Published:Updated:

`` `அவெஞ்சர்ஸ்' டீம்ல கேட்டா மறுபடியும் அயர்ன்மேனா வருவேன்!'' - டப்பிங் ஆர்டிஸ்ட் ரவிசங்கர்

சனா

டப்பிங் ஆர்டிஸ்ட் ரவிசங்கர் தமிழில் ரிலீஸான 'அவெஞ்சர்ஸ்' திரைப்படத்தில் இடம்பெற்ற அயர்மேன் கதாபாத்திரத்துக்கு டப்பிங் குரல் கொடுப்பது பற்றிப் பேசியிருக்கிறார்.

அவெஞ்சர்ஸ்
அவெஞ்சர்ஸ்

கடந்த ஏப்ரல் 26-ம் தேதி ரிலீஸான திரைப்படம் 'அவெஞ்சர்ஸ் எண்டு கேம்.' உலகம் முழுவதும் உள்ள மார்வெல் ஃபேன்ஸ் இந்தப் படத்துகாகக் காத்திருந்தனர். இப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸானது. தமிழ் வெர்ஷன் அயர்மேனுக்கு நடிகர் விஜய் சேதுபதி குரல் கொடுத்திருந்தார். இவரது குரல் அந்தக் கதாபாத்திரத்துக்கு சரியாக வரவில்லை எனப் பல ரசிகர்கள் வருத்தம் தெரிவித்திருந்தனர். போக, அயர்மேனுக்கு வழக்கமாகக் குரல் கொடுக்கும் டப்பிங் ஆர்டிஸ்ட் ரவிசங்கர் குரலை ரசிகர்கள் பலரும் மிஸ் செய்வதாகத் தங்கள் கருத்தையும் தெரிவித்திருந்தனர்.

ரவிசங்கர்
ரவிசங்கர்
காதலனைக் கரம் பிடிக்கும் `அவெஞ்சர்ஸ்' நடிகை எலிசபெத் ஒல்ஸென்!

இந்நிலையில் தற்போது டப்பிங் ஆர்டிஸ்ட் ரவிசங்கர் மீண்டும் அவெஞ்சர்ஸ் எண்டு கேம் படத்தில் அயர்மேனுக்கு தமிழில் டப்பிங் குரல் கொடுக்கப்போவதாகத் தகவல் வந்தது. இதுகுறித்து ரவிசங்கரிடம் கேட்டப்போது, ``இது எந்தளவுக்கு உண்மைனு எனக்குத் தெரியலை. நானும் இதை சமூக வலைதளங்களில் பார்த்துதான் தெரிஞ்சிகிட்டேன். நிறைய ரசிகர்கள் போன் செய்து வாழ்த்துகளும் சொன்னாங்க. ஆனா, `அவெஞ்சர்ஸ்' டீம்ல இருந்து யாரும் இது சம்பந்தமா பேசலை. ஒருவேளை என்னை டப்பிங் பேசச் சொன்னா கண்டிப்பா கொடுப்பேன்'' என்று தெரிவித்தார்.