சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

“விமர்சனங்களால் மனம் உடைஞ்சிட்டேன்!”

அர்ச்சனா - சாரா
பிரீமியம் ஸ்டோரி
News
அர்ச்சனா - சாரா

யூடியூப் என்பது பொதுவான தளம். அதுல நீங்க இருக்கலாம், இருக்கக்கூடாதுன்னு யாரும் சொல்ல உரிமை கிடையாது.

‘சூப்பர் மாம்’ நிகழ்ச்சியில் டி.வி-யில் கலக்கிய அர்ச்சனா - மகள் சாரா ஜோடி ‘டாக்டர்’ படத்திலும் அம்மா - மகளாகவே நடித்து அசத்தியிருக்கிறார்கள்.

“நெல்சன் எனக்கு நல்ல நண்பர். சாராவே எனக்கு மகளா நடிக்கட்டும்னு டீம் தான் முடிவெடுத்திருக்காங்க. இது சிவகார்த்திகேயன் நடிக்கிற படம்கிறதே ரொம்பநாள் கழிச்சுத்தான் தெரியும். செட்ல எஸ்கே ரொம்ப குறும்புத்தனமான ஆள். சீரியஸா நாம உயிரைக் கொடுத்து நடிச்சிட்டிருப்போம்.. அவர் நமக்கு எதிர்ல நின்னு ஏதாவது காமெடி பண்ணிட்டு இருப்பார். நமக்கும் அந்தச் சிரிப்பு தொற்றிக்கொள்ளும்” என்று அர்ச்சனா சிரிக்க, சாரா தொடர்ந்தார்.

“என் ஃப்ரெண்ட்ஸைப் படம் பார்க்கக் கூட்டிட்டுப் போனேன். அவங்க என்னைக் கலாய்ச்சிட்டு ‘சுமதி’க்கு ஃபேன் ஆகிட்டாங்க. இப்ப என்னைவிட சுமதிகூடதான் அதிக நேரம் பேசுறாங்க” எனச் செல்லமாய் அம்மாவின் கன்னத்தைக் கிள்ளுகிறார்.

“விமர்சனங்களால் மனம் உடைஞ்சிட்டேன்!”
“விமர்சனங்களால் மனம் உடைஞ்சிட்டேன்!”
“விமர்சனங்களால் மனம் உடைஞ்சிட்டேன்!”
“விமர்சனங்களால் மனம் உடைஞ்சிட்டேன்!”

“ஷகிலாம்மா, நான் எல்லாரும் ஒண்ணாதான் படம் பார்த்தோம். படம் முடிஞ்சதும் நான் முதலில் வெளியே வந்துட்டேன். அவங்க எனக்கு போன் பண்ணி, ‘நீ நல்ல நடிகைதான் ஒத்துக்கிறேன். ஆனா, உன்னுடைய நிஜப் பொண்ணுங்கிறதனாலதானே நீ இந்த அளவுக்கு எமோஷனலாகி அழுத’ன்னு கேட்டாங்க. ஷகிலாம்மா சொன்னது சரிதான். சொந்தப் பொண்ணுங்கிறதனால அவ காணாமப்போனா எப்படித் தவிப்பேனோ அந்தத் தவிப்பை என்னால ஈஸியா வெளிக்காட்ட முடிஞ்சதுன்னு நினைக்கிறேன்.

‘சுமதி’யோட ஒன் சைட் லவ் காமெடி இவ்வளவு ஹிட் ஆகும்னு நான் கொஞ்சமும் எதிர்பார்க்கல. தனித்தனியா நிறைய ஷாட்ஸ் எடுப்போம். படத்துல என்ன வருதுங்கிறது படம் பார்க்கும்போதுதான் தெரியும். முதல்நாள் படம் பார்க்கும்போது எனக்கே சர்ப்ரைஸா இருந்துச்சி. பாத்ரூம்ல அவங்க பேசுற சீனெல்லாம் எனக்குத் தெரியாது. ஸ்கிரீன்ல பார்க்குறப்ப நானும் செமையா என்ஜாய் பண்ணினேன்” என்று சொல்லும் அர்ச்சனா, யூடியூப் வீடியோக்களுக்காகத் தன்மீது முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் குறித்தும் மனம் திறந்தார்.

“விமர்சனங்களால் மனம் உடைஞ்சிட்டேன்!”
“விமர்சனங்களால் மனம் உடைஞ்சிட்டேன்!”
“விமர்சனங்களால் மனம் உடைஞ்சிட்டேன்!”
“விமர்சனங்களால் மனம் உடைஞ்சிட்டேன்!”
“விமர்சனங்களால் மனம் உடைஞ்சிட்டேன்!”

“யூடியூப் என்பது பொதுவான தளம். அதுல நீங்க இருக்கலாம், இருக்கக்கூடாதுன்னு யாரும் சொல்ல உரிமை கிடையாது. யூடியூப் வீடியோக்களால் பல விமர்சனங்கள் என்மேல வந்தப்போ ரொம்பவே உடைஞ்சிட்டேன். சாராதான் என்னை மீட்டெடுத்தா. அவகிட்ட இருந்த மன திடம் அப்ப என்கிட்ட இல்ல. ஆனா இப்ப எந்த நெகட்டிவ் விஷயங்களும் என்னை பாதிக்கிறதில்லை. ஏன்னா, என்னைச் சுற்றி பாசிட்டிவான அத்தனை உறவுகள் இருக்காங்க. அவங்களைக் கொண்டாட ஆரம்பிச்சிருக்கேன்” என்கிறார் நிதானம் நிரம்பிய வார்த்தைகளில்.