Published:Updated:

`` `அண்ணாத்த' டீசர்ல என்ன ஸ்பெஷலா இருக்கும் தெரியுமா..?!'' - எடிட்டர் ரூபன்

எடிட்டர் ரூபன்
எடிட்டர் ரூபன்

"வாழ்க்கையில நம்ம சந்திக்கிற மனிதர்கள்தான் நம்மை மாத்துவாங்க. அப்படித்தான், நான் சந்திச்ச நபர்கள் என் வாழ்க்கையை வடிவமைச்சிட்டுப் போயிருக்காங்க!" மிகவும் பாசிட்டிவான வார்த்தைகளோடு பேட்டியை ஆரம்பித்தார், எடிட்டர் ரூபன்.

10 வருடங்களாக சினிமாவில் இருக்கும் எடிட்டர் ரூபன், சினிமாவில் சந்தித்த நபர்கள் மற்றும் படங்கள் குறித்து பேசியிருக்கிறார்.
இவரது பாடல்கள் மட்டுமல்ல... இவரும் குறிஞ்சிப்பூதான்! - வித்யாசாகர் பிறந்தநாள் பகிர்வு

"சினிமாவுக்குள்ள வந்து கிட்டத்தட்ட 10 வருஷம் ஆகிடுச்சு. இப்போ, என்னோட வாழ்க்கையில நிறைய அனுபவங்களைச் சேர்த்திருக்கேன். ஸ்கூல் படிச்ச காலத்துல ஆட்டோ மொபைல் இன்ஜினீயர் ஆகணும்னு ஆசைப்பட்டேன். ஆனா, அதுக்கு நிறைய படிக்க வேண்டியதா இருந்தது. வெறும் புத்தகத்தைப் படிச்சிட்டு, எக்ஸாம் எழுதி பாஸ் ஆகுறது ரொம்ப கஷ்டமா இருந்தது. ப்ளஸ் டூ கூட ஜஸ்ட் பாஸ்தான். வீட்டுல தாத்தா, அப்பா எல்லாரும் இசைத்துறையைச் சேர்ந்தவங்கதான். நிறைய மேடைகள்ல கச்சேரி நடத்தியிருக்காங்க. எனக்கும் இசையில ஆர்வம் இருந்தது. ஆனா வீட்டுல, `நாங்கபடுற கஷ்டமே போதும். நீயும் மியூசிக் சார்ந்து படிக்க வேண்டாம்'னு சொல்லிட்டாங்க.

வீட்டுலயும் என்னோட படிப்பு நிலைமையைப் பத்தி புரிஞ்சிக்கிட்டாங்க. அப்போ, என்னோட சித்தி லயோலா காலேஜ்ல விஸ்காம் பத்திச் சொன்னாங்க. இங்கே சீட் கிடைக்கிறதுக்கே பெரிய டெஸ்ட் எல்லாம் எழுத வேண்டியதா இருந்தது. ஒருவழியா சீட்டும் கிடைச்சிடுச்சு. அங்க படிக்கப் போனா, எல்லாமே வெறும் தியரியா இருந்தது. இப்படியே ஒருவருஷம் ஓடிடுச்சு. நான் பேஸிக்காவே கம்ப்யூட்டர் சயின்ஸ் ஸ்டூடன்ட், அதனால எடிட்டிங் பண்றது பிடிக்கும். என்னோட ஃப்ரெண்ட்ஸ் போட்டோக்களை எடிட் பண்ணிக் கொடுப்பேன். ஆனா, ஒரு படத்துக்கான எடிட்டிங் பத்தி எல்லாம் எனக்குத் தெரியாது. அப்போ, `ஸ்க்ரிப்ட் ரைட்டிங்' ஒரு பாடமா வந்தது. அந்த நேரத்துலதான் ஃபிலிம் மேக்கிங் ஆசை எனக்குள்ள வர ஆரம்பிச்சது."

எடிட்டர் ரூபன்
எடிட்டர் ரூபன்

"காலேஜ் இன்டன்ஷிப்புகாக கௌதம் மேனன் சார்கிட்ட என்னோட சேர்த்து ஆறு பேர் போனோம். அங்க சேர்த்துக்கிட்டாங்க. சார் அப்போ, 'வேட்டையாடு விளையாடு' படத்தை எடுத்துட்டிருந்தார். ஒருநாள் கெளதம் சார் எங்ககிட்ட பேசிட்டிருந்தார். அப்போ, 'ஃப்ரீ டைம்ல என்ன பண்ணுவீங்க, ஹாபீஸ் என்ன'ன்னு விசாரிச்சார். அப்போ, நண்பர்களோட போட்டோ, வீடியோ எடிட் பண்றது பத்தி சொன்னேன். உடனே, `அப்புறம் எதுக்கு இங்க உட்கார்ந்துட்டிருக்க'னு கேட்டு எடிட்டர் அந்தோணிகிட்ட என்னை உதவியாளரா சேர்த்துவிட்டார். என் வாழ்க்கையில எனக்கான கரியர் அமைஞ்சதே இந்த நொடிதான். இதுக்குக் காரணம் கெளதம் சார்'' என்ற ரூபனிடம் சில கேள்விகள் கேட்டோம்.

டைட்டில் கார்ட்டில் எடிட்டர் ரூபன்?

மெர்சல்
மெர்சல்

"அந்தோணி சார் எனக்கு எடிட்டிங் சாப்ஃட்வேர் பத்தி சொல்லிக் கொடுத்தார். நிறைய சீனியர்ஸ் இருந்தாங்க. அப்போ எனக்கு சில வேலைகளைக் கொடுப்பாங்க. நானும் அதைச் சரியா பண்ணிக் கொடுத்துடுவேன். காலேஜ் இன்டர்ன் முடிஞ்சதும் அந்தோணி சார்கிட்ட நான் வேலைபார்த்துட்டிருந்தேன். எடிட்டிங் பத்தி நிறைய கத்துக்கிட்டேன். என்னோட முதல் படம் `கண்டேன்'. 4 படங்கள்ல வேலை பார்த்தும் எனக்கான அங்கீகாரம் கிடைக்கல. அசிஸ்டன்ட் எடிட்டரா இருந்த காலத்துல நிறைய படங்களுக்கு ட்ரெயிலர் எடிட் பண்ணிக் கொடுப்பேன். அதுல கிடைக்குற 5000 ரூபாய் எனக்கு பெருசா தெரியும். ஒரு மாசம் பொழப்பு ஓடும். அப்படி இருந்த காலத்துல நிறைய பேரோட நட்பும் கிடைச்சிருக்கு. விஷால் சாருக்கு என்னோட உழைப்பு பிடிக்கும். அவர் மூலமா மட்டுமே நிறைய ட்ரெயிலர் எடிட் பண்ணியிருக்கேன். கிடைக்குற நேரத்துல ஸ்க்ரிப்ட் எழுதுனேன். அப்போ, `முப்பொழுதும் உன் கற்பனைகள்' படத்தோட ட்ரெய்லர் வேலையைப் பார்த்தப்போ, இயக்குநர் அட்லி `முகபுத்தகம்' டப்பிங் வேலைக்காக வந்திருந்தார். அவர்கிட்ட படத்தோட டிரெயிலர் காட்டினேன். பார்த்துட்டு ரொம்ப எக்ஸைட் ஆகி, அங்க இருந்தவங்களையும் கூப்பிட்டுக் காட்டினார். எனக்கு ஆச்சர்யமா இருந்தது. அப்போ, `அடுத்து ஒரு படம் பண்ணப்போறேன். என்னோட புரொடியூசர்கிட்ட உங்களைப் பத்தி சொல்றேன்'னு சொல்லிட்டுப் போனார். சும்மா சொல்றார்னு நினைச்சுட்டிருந்தேன். சொன்ன மாதிரியே `ராஜா ராணி' படத்துல வேலை கொடுத்தார். அந்தப் படத்தோட டிரெய்லர், எல்லார் மத்தியிலும் நல்ல ரீச் ஆனது. எனக்கான முதல் வெற்றி இதுதான்."

`சிறுத்தை' சிவா அறிமுகம் பற்றி?

எடிட்டர் ரூபன்
எடிட்டர் ரூபன்

"இணை இயக்குநர் ராஜசேகரன் சார் மூலமா சிவா சார் அறிமுகமானார். ஃப்ரீலேன்சரா அப்போ எடிட்டிங் வேலைகள் பார்த்துட்டிருந்தேன். `வீரம்' டிரெயிலர் எடிட் பண்றதுக்காக என்கிட்ட வந்தாங்க. என்னோட எடிட்டிங் அவங்களுக்குப் பிடிச்சிருந்தது. அப்போ, `அடுத்து நம்ம படம் பண்ணலாம்'னு சொன்னார். அப்படித்தான் `வேதாளம்' படத்துக்காக என்னைக் கமிட் பண்ணார். ஆச்சர்யமாவும் அதிர்ச்சியாவும் இருந்தது. அப்புறம் அதிகாரபூர்வமா என்னோட பெயர் வந்தது. இங்க ஆரம்பிச்ச பயணம், `விவேகம்', `விஸ்வாசம்' இப்போ `அண்ணாத்த' வரைக்கும் சாரோட தொடர்ந்துட்டிருக்கு. இயக்குநர்ங்கிறதைத் தாண்டி, அண்ணன்ங்கிற உறவைக் கொடுத்திருக்கு. அடுத்தவங்களுக்கும் நல்லது நினைக்கிற கேரக்டர். கிரியேட்டரா அவர்கிட்ட இருந்து நிறைய கத்துக்கலாம்."

`அண்ணாத்த' படத்தோட அறிவிப்பு எப்படியிருந்தது?

"சிவா சார் இந்தப் படத்தோட புராஜெக்ட் உள்ள வந்தப்பவே நானும் படத்துக்குள்ளே இருப்பேன்னு தெரியும். இருந்தும் அதிகாரபூர்வமான அறிவிப்புக்காக காத்துட்டிருந்தேன். சின்ன வயசுல சினிமான்னாலே ரஜினி சார்தான் ஞாபகத்துக்கு வருவார். அவரைப் பார்த்துதான் நிறைய ஸ்டைல் பண்ணியிருக்கோம். பன்ச் டயாலக்ஸ் பேசியிருக்கோம். இப்போ, அவரோட படத்தை எடிட் பண்ணப்போறோம்கிறது வேறமாதிரியான ஃபீல். படத்தோட பூஜை அப்போ கைகொடுத்தார். அந்தத் தருணத்தை நினைச்சா இப்பகூட பேச்சு வர மாட்டேங்குது. இந்த வாய்ப்பு கிடைச்சதே பெரிய ஆசிர்வாதம்னு நினைக்கிறேன்."

`அண்ணாத்த' டீசர் மற்றும் டிரெயிலர்ல என்ன ஸ்பெஷலா இருக்கும்?

அண்ணாத்த
அண்ணாத்த

"மோஷன் போஸ்டர் vfx-ல ரிலீஸானது. அதுல என்னோட வேலை குறைவுதான். படத்தோட டீசர் மற்றும் டிரெயிலர் எடிட் பண்ணப் போறது எனக்கே எக்ஸைட்மென்ட்டா இருக்கு. குறிப்பா ரசிகர்கள் நிறைய எதிர்பார்க்கிறாங்க. முந்தைய படத்தோட ரெக்கார்டை பிரேக் பண்ணணும்னு சொல்றாங்க. இதுவே எனக்கு பெரிய அழுத்தமா இருக்கும். இப்படி எதிர்ப்பார்க்கிற ரசிகர்களின் மனநிலையைப் பூர்த்திசெய்யுற மாதிரிதான் டீசர், டிரெய்லர் இருக்கும். கண்டிப்பா மாஸா இருக்கணும்னு நினைக்குறேன். அதே நேரத்துல குழந்தைகள், பெரியவங்கன்னு எல்லாரும் ரசிக்கணும்னு நினைச்சுக்கிட்டிருக்கேன். வெயிட் பண்ணுவோம்."

ஒரே நேரத்தில் அஜித், விஜய் படங்களின் எடிட்டிங் வேலைகளில் இருந்தது எந்த மாதிரியான உணர்வைக் கொடுத்திருக்கு?

எடிட்டர் ரூபன் - இயக்குநர் சிறுத்தை சிவா
எடிட்டர் ரூபன் - இயக்குநர் சிறுத்தை சிவா

"ஒரு 90ஸ் கிட்டா ரெண்டு பேரையும் நிறைய ரசிச்சிருக்கேன். `வேதாளம்', `தெறி' படங்களுக்கு ஒண்ணா வேலை பார்த்தப்ப பயங்கர பதற்றமா இருந்தது. டைம் மேனேஜ்மென்ட் ரொம்ப முக்கியம். அதைச் சரியா பேலன்ஸ் பண்ண கஷ்டப்பட்டேன். தவிர, மத்த படங்களின் வேலைகள் வேற இருந்தது. மொத்தத்துல ரெண்டு படமும் ரிலீஸாகி நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. விஜய் சார் படங்களை எடிட் பண்றப்போ, அவரோட காதல் போர்ஷனை எடிட் பண்றது எனக்குப் பிடிக்கும். அவர் படங்களை பார்க்குறப்ப எனர்ஜி லெவல் நம்மகிட்ட வேற லெவல்ல இருக்கும். அஜித் சார் படங்கள்ல எப்பவும் மாஸ் இருக்கும். இப்படி ரெண்டு பேரும் பாசிட்டிவ் வைப்பை கொடுப்பாங்க."

இயக்குநரா உங்களை எப்போ பார்க்கலாம்?

"படம் இயக்கணும்கிற ஆசையிலதான் இப்போ வரைக்கும் ஓடிட்டிருக்கேன். ஒவ்வொரு இயக்குநர்கள்கிட்ட இருந்தும் ஒவ்வொரு விஷயத்தை எனக்காகக் கத்துக்கிறேன். இந்தப் பயிற்சி என்னை நல்ல படத்தை இயக்கவைக்கும்.''

`அடுத்த நயன்தாரா'தான் விஜய் பட ஹீரோயின்... வெல்கம் ஆன் போர்டு ஸ்வீட்டி! #Vijay65
அடுத்த கட்டுரைக்கு