Published:Updated:

`மறக்காம மைசூர்பா வாங்கிக் கொடுங்க!'- `தீப்வீர்' ரொமான்ஸுக்கு நெட்டிசன்களின் அன்பு ரியாக்‌ஷன்ஸ்!

முன்னாள் கிரிக்கெட்டர் கபில்தேவின் வாழ்க்கை வரலாற்றில் ரன்வீர் `கபில்தேவ்' ஆகவும் தீபிகா கபில் மனைவியாகவும் நடித்து வருகிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சரியான ஜாலி கேலி தம்பதி தீபிகா படுகோனும் ரன்வீர் சிங்கும். தீபிகா தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றினால், `ஏய்...நீ என்னைக் கொல்கிறாய் பேபி' என்று கமென்ட்டில் வந்து கொஞ்ச ஆரம்பித்துவிடுவார் ரன்வீர். `எனக்கும் அவருக்கும் ஒரே சைஸ் ஷூ. அதனால் அடிக்கடி ஷூக்களை மாற்றிக்கொள்வோம். எனக்குத் தேவைப்பட்டால் அவருடைய பர்ஸில் இருந்து பணத்தை எடுத்துக்கொள்வேன்' என்று தனக்கும் ரன்வீருக்கும் இடையிலான நெருக்கத்தை பொதுவெளியில் பகிர்ந்துகொள்வார் தீபிகா. இவையெல்லாம் நெட்டிசன்களால் வைரலாகக் கொண்டாடப்படும். இதைப் படித்துக்கொண்டிருக்கிற இந்த நேரத்திலும் `தீப்வீர்' ரொமான்ஸ் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிக்கொண்டிருக்கிறது.

Deepika Padukone - Ranveer singh
Deepika Padukone - Ranveer singh
instagram.com/ranveersingh

முன்னாள் கிரிக்கெட்டர் கபில்தேவின் வாழ்க்கை வரலாற்றில் ரன்வீர் `கபில்தேவ்' ஆகவும் தீபிகா கபில் மனைவியாகவும் நடித்து வருகிறார்கள். படத்தின் பெயர் 83. இந்தப் படத்தின் புரொமோஷனுக்காக சென்னை வந்திருந்தார் ரன்வீர். `சென்னையிலிருந்து வரும்போது ஒரு கிலோ மைசூர்பாவும், இரண்டரை கிலோ ஸ்பைசி உருளைக்கிழங்கு சிப்ஸும் வாங்கி வரச் சொல்லி கணவருக்கு கமென்ட்டில் கட்டளையிட்டிருக்கிறார் தீபிகா.

தீபுவின் இந்த அன்புக்கட்டளையைப் படித்த நெட்டிசன்கள், `தீபிகா, உண்மையான தென்னிந்தியப் பெண்' என்றும், `மனைவியின் அன்பு அலப்பறைகள்' என்றும் கமென்ட் செய்து ஹார்ட்டின் விட்டுக்கொண்டிருக்கிறார்கள். கூடவே, சென்னையில் மஸ்கோத் அல்வாவும் சோன் பப்டியும்கூட ருசியாக இருக்கும்.

அவற்றையும் ரன்வீரை வாங்கி வரச் சொல்லுங்கள் என்று தீபிகாவுக்கு ஐடியாவும் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் ரன்வீர் அண்ணா, `அண்ணிக்கு மறக்காமல் ஒரு கிலோ மைசூர்பா வாங்கிட்டுப் போங்க' என உறவினர்போல் சொல்கிறார்கள்.

கபில்தேவ் பயோபிக்
கபில்தேவ் பயோபிக்
instagram.com/ranveersingh

தீப்வீர் திருமண விருந்தில் தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மைசூர்பா பரிமாறப்பட்டது. அந்த ருசியை தீபிகா இன்னமும் மறக்கவில்லைபோல.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு