Published:Updated:

சூர்யாவில் தொடங்கி தனுஷ் வரை... `எனை நோக்கி பாயும் தோட்டா' டைம்லைன்!

நீலநிற சட்டையும் கையில் வெளீர் காப்புமாக தனுஷை மூன்று ஆண்டுகளுக்கு முன் பார்த்தது. இந்தக் கால இடைவெளிக்குள் `எனை நோக்கி பாயும் தோட்டா' தொடர்பாக என்னென்ன சம்பவங்கள் எல்லாம் நிகழ்ந்ததென என்பதை ரீவைண்ட் செய்து பார்ப்போம்..! 

'எனை நோக்கி பாயும் தோட்டா'
'எனை நோக்கி பாயும் தோட்டா'

2013-ம் ஆண்டின் இடைக்காலம் - `எனை நோக்கி பாயும் தோட்டா' கதையை சூர்யாவுக்குச் சொன்னார் கௌதம் மேனன். `துருவ நட்சத்திரம்' கதையையே மிகவும் விரும்பிய சூர்யா, `எ.நோ.பா.தோ' கதையை நிராகரித்துவிட்டார். கடைசியில், `துருவ நட்சத்திரம்' படமும் அப்போது கைவிடப்பட்டது.

பிப்ரவரி 2016 - மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, `எனை நோக்கி பாயும் தோட்டா' கதைக்குள் வந்தார் தனுஷ். படமும் லான்ச் செய்யப்பட்டது.

14 மார்ச் 2016 - கல்லூரி வளாகத்தினுள் தனுஷும் மற்றொரு நடிகரும் நடந்து வருவது மாதிரியான முதல்நாள் படப்பிடிப்பின் ஸ்னிப்பட்டை ட்விட்டரில் வெளியிட்டார் கௌதம் மேனன்.

10 ஏப்ரல் 2016 - துருக்கி நாட்டுக்கு படப்பிடிப்புக்காகப் பறந்திருந்த படக்குழு, அங்கிருந்து ஒரு எக்ஸ்க்ளூசிவ் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை வெளியிட்டது.

19 நவம்பர் 2016 - படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பற்றிய அறிவிப்பு வெளியானது.

27 நவம்பர் 2016 - படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி, நல்ல வரவேற்பைப் பெற்றது.

கௌதம் மேனன்
கௌதம் மேனன்

24 டிசம்பர் 2016 - மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே, படத்தின் டீசர் வெளியானது. ரசிகர்கள் கொண்டாடினர்.

2017-ன் தொடக்கத்தில் படம் வெளியாகும் எனத் தெரிவித்தது படக்குழு.

31 டிசம்பர் 2016 - வெளியாகி 1,000 நாள்களைக் கடந்து இன்றும் முணுமுணுக்க வைத்துக்கொண்டிருக்கும் `மறுவார்த்தை பேசாதே' பாடலின் டீசர் வெளியானது.

10 பிப்ரவரி 2017 - `மறுவார்த்தை பேசாதே' முழுப்பாடலும் வெளியானது. இசையமைப்பாளரின் பெயர், மிஸ்டர்.எக்ஸ் என குறிப்பிடப்பட்டிருந்தது. ரசிகர்களும் பல்வேறு யூகங்களுக்குச் சென்றனர்.

25 மார்ச் 2017 - `மறுவார்த்தை' பாடலின் வெற்றியைத் தொடர்ந்து, `நான் பிழைப்பேனோ' பாடல் வெளியானது. இதிலும் இசையமைப்பாளரின் பெயர் மிஸ்டர்.எக்ஸ் என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.

17 அக்டோபர் 2017 - மிஸ்டர்.எக்ஸ் யார் எனும் கேள்விக்கு, `தர்புகா சிவா' எனப் பதில் சொன்னார் கௌதம் மேனன். அதை, `மறுவார்த்தை' பாடலின் ரீ ஸ்ட்ரங் வெர்ஷனில் அறிவித்திருந்தனர்.

30 டிசம்பர் 2017 - `விசிறி' பாடலின் டீசர் வெளியானது.

31 டிசம்பர் 2017 - இன்று பலபேரின் காலர் டியூனாகக் காதுகளைக் குளிர்விக்கும் `விசிறி' வீடியோ பாடல் வெளியானது.

17 ஜூலை 2018 -  `எனை நோக்கி பாயும் தோட்டா' இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருப்பதாகத் தகவல் சொன்னது படக்குழு.

26 ஜூலை 2018 - `விசிறி ஷூட்' டீசர் வெளியானது. 4 செப்டம்பர் 2018 - படப்பிடிப்பு நிறைவடைந்தது. படக்குழுவும் `ஹேப்பி தீபாவளி 2018' என கேக் வெட்டி கொண்டாடினர். 7 நவம்பர் 2018 - படம் வெளியாகும் எனச் சொல்லப்பட்டது. 7 மார்ச் 2019 - ஏப்ரலில் திரைப்படம் வெளியாகும் என ட்வீட்டினார் தயாரிப்பாளர் மதன். 16 ஜூலை 2019 - ஜூலை 26-ம் தேதி படம் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகின.

தனுஷ் - மேகா ஆகாஷ்
தனுஷ் - மேகா ஆகாஷ்
'எனை நோக்கி பாயும் தோட்டா'

24 ஆகஸ்ட் 2019 - அதிகாரபூர்வ ரிலீஸ் டிரெய்லர் வெளியானது.

27 ஆகஸ்ட் 2019 - `திருடாதே திருடாதே' பாடல் வெளியானது.

31 ஆகஸ்ட் 2019 - `ஹே நிஜமே' பாடல் வெளியானது.

5 செப்டம்பர் 2019 - மறுநாள் வெளியாகியிருக்க வேண்டிய படத்துக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டது.

2 நவம்பர் 2019 - 29 நவம்பர் படம் ரிலீஸ் என்கிற போஸ்டர் வெளியானது. 

29 நவம்பர் 2019 - பல்வேறு தடைகளைக் கடந்து படம் வெளியானது.