Published:Updated:

வருமான வரித்துறை வழக்கில் விஷாலுக்கு சென்னை நீதிமன்றம் பிடிவாரன்ட்!

வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் நடிகர் விஷாலுக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட்டைப் பிறப்பித்துள்ளது.

Vishal
Vishal

விஷால் ஃபிலிம் ஃபேக்டரி என்ற பெயரில் அவர் நடத்திவரும் படத்தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் வரிப்பணத்தைச் செலுத்தாமல், அதைத் தொடர்ந்து அனுப்பப்பட்ட நோட்டீஸுக்கும் பதிலளிக்காமல் தாமதித்ததால், வருமான வரித்துறை அவர்மீது எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

விஷால்
விஷால்

இந்த வழக்கு, கடந்த ஜூலை 24-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது விஷால் ஆஜராகவில்லை. அதைத் தொடர்ந்து வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 2-ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது.

இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது மீண்டும் விஷால் ஆஜராகாத காரணத்தினால், அவர் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிடி வாரன்ட் பிறப்பித்தது நீதிமன்றம். தொடர்ச்சியாக இரண்டு முறை வருமான வரித்துறையின் விசாரணைக்கு சம்மன் அனுப்பியும் ஆஜராகாத காரணத்தினால், விஷாலுக்கு எதிராக இந்தப் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Vishal
Vishal

இதையடுத்து, இந்த வழக்கின் அடுத்த விசாரணைத் தேதிக்குள் தன் வழக்கறிஞருடன் சென்று நீதிமன்றத்தில் ஆஜராகி, விளக்கமளித்து ரீக்கால் பெட்டிஷனை விஷால் சமர்ப்பிக்கவேண்டும். இல்லையென்றால், காவல்துறை உதவியுடன் அவர் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்படுவார்.