Published:Updated:

``கனவா, திரையா, நிஜமா?" - மீண்டும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' டிரெய்லர்!

ஒருவழியாக செப்டம்பர் 6-ம் தேதி ரிலீஸுக்கான நாள் குறிக்கப்பட்டுவிட்டது.

`எனை நோக்கிப் பாயும் தோட்டா’ இப்படியொரு படத்தை இயக்கப்போகிறேன் என்று கௌதம் வாசுதேவ் மேனன் அறிவிப்பு வெளியிட்டபோது 2013 இருக்கும். இதையடுத்து 2016-ம் ஆண்டின் தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கியது. இந்தப் படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் இணைந்து தயாரித்துள்ளனர். தனுஷூக்கு ஜோடியாக மேகா ஆகாஷ், சசிகுமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தர்புகா சிவா இசையமைத்துள்ள படத்தின் பாடல்கள் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

Enai Noki Paayum Thota trailer
Enai Noki Paayum Thota trailer

`பாட்டு ஓகே! பட் படம் எப்போ சார் வரும்?’ என்று கேட்காத ஆட்கள் இல்லை. எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக ஏற்றிவிட்டு, படக்குழு படத்தை வெளியிடாமல் பல சிக்கல்களுக்குள் சிக்கித்தவித்தது. படம் நிச்சயம் வெளிவரும் என்றெல்லாம் கூறப்பட்டாலும், ரசிகர்களின் நம்பிக்கை குறைந்துகொண்டேபோனது. இந்நிலையில், ரசிகர்கள் இழந்த உற்சாகத்தை மீட்டுகொடுக்கும் விதமாக, மீண்டும் `எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் டிரெய்லர் வெளியாகி படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 6-ம் தேதி படம் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.