Published:Updated:

`காயம்பட்ட அன்பான தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்!'-சர்ச்சை காட்சிக்கு துல்கர் சல்மான் விளக்கம்

துல்கர் சல்மான்
News
துல்கர் சல்மான்

அப்போதே ஒரு சர்ச்சையில் சிக்கியது படம். பத்திரிகையாளர் ஒருவரின் புகைப்படம் தவறுதலாகப் படத்தில் இடம் பெற்றிருப்பது தெரியவர உடனே அவரிடம் மன்னிப்பு கோரினார் துல்கர் சல்மான்.

அனூப் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து, தயாரித்த மலையாள படம் 'வரனே அவஷ்யமுண்டு.' நீண்ட நாள்களுக்கு இந்தப் படத்தில்தான் மலையாள சினிமாவில் புகழ்பெற்ற நடிகர்களான சுரேஷ் கோபி, ஷோபனா ஆகியோர் நீண்ட காலங்களுக்குப் பிறகு சேர்ந்து நடித்திருந்தனர். அவர்களுடன் துல்கர் சல்மான், கல்யாணி ப்ரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பிப்ரவரி 7-ம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சனரீதியாகவும் வசூல்ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. OTTP பிளாட்ஃபார்மில் சில நாள்களுக்கு முன்தான் இந்தப் படம் வெளியானது. அப்போதே ஒரு சர்ச்சையில் சிக்கியது படம். பத்திரிகையாளர் ஒருவரின் புகைப்படம் தவறுதலாகப் படத்தில் இடம் பெற்றிருப்பது தெரியவர உடனே அவரிடம் மன்னிப்பு கோரினார் துல்கர் சல்மான்.

துல்கர் சல்மான்
துல்கர் சல்மான்

தற்போது, மீண்டும் இந்தப் படம் சர்ச்சையில் சிக்கியுள்ளது. காமெடி காட்சிகளாக இந்தப் படத்தில் நாய் ஒன்றின் காட்சிகள் இருக்கும். சுரேஷ் கோபி வளர்க்கும் அந்த நாயை பிரபாகரன் என்று அழைக்கும் காட்சி இடம்பெற்றிருக்கும். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை இழிவுபடுத்துவதுபோல இந்தக் காட்சி அமைந்திருப்பதாக இந்தக் காட்சிகளைப் பார்த்த தமிழ் ரசிகர்கள் படக்குழு மீது கடுமையான விமர்சனங்கள் வைத்தனர். இதுதொடர்பாக துல்கர் சல்மான் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்நிலையில்தான் இந்தச் சர்ச்சை தொடர்பாகத் தனது ட்விட்டர் பதிவில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார் துல்கர் சல்மான். ``'வரனே அவஷ்யமுண்டு' படத்தில் வரும் பிரபாகரன் ஜோக் தமிழ் மக்களை அவமதிக்கும் வகையில் இருப்பதாக என் கவனத்துக்கு வந்தது. எந்தவித உள்நோக்கத்துடனும் அந்தக் காட்சி எடுக்கப்பட்டது அல்ல. 'பட்டண பிரவேஷம்' என்ற பழைய மலையாளப் படத்தில் வரும் நகைச்சுவையே அது. கேரளாவில் அது பொதுவான ஒரு பெயர். இது கேரளாவில் மிகவும் பிரபலமான மீம். எனவே, ஆரம்பத்தில் குறிப்பிட்டதுபோல் யாரையும் குறிப்பிடுவது அல்ல.

விளக்கம்
விளக்கம்

இந்தப் படத்தைப் பார்க்காமல் பலர் இதற்கு எதிர்வினையாற்றுகிறார்கள். வெறுப்பை பரப்ப முயல்கிறார்கள். என்னை வெறுப்பதோ, என்னுடைய இயக்குநர் அனுப்பை வெறுப்பதையோ நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அதை எங்களுடன் வைத்துக்கொள்ளுங்கள். எங்களுடைய தந்தைகளை திட்டுவதோ, படத்தில் நடித்த மூத்த நடிகர்களைத் திட்டுவதோ வேண்டாம். அந்தக் காட்சியால் காயம்பட்ட நல்ல மற்றும் அன்பான தமிழ் மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய படத்தின் மூலமோ என்னுடைய வார்த்தைகளின் மூலமோ யார் குறித்தும் அவதூறு பரப்ப வேண்டும் என்று நான் ஒருபோதும் நினைத்தது இல்லை. இது தவறான புரிதலின் விளைவு'' எனக் கூறி 'பட்டண பிரவேஷம்' காமெடிக் காட்சியையும் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்.