Published:Updated:

```கைதி’ டீம் `விஜய் 64’-க்கு அப்படியே வந்ததுக்குக் காரணம் அவர்தான்!''- ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன்

'கைதி' பட ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியனின் பேட்டி...

'கைதி' பட வாய்ப்பு எப்படிக் கிடைத்தது?

Sathyan Sooryan
Sathyan Sooryan

"தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு சாரின் 'மாயா' படத்துல நான் ஒளிப்பதிவாளரா வேலை பார்த்தேன். அந்தப் பழக்கத்தில்தான் எனக்கு 'கைதி' படத்தோட வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படத்தில் தயாரிப்பாளர் தரப்பு என்னை கமிட் பண்ணும்போது, ’ஏற்கெனவே இதே தயாரிப்பு நிறுவனத்துல 'மாநகரம்' படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ்தான், இந்தப் படத்தையும் இயக்கப் போறார்’னு சொன்னாங்க. அதுல இருந்து நாங்க சேர்ந்து வொர்க் பண்ண ஆரம்பிச்சோம்.’’

லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்துலேயும் கமிட்டாகி இருக்கீங்க; அவருடனான நட்பு பற்றி?

’’அவரைச் சந்திச்ச நாளிலிருந்தே ரெண்டு பேருக்கும் இடையில் நல்ல புரிதல் இருந்தது. `கைதி’ படம் பண்ணும்போது முழு சுதந்திரம் கொடுத்தார். நான் எந்த விஷயம் சொன்னாலும் அது ஸ்கிரிப்ட்டுக்கு சரியா வருமானு பார்த்துட்டு ஓகே சொல்லுவார். ஒளிப்பதிவு பற்றி அவர் சொல்ற விஷயங்களும் சரியா இருக்கும். எங்களுக்குள்ள கொடுத்து வாங்குற பழக்கம் இருந்துச்சு. இந்த நட்புதான் அடுத்த படம் வரைக்கும் எங்களைத் தொடர வெச்சிருக்குனு நினைக்குறேன்.’’

விஜய், கார்த்தி, விஜய் சேதுபதி - தீபாவளியை நோக்கி முன்னணி நடிகர்கள்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விஜய் படத்துல உங்களை கமிட் பண்ணுனது லோகேஷ் கனகராஜ்தானா?

Sathyan Sooryan
Sathyan Sooryan

`` 'கைதி' படத்தின்போதுதான், லோகேஷ் விஜய் சார் படத்துல கமிட்டானார். இந்த டீம் அப்படியே விஜய் சார் படத்துக்கும் இருக்கட்டும்னு ஃபீல் பண்ணுனார். அதுனால நான், எடிட்டர் பிலோமின் ராஜ்னு அவரோட டெக்னிக்கல் டீமை மாற்றாமல் ’விஜய் 64’ படத்துக்கும் கமிட் பண்ணிட்டார்.’’

விஜய் படத்துல ஒளிப்பதிவாளரா கமிட்டானது எப்படி இருக்கு?

’’கண்டிப்பா இது என் சினிமா கரியரில் அடுத்த லெவல்னு சொல்லலாம். அதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை. இதைச் சவாலான ஒரு விஷயமா எடுத்துக்கிட்டு வேலைபார்க்கணும்னு நினைக்கிறேன். ஏன்னா, இதுவரைக்கும் விஜய் சார் படங்களில் வேலைபார்த்தவங்க எல்லாரும் அவங்களோட வேலையை மிகச் சரியா பண்ணியிருக்காங்க; நானும் சரியா இருப்பேன். இந்தப் படம் மூலம் என்னோட பொறுப்பு அதிகமாகி இருக்குனு நினைக்கிறேன். பெரிய ஹீரோ நடிக்கிற படங்களில் வேலை பார்க்கணும்ங்கிற ஆசை, சினிமாவில் இருக்கிற எல்லா டெக்னீஷியன்ஸுக்கும் கண்டிப்பா இருக்கும். ஆனா, அந்த இடத்துக்குப் போக, நம்முடைய ஒவ்வொரு நாள் உழைப்பும்தான் முக்கிய காரணமா இருக்கும். `இந்த நாளை நம்ம நல்லா பண்ணணும்’னு நினைச்சுதான், ஒவ்வொரு நாள் வேலையையும் நான் ஆரம்பிக்கிறேன். அதுதான் என்னை இந்தளவுக்குக் கொண்டு வந்திருக்கு. நம்ம வேலையில் சரியா இருந்தாலே போதும், எல்லாம் நல்லதாகவே நடக்கும்.’’

படம் சம்பந்தமா விஜய்யை சந்திச்சீங்களா?

Sathyan Sooryan
Sathyan Sooryan

’’இதுவரைக்கும் சாரை நான் பார்க்கல. லோகேஷ் கனகராஜ் மட்டும்தான் பார்த்திருக்கார். நானும் அவரைப் பார்க்க வெயிட் பண்ணிட்டிருக்கேன். இந்தப் படத்துல கமிட்டானவுடனே கார்த்தி சார் வாழ்த்துகள் சொன்னார்.’’

'தீரன் அதிகாரம் ஒன்று' படத்துல வேற மாதிரியான கார்த்தியைக் காட்டியிருந்தீங்க. 'கைதி'யில் கார்த்தியை எப்படி எதிர்பார்க்கலாம்?

’’ 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தோட ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அப்படியே நேர் எதிரானது 'கைதி' படத்தோட ஷூட்டிங் ஸ்பாட். ஏன்னா, நிறைய வெயில், புழுதியில்தான் 'தீரன் அதிகாரம் ஒன்று' ஷூட்டிங்கை நடத்தினோம். ஆனால், ’கைதி’யில் முழுக்க முழுக்க குளிர். படத்துல கார்த்தியோட காஸ்ட்டியூம் காட்டன் ஷர்ட்தான். குளிரில் அவர் நடுங்கிகிட்டே இருப்பார். ஷாட்டுக்கு இடையில் கிடைக்கிற கேப்லதான் அவர் கேரவனுக்குள் போக முடியும். அவரைச் சுத்தி நிக்குற நாங்க எல்லாரும் ஸ்வெட்டர், போர்வை போத்திக்கிட்டு நிப்போம். அப்போ, கார்த்தியைப் பார்க்க பாவமா இருக்கும். நிறைய விஷயங்கள் கஷ்டப்பட்டு பண்ணியிருக்கார். படத்தோட ஷூட்டிங் 160 நாள் நடந்துச்சு. அத்தனை நாளும் கார்த்தி அதே நிலைமைதான். அவரைப் பாக்குறப்போ நமக்கு ஒரு நம்பிக்கை கிடைக்கும். வேலையில் சரியா இருக்கக்கூடிய நபர் கார்த்தி. கண்டிப்பா இந்தப் படம் ஆடியன்ஸுக்கு ஒரு விஷுவல் ட்ரீட்டா இருக்கும்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு