Published:Updated:

டப்பிங்... பாடல்... இசை... ஷோ ரன்னர்... கலக்கும் கிருத்திகா நெல்சன்

கிருத்திகா நெல்சன்
பிரீமியம் ஸ்டோரி
கிருத்திகா நெல்சன்

மணிரத்னம் சார்கூட ஏற்கெனவே ‘கடல்’ படத்துல துளசிக்கும் ‘காற்றுவெளியிடை’, ‘செக்கச்சிவந்த வானம்’ படங்கள்ல அதிதி ராவுக்கும்னு மூணு படங்கள்ல டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டா வொர்க் பண்ணியிருக்கேன்.

டப்பிங்... பாடல்... இசை... ஷோ ரன்னர்... கலக்கும் கிருத்திகா நெல்சன்

மணிரத்னம் சார்கூட ஏற்கெனவே ‘கடல்’ படத்துல துளசிக்கும் ‘காற்றுவெளியிடை’, ‘செக்கச்சிவந்த வானம்’ படங்கள்ல அதிதி ராவுக்கும்னு மூணு படங்கள்ல டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டா வொர்க் பண்ணியிருக்கேன்.

Published:Updated:
கிருத்திகா நெல்சன்
பிரீமியம் ஸ்டோரி
கிருத்திகா நெல்சன்

“இந்த வாழ்க்கை ரொம்ப சின்னது. ஆசைப்படற எல்லாத்தையும் செய்து பார்த்துடணும். நான் அதைத்தான் பண்ணிட் டிருக்கேன்...’’ அழகான அறிமுகத்தோடு ஆரம்பிக்கிறார் கிருத்திகா நெல்சன். இரட்டை எழுத்தாளர்கள் சுபா ஜோடியில், சுரேஷின் மகள். ஆனால், அதை தனக்கான விசிட்டிங் கார்டாக பயன்படுத்த விரும்பாமல், திறமைகளால் தனித்துத் தெரிய ஆசைப்படுபவர். டப்பிங் கலைஞர், பின்னணிப் பாடகி, பாடலாசிரியர் எனப் பன்முகம் கொண்ட கிருத்திகா, மீடியாவில் தன் என்ட்ரி தொடங்கி, அடுத்த திட்டமான ‘ஷோ ரன்னர்’ அடையாளம் வரை அனைத்தை யும் பேசுகிறார்.

‘`அப்பாவோட ‘ஆத்மா பப்ளிகேஷன்ஸ்’ எங்க வீட்டுக்குள்ளேயே ஒரு பகுதியில இருந்தது. அதனாலயோ என்னவோ அப்ப லேருந்தே எனக்கு வாசிப்பு பழகவும் பிடிக்கவும் ஆரம்பிச்சது. நாலு வயசுலேருந்து பாட்டு கத்துக்கறேன். எம்.ஓ.பி வைஷ்ணவ் காலேஜ்ல மீடியா கோர்ஸ் படிச்சேன். காலேஜ் படிச்சிட்டிருந்த டைம்ல சன் டி.வி யில வந்திட்டிருந்த ‘சப்தஸ்வரங்கள்’ நிகழ்ச்சியில கலந்துகிட்டு ஃபைனல்ஸ்ல `ரன்னர்அப்'பா வந்தேன். பிக் எஃப்.எம்ல ஆர்ஜே, புரொடியூசர், சன் டிவி நெட்வொர்க்ல புரோகிராமிங் ஹெட், ஸ்டார்ட் அப்னு வேற வேற வேலைகள் பார்த்ததால மியூசிக் கொஞ்சம் தடைப்பட்டது. ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு மறுபடி மியூசிக் பக்கம் வந்தேன்...’’ என்கிற கிருத்திகாவின் ரீஎன்ட்ரியில் டப்பிங் கலைஞர், பாடலா சிரியர், பின்னணிப் பாடகி, உதவி இயக்குநர் என ஏகப்பட்ட சுவாரஸ்யங்கள்...

‘`மணிரத்னம் சார்கூட ஏற்கெனவே ‘கடல்’ படத்துல துளசிக்கும் ‘காற்றுவெளியிடை’, ‘செக்கச்சிவந்த வானம்’ படங்கள்ல அதிதி ராவுக்கும்னு மூணு படங்கள்ல டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டா வொர்க் பண்ணியிருக்கேன். ‘பொன்னியின் செல்வன்’ படத்துல மணி சார்கிட்ட அசிஸ்டன்ட் டைரக்டரா வேலை பார்த்தேன். ‘கார்ப்பரேட் வேலையை விட்டுட்டு இது எதுக்கு வேண்டாத வேலை’ன்னு கேட்டார். அதையும் தாண்டி ரொம்ப அடம்பிடிச்சு அவர்கிட்ட உதவி யாளரா சேர்ந்தேன். அந்தப் படம் ஆரம்பிச்சது லேருந்து ஸ்கிரிப்ட் ஏரியாவுல வொர்க் பண்ணிட்டிருந்தேன். நடுவுல உடம்புக்கு முடியாமப் போனதால அந்தப் படத்துலேருந்து வெளியே வர வேண்டியதாயிடுச்சு. ஆனா, மணி சார்கூட அந்தப் படம் முழுக்க டிராவல் பண்ண முடியாததுல எனக்குப் பெரிய வருத்தம் உண்டு. அவர்கூட வொர்க் பண்ண அந்த ரெண்டரை வருஷங்கள்ல நான் தினம் தினம் ஏதோ ஒரு விஷயத்தைக் கத்துக்கி ட்டேன்...’’ வியப்பு விலகாமல் சொல்பவர், அதே படத்தில் பாடலும் எழுதியிருக்கிறார். ஆனாலும் ரிலீசாகும்வரை அது பற்றிய பில்டப் வேண்டாம் என்பவர், ஏற்கெனவே ‘நீ... நான்...’, ‘பீப்பீ... டும்டும்’ என சிங்கிள் பாடல்களை எழுதி, இசையமைத்துப் பாடி, இண்டிபெண்டென்ட் மியூசிஷியனாக களத்தில் இருப்பவர்தான். அடுத்து அஷோக் செல்வன் படத்திலும் பாடல் எழுதியிருக் கிறாராம். ‘ஆதித்ய வர்மா’ படத்தில் ‘கனா’, ‘லிஃப்ட்’ படத்தில் ‘ஹே ப்ரோ’ உட்பட சில பாடல்களும் பாடியிருக்கிறார்.

டப்பிங்... பாடல்... இசை... ஷோ ரன்னர்... கலக்கும் கிருத்திகா நெல்சன்

`என்னதான் பிரமாதமாக எழுதினாலும் பெண் பாடலாசிரியர்களுக்கு ஹீரோவுக்கான ஓப்பனிங் சாங் வாய்ப்பு கிடைக்குமா?' கிருத்திகாவிடம் கேட்டோம்.

‘`ஜனவரியில ரிலீசாகப்போற என் பாடல் ஹீரோவுக்கான ஓப்பனிங் சாங்தான். அது நானே கம்போஸ் பண்ணினது. படத்துக்காக இல்லைன்னாலும் அந்தப் பாடல் சூப்பர் ஹீரோ கேரக்டருக்கான பாடலாதான் இருக்கும். அதையே ரெஃபரன்ஸா காட்டிகூட என்னால அந்த மாதிரியான பாடல்கள் எழுத முடியும்னு கேட்க முடியும்.

பெண் என்பதைக் காரணம் காட்டி இது வரைக்கும் எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதே இல்லை. ஒரு காலத்துல பெண்களோட மனசையும், உணர்வுகளையும் ஆண் பாடலா சிரியர்கள் எழுதியிருக்காங்க. பெண்களுக்கும் ஆண்களோட மனசையும் உணர்வையும் எழுதறது சவாலா இருக்காது...’’ விளக்கம் தருபவர், திரைத்துறையில் பெண் கலைஞர்கள் எதிர்கொள்ளும் வேறுவிதமான பிரச்னைகளையும் முன்வைக்கிறார்.

‘`சில வருஷங்களுக்கு முன்னாடி எனக்கு ஐட்டம் நம்பர் பாடல்களைப் பாடற வாய்ப்புகளா வந்திட்டிருந்தது. அது எதேச்சையா அமைஞ்சதுதான். ஆனாலும் சில மியூசிக் டைரக்டர்ஸோட பார்வை வேற மாதிரி இருந்தது. ஐட்டம் சாங்ஸ் பாடறவங்க வேற மாதிரினு நினைச் சாங்களானு தெரியலை. நடுராத்திரியில மெசேஜ் பண்றது, மரியாதைக்குறைவா பேசறதெல்லாம் நடந்திருக்கு. அதுல கடுப்பாகிதான் நடுவுல பின்னணி பாடறதுக்கு ஒரு பிரேக் எடுத்துட்டு வேற வேலைகள் பார்க்கப் போனேன்னுகூட சொல்லலாம். அதனால இந்தத் துறையில பெண்களுக்குப் பிரச்னைகள் இல்லைன்னெல்லாம் அர்த்த மில்லை. ஆனா, வாய்ப்புகள் கிடைக்காமப் போன அனுபவமெல்லாம் இல்லை. சினிமாங்கிறது ஆணாதிக்கம் நிறைஞ்ச ஒரு துறைதான். ஆனாலும் அங்கே பெண்களுக்கு இடமில்லைன்னு சொல்ல மாட்டேன். அந்த இடத்தை பெண்கள்தான் உருவாக்கணும்.’’

இந்திய சினிமாவின் மிகப்பெரிய இயக்குநரிடம் உதவியாளராக வேலை பார்த்த கிருத்திகாவுக்கு, இயக்குநராவது திட்டத்திலேயே இல்லை என்கிறார்.

‘`எனக்கு ஷோ ரன்னர் ஆகணும்னுதான் ஆசை. ஹாலிவுட் கான்செப்ட் இது. ஒரு சீரியல் அல்லது சீரிஸின் கதை, களம், நடிகர்கள், கதாசிரியர், டைரக்டர்னு எல்லாத்தையும் முடிவுபண்ணி, அந்த ஷோவை ஆரம்பம் முதல் கடைசி வரை கொண்டுபோறவங்கதான் ஷோ ரன்னர். ஒரு படம்னு யோசிச்சா அதோட ஆரம்பம் முதல் இறுதிவரை எப்படியிருக்கும்னு பிளான் பண்ணி எடுத்துட்டுப் போவோம். அதுவே சீரியல் அப்படிக் கிடையாது.

சீரியல்ல ஓர் உலகம் இருக்கும். ஆரம்பம் இருக்கும். அதுக்குள்ளே கேரக்டர்ஸ் போவாங்க. இறுதி என்னவா இருக்கும்னு யோசிச்சு யாரும் சீரியல் பண்றதில்லை. அதை எத்தனை சீசனுக்கு, எத்தனை நாள்களுக்கு இழுக்கணுமோ அதுக்கேத்தபடி கதையைக் கொண்டு போவாங்க. இந்த இடத்துலதான் ஷோ ரன்னர் தேவைப் படறாங்க. ஒரு ஷோ ரன்னரா சினிமா தரத்துக்கு சீரியல் பண்ணணும்னு எனக்கு ஆசை. சீக்கிரமே அப்பாவோட கதையில என்னை நீங்க ஷோ ரன்னரா பார்க்கலாம்...’’ எதிர்பார்ப்பைக் கூட்டுகிறது கிருத்திகாவின் புதுத் தகவல்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism