தமிழ் சினிமா கையேந்தி நிற்க வேண்டும். மாஸ் ஹீரோ படமென்றால் கட்டாயம் `ஐட்டம் சாங்' இருந்தே தீர வேண்டும். பெண்களின் மீது கை வைத்தால் வெட்ட வேண்டியது விரல்களை அல்ல தலையை என்கிற கண்ணியமான பாகுபலியையே `மனோகரி’ என்று ஐட்டம் சாங் ஆட வைத்த திரையுலகைக் கண்டு திளைத்துவிட்டு தற்போது பொங்குவது. அவர்களுக்கு `கவர்ச்சி' வேண்டும்; `இகழ்ச்சி' வேண்டாம்… அதாவது கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை.

`ஊ சொல்றியா' சர்ச்சை: இந்த இலக்கணங்களைத் தாண்டி `புஷ்பா'வில் மட்டும் புதிதாக என்ன இருக்கிறது?

புஷ்பா படத்தைத் தாண்டி பொதுவாக ஐட்டம் சாங் குறித்துப் பார்ப்போம். `ஐட்டம் சாங்' என்பதைத் தமிழில் எப்படி மொழியாக்கம் செய்வதென தெரியவில்லை. கூகுள் டிரான்ஸ்லேட்டரில் மொழிபெயர்த்தால் `பொருள் பாடல்’ என்று கூறிவிடுமோ என்கிற பயத்தில் அதை `ஐட்டம் சாங்' என்றே சொல்லிவிடலாம் என்கிற முடிவுக்குள் வந்துவிட்டேன். சினிமாவில் ஐட்டம் சாங்குக்கான தேவை இருக்கிறதா என்று பொதுவாகக் கேட்டீர்கள் என்றால், `சினிமாவில் பாடலுக்கான தேவையே இல்லை' என்று உலக சினிமா ஒலக்கைகள் ஓடி வந்து சொல்வார்கள். ஆகவேதான் வணிக சினிமா என்கிற பதத்தைப் பயன்படுத்த நேர்கிறது. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரைக்கும் ஐட்டம் சாங்குக்கான தேவையை திரைக்கதையே முடிவு செய்கிறது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் `ஐட்டம் சாங்' வைக்கலாம் என்பது இயக்குநரின் விருப்பத்தேர்வையொட்டியது. அது மட்டுமன்றி வணிக ரீதியான தேவையையொட்டியும் இயக்குநர் செயல்பட்டாக வேண்டிய தேவை இருக்கிறது.

தமிழில் இன்றைக்கு நேற்றல்ல 60-களில் இருந்தே திரைப்படங்களில் `ஐட்டம் சாங்' பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்றைக்கு வரும் படங்களில் கவர்ச்சி மிகுந்திருப்பதாக பொதுவாகக் கூறுவார்கள். 60-களில் கறுப்பு வெள்ளைப் படங்களிலேயே இன்றைக்குத் தெலுங்கு ஐட்டம் சாங்கில் காட்டப்படுவதற்கு இணையான கவர்ச்சியில் பாடல்கள் வெளியாகியிருக்கின்றன. முன்பு கதாநாயகிகள் கவர்ச்சி காட்ட மாட்டார்கள். ஐட்டம் சாங்குக்கென்றே தனி நடிகைகள் இருப்பர். இப்போது கதாநாயகிகளே ஐட்டம் சாங்கும் ஆடுகின்றனர் என்பது மட்டும்தான் வேறுபாடு.

வணிக சினிமாவின் ஒரே நோக்கம் படம் பார்க்க வருகிற பார்வையாளர்களைத் திருப்திப்படுத்துவது. ஒவ்வொரு காலகட்டத்துக்கேற்ப பார்வையாளர்களின் ரசனையில் மாற்றம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். அதற்குத் தகுந்தாற்போல் சினிமாவும் தன்னை தகவமைத்துக்கொள்வது அவசியம். பார்வையாளர்கள் விரும்பாத ஒன்று சினிமாவில் நிலைத்திருக்காது. விலை போகாத சரக்கை யார் விற்பனைக்கு வைப்பார்கள். அந்த அடிப்படையில் பார்த்தோமென்றால் சுமார் 50 ஆண்டுகளாகத் தமிழ் சினிமாவில் `ஐட்டம் சாங்' இருந்து வருகிறது.

கில்லி
கில்லி

இவ்வகைப் பாடல்களைப் பொறுத்தவரை ஆடுகிற நடிகை, இசை மற்றும் பாடல் வரிகள் எவ்வளவு முக்கியமோ அதே அளவு திரைக்கதையில் அப்பாடல் எந்தச் சூழலில் இடம்பெறுகிறது என்பதும் முக்கியம். தமிழ் சினிமாவில் பெரும்பாலான ஐட்டம் சாங்குகள் தனித்து துண்டாக இல்லாமல் திரைக்கதை ஓட்டத்துடனேயே இணைக்கப்பட்டிருக்கும். நாயகன் அப்பாட்டினூடாக ஏதாவதொன்றைத் துப்பறிவார். `ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் சுகம்’ என்கிற பாடலைப் போல நாயகனும் நாயகியுமே கூட மாறுவேடத்தில் ஆடுவார்கள். பில்லா படத்தில் இடம்பெற்றிருக்கும் `நினைத்தாலே இனிக்கும் சுகமே’ பாடலின் முடிவில் அப்பெண் ரஜினியைக் கொல்வதற்காக வந்தவளாக இருப்பாள். அஞ்சாதே படத்தில் இடம்பெற்றுள்ள `கத்தால கண்ணால குத்தாத’ பாடலின் முடிவில் பாண்டியராஜன் கதாபாத்திரம் கொலை செய்யப்படும். இவையெல்லாம் சிறு உதாரணங்கள்தான் நிறைய படங்கள் ஐட்டம் சாங்கை சரியான இடத்தில் பொருத்தியிருக்கும். இது போன்ற பாடல்கள் விறுவிறுப்பான திரைக்கதையில் தொடர்ச்சியாகப் பார்வையாளர்களை அடுத்து என்ன நடக்கும் என்கிற பதற்றத்திலேயே வைக்காமல் சற்றே இளைப்பாறுதல் அளிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் வணிக சூத்திரம் என்று சொல்லலாம்.

கவர்ச்சி அல்லாத குத்துப்பாடல்கள்கூட இந்த இளைப்பாறுதலை அளிக்கும். தமிழில் மிகப்பெரும் வெற்றிபெற்ற படமான `கில்லி’ திரைப்படத்தில் வரும் `அப்படிப்போடு’ பாடலை எடுத்துக் கொள்வோம். நாயகனுக்கோ வில்லனிடமிருந்து நாயகியை மீட்டு அமெரிக்காவுக்கு அனுப்ப வேண்டும் என்கிற நோக்கத்துக்காக போலீஸ்கார தந்தையையே பகைத்துக்கொண்டு வந்திருப்பார். நாயகிக்கோ நாயகன் மீது காதல் துளிர்விட்டிருக்கும். க்ளைமாக்ஸை நெருங்கும் இப்படியானதொரு சூழலில் `அப்படிப்போடு’ பாடல் தந்த இளைப்பாறுதல் இருக்கிறதே... அதுதான் பார்வையாளர்களுக்குத் தேவை.

புஷ்பா படத்தின் `ஊ சொல்றியா மாமா’ சர்ச்சை குறித்து நடிகர் அல்லு அர்ஜுனிடம் கேட்கப்பட்டபோது, ``அப்பாடல் வரிகள் உண்மைதானே" என்று கூலாகச் சொன்னார். இங்கே வந்து `ஆம்பள புத்தி’ என்று எப்படிப் பொதுவாகச் சொல்லலாம் என்று கேட்டால் இதே சினிமாவில்தான், `இந்த பொண்ணுங்களே இப்படித்தான்’ என்றும் சொல்லப்பட்டதை எடுத்து வைப்பார்கள். பாலின மோதலாகவெல்லாம் இதைக் கொண்டு செல்லத் தேவையில்லை. இப்பாடலில் கொதித்தெழவும், கொண்டாடித் தீர்க்கவும் எதுவுமில்லை… இது கமர்ஷியல் இலக்கணங்களோடு எடுக்கப்பட்ட ஒரு கவர்ச்சி பாட்டு; அவ்வளவே!

- ஜிப்ஸி