Published:Updated:

என்ன சொல்ல போகிறாய் - சினிமா விமர்சனம்

என்ன சொல்ல போகிறாய் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
என்ன சொல்ல போகிறாய் - சினிமா விமர்சனம்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘குக்கு வித் கோமாளி’ புகழ், ‘இன்னும் பயிற்சி வேண்டுமோ’ என யோசிக்க வைக்கிறார்.

என்ன சொல்ல போகிறாய் - சினிமா விமர்சனம்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘குக்கு வித் கோமாளி’ புகழ், ‘இன்னும் பயிற்சி வேண்டுமோ’ என யோசிக்க வைக்கிறார்.

Published:Updated:
என்ன சொல்ல போகிறாய் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
என்ன சொல்ல போகிறாய் - சினிமா விமர்சனம்

நாயகனின் குழப்பத்தால் உருவான முக்கோணக் காதலுக்கு, நாயகி என்ன பதில் சொல்கிறார் என்பதே இந்த ‘என்ன சொல்ல போகிறாய்.’

செக்லிஸ்ட் போட்டு தனக்கான பார்ட்னரைத் தேடும் ஆர்.ஜே அஸ்வின் குமாருக்குப் பிடித்த மாதிரியான பெண் அமைந்துவிட, அந்தப் பெண்ணோ தனக்குக் காதலில் தோல்வி கண்டவர்தான் கணவனாக வேண்டும் என்று கண்டிஷன் போடுகிறார். ‘வாலி’ அஜித்போல இல்லாத காதலியை இருப்பதாகக் காட்ட, நாடக நடிகையான ஒருவரைக் கொண்டு வருகிறார் அஸ்வின். இந்த நடிப்பு பின்னர் நிஜமான காதலாகிவிட, இந்த முக்கோணக் காதல் கதை என்னவானது என்பதை சீரியலாக இழுத்துச் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஹரிஹரன்.

‘குக்கு வித் கோமாளி’ அஸ்வின் குமாருக்கு நாயகனாக முதல் படம். சர்ச்சைப் பேச்சால் ட்ரோல் மெட்டீரியலானவர், நடிப்பில் பாஸ் மார்க் பெறுகிறார். ஒரு சில எமோஷன்கள் கைகூடிவரவில்லை என்றாலும் சமாளித்து ஆறுதல் பரிசு பெறுகிறார். நாயகனை விடவும் ஸ்கோர் செய்திருப்பது நாடக நடிகையாக வரும் தேஜூ அஸ்வினி. தனக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரத்தை உள்வாங்கி, இயல்பான நடிப்பால் முத்திரை பதிக்கிறார். குழப்பமான மனநிலையில் அவர் வெளிப்படுத்தும் முகபாவங்களும், மேடை நாடகத்தின்போது அவர் பேசும் வசனங்களும் நச். மற்றொரு நாயகியான அவந்திகாவிற்குப் பெரிதாக வேலையில்லை.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘குக்கு வித் கோமாளி’ புகழ், ‘இன்னும் பயிற்சி வேண்டுமோ’ என யோசிக்க வைக்கிறார். சுவாமிநாதனுடன் அவர் பேசும் வசனங்களில் காமெடியும் இல்லை; அதற்கான உடல்மொழியும் கூடிவரவில்லை. டெல்லி கணேஷ், சுப்பு பஞ்சு உள்ளிட்ட துணை நடிகர்கள் பட்டாளம் தங்களின் பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

என்ன சொல்ல போகிறாய் - சினிமா விமர்சனம்

விவேக் - மெர்வின் இசையில் பாடல்களில் இளமை, இனிமை வழிந்தோடுகிறது. அனிருத் குரலில் ‘க்யூட் பொண்ணு’ பாடலும் நடனமும் அதைப் பக்கா பார்ட்டி பாடலாக மாற்றியிருக்கின்றன. அனைத்து பிரேம்களிலும் வண்ணத்தைக் குழைத்து அழகு சேர்த்திருக்கும் ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவு படத்துக்குப் பெரும்பலம்.

ஒரு வரிக் கதை, அதிலும் யார் யாருடன் சேரப் போகிறார்கள் என்பது படம் ஆரம்பித்த அரை மணி நேரத்திலேயே தெரிந்துவிடுவதால், இரண்டாம் பாதியின் நீளம் ரொம்பவே சோதிக்கிறது. அதிலும் தனி காமெடி டிராக் என்பதையெல்லாம் தமிழ் சினிமா தாண்டி வந்தே தசாப்தம் ஆகிவிட்டதே பாஸ்! இது போதாதென்று தெரிந்த முடிவுக்கு மலேசியா வரை போய் வருகிறார்கள். யூகிக்க முடிந்த கதையும் முடிவும், நீண்டுகொண்டே செல்லும் காட்சியமைப்பும் காதல் கதைக்கான ஃபீல் குட் உணர்வைத் தர மறுக்கின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism