Published:Updated:

“என் பசங்களுக்கு நான் அம்மா இல்லை, அக்கா.. !”

நடிகை லைலா
பிரீமியம் ஸ்டோரி
நடிகை லைலா

நடிகை லைலா கம்பேக்

“என் பசங்களுக்கு நான் அம்மா இல்லை, அக்கா.. !”

நடிகை லைலா கம்பேக்

Published:Updated:
நடிகை லைலா
பிரீமியம் ஸ்டோரி
நடிகை லைலா

‘மகிழ்ச்சியைப் பரப்புவது எனக்கு மிகவும் பிடித்தமான செயல்!’

நடிகை லைலாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தைத் திறந்ததுமே, இந்த வாசகம் தான் முதலில் பளிச்சிடுகிறது.

“சின்ன வயசுல நான் ரொம்பவே சுட்டித்தனமா இருப்பேன். ஸ்கூல்ல பயங்கரமா குறும்பு பண்ணுவேன். எனக்கு பனிஷ்மென்ட் கொடுத்து டீச்சர்ஸ் டயர்டு ஆகிடுவாங்க. ‘பிதாமகன்’ ஷூட்டிங்ல ‘ஒரு நிமிஷம் சிரிக்காம இருக்கணும்’னு விக்ரம் என்கிட்ட சேலஞ்ச் பண்ணார்.

30 விநாடிகள்லயே பந்தயத்துல தோத் துட்டேன். இடைவிடாம சிரிச்சுகிட்டே இருன்னாலும் இருப்பேன். ஆனா, இறுக்கமா கொஞ்ச நேரம்கூட என்னால இருக்க முடியாது. என் சிரிப்பால ஷூட்டிங் வேலைகள் பாதிக்குதுனு சிலர் நேரடியாவே சொல்லி கோபப்பட்டிருக்காங்க. ஆனா, எதுக்காகவும் என்னை நான் மாத்திக்க மாட் டேன். ஏன்னா, நான் ஜோவியலா சிரிச்சு ஹேப்பியா வேலை செய்யுற படங்கள் ஹிட் ஆகிடும்னு எனக்கு உறுதியான நம்பிக்கை உண்டு. ஜாலியா இருக்கிற அதேநேரம், ஆன் ஸ்கிரீன்ல சீரியஸா நடிச்சுடுவேன்.

எந்த அளவுக்கு ஹேப்பியா இருக்கிறோமோ அந்த அளவுக்கு இளமையுடன் இருக்கலாம். என் வாழ்க்கையில மன அழுத்தம், கவலை உள்ளிட்ட எதிர்மறை எண்ணங்கள் எதுக்குமே இடம் கிடையாது. நான் மட்டுமல்ல, என்னைச் சார்ந்த எல்லாருமே ஹேப்பியா இருக்கணும்னு ஆசைப்படுவேன். ஸோ... சிரிங்க சிரிங்க சிரிச்சுகிட்டே இருங்க!” - தனது பாசிட்டி விட்டிக்கான காரணத்துடன் ஆரம்பிக்கும் லைலாவின் பேச்சில் எனர்ஜி லெவல் தெறிக்கிறது.

 குடும்பத்தினருடன்...
குடும்பத்தினருடன்...

தமிழ் உட்பட பல மொழிகளிலும் ஏராள மான வெற்றிப் படங்களில் நடித்த லைலா, 16 ஆண்டுகளுக்குப் பிறகு, ரீ-என்ட்ரிக்குத் தயாராகியிருக்கிறார். கார்த்தி நடிக்கும் ‘சர்தார்’ படத்தில் முக்கியமான ரோலில் நடிப் பவரைச் சந்தித்தோம். வீடியோ பேட்டிக்காக நாம் கொடுத்த பல்வேறு டாஸ்குகளையும் கலகலப்புடன் செய்துகாட்டிய லைலா, சிரிப்பு மழையில் நம்மை குஷிப்படுத்தினார்.

“சின்ன வயசுலேருந்து பிராணிகள் மேல எனக்கு ரொம்ப பிரியம். அதனால, வெட்டினரி டாக்டராகணும் ஆசைப்பட்டேன். ஆனா, நான் நடிகையானது எனக்கே ஆச்சர்யம்தான். ப்ளஸ் ஒன் படிக்கும்போதே பாலிவுட்டுல அறிமுகமானேன். பல மொழிகள்ல நடிச் சிருந்தாலும், தமிழ் சினிமா என் மனசுக்கு ரொம்பவே நெருக்கமானது” என்கிற லைலா வுக்கு, தோளுக்கு மேல் வளர்ந்த இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்கின்றனர்.

“என் வயசை கால்குலேட் பண்ணாதீங்க...'' என்று சிரித்தபடியே தொடர்ந்தவர், “பெரியவன் டாரியனுக்கு 15 வயசு. சின்னவன் கியானுக்கு 12 வயசு. மூத்தவன் 6.3 அடி உயரத்துலயும், சின்ன பையன் என் உயரத்துக் கும் வளர்ந்துட்டானுங்க. பெரியவனோடு நான் அவுட்டிங் போனா, ‘இது உங்க பிரதரா?’னு பலரும் கேட்பாங்க. ‘ஆமா...’னு ஹேப்பியா சொல்லுவேன். டாரியன் என்னைப் பார்த்துக் கிண்டலா முறைப்பான்.

நான் நடிச்ச படங்களை எப்பயாச்சும் பசங்க பார்ப்பாங்க. ‘சினிமாவுக்கு நடுவுல நீ என்னமா தமாஷ் பண்ணிட்டிருக்கே’னு மொக்கை பண்ணிடுவானுங்க. பசங்களுக்கு டஃப் கொடுக்கிற அளவுக்கு அவனுங்களோடு நானும் செம சேட்டை பண்ணுவேன். பிள்ளைகளுக்கு சினிமாவுல சுத்தமா விருப்ப மில்லை. படிப்புலதான் ஆர்வமா இருக்காங்க. ஹோம்வொர்க் சொல்லிக் கொடுக்கிறது, விளையாடுறது, பேரன்ட்ஸ் மீட்டிங்ல கலந்துக்கிறதுனு என் உலகத்துல பசங்கதான் முதன்மையான இடத்தைப் பிடிச்சிருக்காங்க” - சிநேகம் கொஞ்சும் அம்மாவாகப் பூரிக்கும் லைலாவின் கணவர் மெஹதின், பிசினஸ்மேன்.

“மீடியா வெளிச்சம் படாம, எல்லா வகையிலும் அமைதியா வாழ ஆசைப்படுற நபர் அவர். அவருக்கும் சேர்த்து நான் அதிகமா பேசி, கலாட்டா செய்யுறதை என் கணவர் ரொம்பவே ரசிப்பார். ஒரு கிளியையும், தத்தெடுத்த ரெண்டு நாய்களையும் வீட்டுல வளர்க்கிறோம். அவங்களைக் கவனிச்சுக்கிறது, சமையல், வீட்டு நிர்வாகம், குழந்தை வளர்ப்புனு ஒவ்வொரு நாளையும் என்ஜாய் பண்ணுறேன்” - பரவசத்துடன் கூறும் லைலா, மும்பையில் வசித்துவருகிறார். இரண்டாவது இன்னிங்ஸை கூடுதலான புத்துணர்வுடன் தொடங்கியிருக்கும் லைலா, சினிமா மட்டுமன்றி வெப் சீரிஸிலும் நடிக்கவிருக் கிறார்.

“கல்யாணத்துக்குப் பிறகு, சில ஆஃபர்ஸ் வந்துச்சு. ஆனா, அதெல்லாம் எனக்குப் பிடிக் கலை. குடும்ப வாழ்க்கையில சந்தோஷமா இருந்தாலும், சினிமாவை மிஸ் பண்ற ஃபீல் அடிக்கடி ஏற்பட்டுச்சு. பசங்க ஓரளவுக்கு வளர்ந்துட்ட நிலையில, மறுபடியும் நடிக்கலாம்னு முடிவெடுத்தேன். ‘சர்தார்’ கதை என்னை ரொம்பவே கவர்ந்துச்சு. இதுவரைக்கும் பார்க்காத லைலாவை இந்தப் படத்துல பார்க்கலாம். நடிகர் சூர்யா மாதிரியே அவரின் தம்பி கார்த்தி யும் ஃபிரெண்ட்லியான நபர் தான்” - உற்சாகம் குறையாமல் பேசும் லைலா, அடுத்த சில கேள்விகளுக்கும் சுவாரஸ்யமாக பதிலளித்தார்.

“என் பசங்களுக்கு நான் அம்மா இல்லை, அக்கா.. !”

‘நந்தா’, ‘உன்னை நினைத்து’, ‘பிதாமகன்’னு ஹாட்ரிக் ஹிட்ஸ் கொடுத்த மூணு படங்கள்லயும் சூர்யாவுடன் நீங்க ஜோடி சேரவே மாட்டீங்க. அதைப் பத்தி யோசிச்சிருக் கீங்களா?

“ஆமால்ல! இப்பவரைக்கும் இதை நான் நோட்டீஸ் பண் ணலை. சூர்யாவையும், சம் பந்தப்பட்ட படங்களின் டைரக் டர்களையும் சந்திக்கிறப்போ இந்தக் கேள்வியை மறக்காம கேட்பேன். யோசிக்க வேண்டிய கேள்வி இது.”

விஜய்யுடன் நடிக்க முடியாத வருத்தம் இன்னும் இருக்கா?

“நிச்சயமா இருக்கு. ‘உன்னை நினைத்து’ படத்துல முதல்ல விஜய் கமிட்டானார். ‘என்னைத் தாலாட்டும் சங்கீதம்’ பாட்டுல மட்டும் அவரும் நானும் சேர்ந்து நடிச்சோம். திடீர்னு அந்தப் படத்திலேருந்து விஜய் விலகிட்டார். அதுக்கப்புறமா பலமுறை நாங்க சந்திச்சிருக்கோம். அப்ப, ‘நாம சேர்ந்து வொர்க் பண்ண வேண்டிய புராஜெக்ட் ஒண்ணு பாக்கி இருக்கு’னு தமாஷா பேசிப் போம். அது சாத்தியமானா ரொம்பவே சந்தோஷப்படுவேன்.”

ஆரம்ப காலத்திலிருந்து தொடரும் சினிமா நட்பு பத்தி...

“ஜோதிகாவும் நானும் ஒரே கால கட்டத்துலதான் நடிக்க வந்தோம். அப்பல்லாம் அவரைத்தான் என் போட்டியாளரா நினைப் பேன். என் வீட்டுக்குப் பக்கத்துலதான் ஜோதிகாவின் பெற்றோர் வீடு இருக்கு. பெற்றோரைச் சந்திக்க ஜோதிகா மும்பை வரும்போதெல்லாம் என் வீட்டுக்கு வருவாங்க. எங்களைப் போலவே எங்களோட குழந்தைகளும் நண்பர்களா இருக்காங்க.”

உங்க ஆக்டிங் திறமையை எந்த டைரக்டர் சரியா பயன்படுத்தினதா நினைக்கிறீங்க...

“டைரக்டர் பாலா சார். தன் பட ஆர்டிஸ்ட்டுகள்கிட்ட அவர் கண்டிப்புடன் வேலை வாங்குவார்னு பேச்சு இருக்கு. ஆனா, என்கிட்ட அவர் ரொம்பவே ஜாலியா வேலை வாங்குவார். சொல்லப்போனா, என் சேட்டைகளைப் பொறுத்துகிட்டு, என்கிட்ட வேலை வாங்க அவர்தான் சிரமப்பட்டிருக் கணும். இதை அவர்கிட்ட கேட்டா தான் தெரியும்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism