Published:Updated:

தடைகளைத் தாண்டி வெளியாகிறதா 'எனை நோக்கி பாயும் தோட்டா?'

தார்மிக் லீ

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான படம், `எனை நோக்கி பாயும் தோட்டா'. படத்தின் ஷூட்டிங் எப்போதோ முடிந்திருந்தாலும் தயாரிப்பில் சில சிக்கல்கள் இருப்பதால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது.

Dhanush
Dhanush ( Enai Nokki Paayum Thotta )

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், ஒன்றாக என்டர்டையின்ட்மென்ட், எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் `எனை நோக்கி பாயும் தோட்டா’. தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் சசிகுமார் நடிக்கிறார். தர்புகா சிவா படத்துக்கு இசையமைக்கிறார். ஜோமோன் டீ ஜான் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல, `மறுவார்த்தை பேசாதே’ `விசிறி’ உள்ளிட்ட பாடல்கள் ஹிட் அடித்தன. 2016-ம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கியது. ஏறக்குறைய 3 ஆண்டுகள் படம் ரீலிஸுக்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால், பல்வேறு பிரச்னைகள் காரணமாக படம் ரீலிஸாவதில் சிக்கல் ஏற்பட்டது. காலதாமதத்தால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தனுஷ் - மேகா ஆகாஷ்
தனுஷ் - மேகா ஆகாஷ்
எனை நோக்கி பாயும் தோட்டா

இதைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் 6-ம் தேதி படம் ரிலீஸாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதிகாரபூர்வமாக இப்படம் வெளியாவது குறித்து செய்திகள் இன்னும் வரவில்லை என்றாலும் படத்தை செப்டம்பர் மாதத்தில் வெளியிட தீவிர முனைப்புடன் படக்குழு வேலை பார்த்து வருவதாக கோலிவுட்டில் பேசிக்கொள்கிறார்கள்.