Published:Updated:

தமிழ் சினிமாவும் மிகைப்படுத்தப்படும் மனநலக் குறைபாடுகளும்! #NoMoreStress

இதுவரை தமிழ் சினிமாக்களில் காட்டப்பட்ட பெரும்பான்மையான மனநலக் குறைபாடுகள், அல்லது சிக்கல்கள் கொண்ட கதாபாத்திரங்கள் மிகைப்படுத்தப்பட்டவையாகவே இருந்துள்ளன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அபத்தங்களுக்கும் கோலிவுட்டுக்கும் நெடுந்தூரமில்லை என்றே சில நேரங்களில் தோன்றுகிறது. வணிக சமரசங்கள், லாபம் ஈட்டல், ஏ பி சி என்ற பார்வையாளர்களின் பிரிவுகள் எனப் பல முனைகளிலிருந்து வரும் அழுத்தங்களுக்கு இடையே ஒரு நல்ல படைப்பைக் கொடுத்துவிட ஒரு இயக்குநர் படும்பாடு ஒரு கண்ணோட்டத்தில் சிக்கலானதாக இருந்தாலும், ஒரு மாற்றுப்பார்வையில் அபாயகரமானதாகவும் இருக்கிறது.

தமிழ் சினிமாவும் மிகைப்படுத்தப்படும் மனநலக் குறைபாடுகளும்! #NoMoreStress

'நேர்கொண்ட பார்வை' படத்தின் முன்னோட்டம் வெளியானபோது "என்னது ஃபைட்டா? இது ’பிங்க்’ படத்துல இல்லையே" என்ற குரல்களே சமூக வலைதளங்கள் எங்கும் ஒலித்தன. அஜீத் போன்ற பெருமக்கள் நாயகர்களைவைத்துப் படம் எடுக்கும்போது இப்படிப்பட்ட சண்டைக் காட்சிகளைத் திரைக்கதையில் இணைப்பது இயல்புதான். அதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும் என்ற குரல்கள் மறுபுறம் ஒலிக்காமலும் இல்லை.

என்றாலும், அதற்கான காரணத்தை அந்தத் திரைக்கதை விவரிப்பதில்தான் இங்கே சிக்கல் ஏற்படுகிறது. அடிப்படையில் 'நேர்கொண்ட பார்வை' கதையின் நாயகனுக்கு பைபோலார் டிஸ்ஸார்டர் என்ற மனச்சிக்கல் இருக்கிறது. அதனால் அந்தப் பாத்திரத்தால் கோபத்தைக் கட்டுப்படுத்தமுடியாது. சரியாக மருந்து எடுத்துக்கொள்ளாத போது அவர் கோபத்தின் உச்சத்துக்கே செல்வதுபோல படத்தில் சித்திரிக்கப்பட்டிருக்கும். அதையே அந்த சண்டைக் காட்சிக்கான அடித்தளமாக அமைத்திருப்பார்கள்.

தமிழ் சினிமாவும் மிகைப்படுத்தப்படும் மனநலக் குறைபாடுகளும்! #NoMoreStress

பைபோலாரால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து தமிழ் சினிமா பேசியது, இது முதல்முறை இல்லை. ஏற்கெனவே தனுஷ் நடித்த '3' படத்தில் அதன் நாயகனுக்கு இதே மனநிலை இருப்பதாகவும், அது தற்கொலை செய்யத் தூண்டுமளவுக்கு அவனுக்கு மன அழுத்தம் தருவதாகவும் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த இரண்டும் முன்னணி நடிகர்கள் நடித்ததாலேயே புகழ்பெற்ற திரைப்படங்கள். ஒரு மனநிலைச் சிக்கலுக்கான விளக்கத்தை வன்முறையான கண்ணோட்டத்தில் இரண்டு படங்களுமே. சித்திரித்திருக்கின்றன. இந்த இரண்டு படங்களை அடிப்படையாக வைத்து பைபோலார் மனநிலையில் இருக்கும் ஒருவரை அணுகினால், அவருக்கு ஏற்படும் நெருக்கடியை யோசித்துப்பாருங்கள்.

தமிழ் சினிமாவும் மிகைப்படுத்தப்படும் மனநலக் குறைபாடுகளும்! #NoMoreStress

மனநல மருத்துவத்துறை பைபோலாருக்கு சரியான தீர்வைக் கண்டு, அதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வதற்கான முறைகளைக் கண்டும் பல ஆண்டுகளாகிவிட்டன. மேலும், படங்களில் காட்டப்படுவது போல் இல்லை, உண்மையில் பைபோலார் மனநிலை கொண்டவர்களால் வாழ்க்கையை தற்சார்போடே வாழமுடியும் என்றும் சொல்கிறது உளவியல் துறை. இந்நிலையில், பைபோலாருக்கு இப்படியொரு சித்திரிப்பு தேவையா என்பது இங்கு விவாதமாகிறது.

இந்தப் படங்களாலேயே பைபோலாரால் பாதிக்கப்பட்ட பலருடன் நட்பு, காதல் போன்ற உறவுகளில் ஈடுபட மற்றவர்கள் யோசிக்கின்றனர் என்பதே நிதர்சனம். மேலும், "உனக்கு இப்பவும் தற்கொலை எண்ணம் இருக்கா?" என்ற கேள்வியையும் அவர்கள் அன்றாடம் எதிர்கொண்டு வருகின்றனர். திரைப்படங்கள் ஏற்படுத்தியுள்ள தாக்கம் இதுதான்.

உடனே பைபோலாருக்கு மட்டுமே இப்படியான மிகைப்படுத்தப்பட்ட சித்திரிப்புகள் தரப்படுவதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இதுவரை தமிழ் சினிமாக்களில் காட்டப்பட்ட பெரும்பான்மையான மனநலக் குறைபாடுகள், அல்லது சிக்கல்கள் கொண்ட கதாபாத்திரங்கள் மிகைப்படுத்தப்பட்டவையாகவே இருந்துள்ளன.

சினிமா ஹீரோயிசக் கலாசாரம் சமூகத்தில் வன்முறையை ஊக்குவிக்கிறதா?- ஓர் உளவியல் பார்வை #NoMoreStress

மனநல மையங்களில் கதாபாத்திரங்கள் அனுமதிக்கப்படுவதாகக் காட்டப்படும் காட்சிகளில் பெரும்பாலும் சுற்றியிருக்கும் பிற நோயாளிகளின் உடல்மொழியில் இந்த மிகைப்படுத்தல் தொடங்குகிறது. அவர்கள் செயல், சொன்ன வாக்கியத்தையே மீண்டும் மீண்டும் சொல்வது, அவர்கள் வன்முறையான போக்குடன் இருப்பதாகக் காட்டுவது, என இந்தப் பட்டியல் நீள்கிறது.

தமிழ் சினிமாவும் மிகைப்படுத்தப்படும் மனநலக் குறைபாடுகளும்! #NoMoreStress

அதில் உச்சபட்சம் என்றால் 'அந்நியன்' மற்றும் 'சந்திரமுகி' எனலாம். பல தன்மைகள், பல பண்புகள் உள்ளடக்கிய ஒருவருக்கு வரும் மனநிலையான 'ஸ்ப்ளிட் பர்சனாலிட்டி'யையும், 'மல்டிபிள் பர்சனாலிட்டி டிஸ்ஸார்டரை'யும் இந்தப் படங்கள் சித்திரித்திருந்த விதங்கள்தாம் அபத்தத்தின் உச்சம். உண்மையில் 'சந்திரமுகி' திரைப்படம் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் என்ற போர்வையில் எடுக்கப்பட்ட ஹாரர் படம். ஸ்ப்ளிட் பர்சனாலிட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் உண்மையில் பேய்ப் பிடிப்பதைப் போன்றெல்லாம் நடந்துகொள்வதில்லை. அவர்களுக்குள் வெவ்வேறு மனநிலைகள் இருக்கும். அவை வெவ்வேறு காலக்கட்டங்களில் வெளிப்படும். இரண்டுமே சாந்தமான மனநிலையாகவும் இருக்கலாம். பெரும்பாலும் அப்படித்தான் இருக்கின்றன. அந்தக் குறைபாடு உள்ளவர்களுக்கு இருக்கும் பெரும் சிக்கலாகப் பார்க்கப்படுவது, அந்த இரண்டு பண்புகளில் ஏதொவொன்று மற்றொன்றை முந்திச்செல்ல விரும்பும். அந்தப் போட்டியே இப்படி வெளிப்படுகிறது.

`அந்நியன்' படத்தில் காட்டுவதுபோல் 'அஞ்சு கொல'... 'நான் பண்ணல'... 'நான்தான் பண்ணுனேன்' என்றெல்லாம் அரை நொடிக்கு ஒருமுறையெல்லாம் இந்தப் பண்புகள் மாறுவதில்லை. அது காலப்போக்கில் மாறும். ஸ்ப்ளிட் அல்லது மல்டிபிள் பர்சனாலிட்டி டிஸ்ஸார்டரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எத்தனை வகையான பண்புகள் வேண்டுமானாலும் இருக்க வாய்ப்பிருக்கிறது. தமிழில் இந்த வகை மனநிலையை இதுவரை ஓரளவுக்குச் சரியாகச் சித்திரித்தது, 90களில் வெளியான 'மர்ம தேசம் - விடாது கருப்பு' என்ற தொலைக்காட்சித் தொடர் மட்டும்தான்.

தமிழ் சினிமாவும் மிகைப்படுத்தப்படும் மனநலக் குறைபாடுகளும்! #NoMoreStress

மனிதன் பண்படத் தொடங்கிய காலம்தொட்டே, சமூகத்தின் பிம்பமாகத்தான் இருந்துவந்துள்ளது, கலை. சமூகத்தின் இன்பங்கள், இடர்கள் எல்லாவற்றையும் பதிவுசெய்து, எதிர்காலத்துக்கு ஒரு களஞ்சியமாகிறது. அப்படியென்றால், ஒரு கலைஞனுக்கு இருக்கவேண்டிய பொறுப்புணர்வு விலைமதிப்பற்றது, மிக முகாமையானது. தன் படைப்பில் சொல்லப்படும் ஒவ்வொரு சொல்லும், காட்டப்படும் ஒவ்வொரு காட்சியும், வரையப்படும் ஒவ்வொரு புள்ளியும் சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு வரும் சமூகத்துக்கு அந்தக் கலைஞனின் காலத்துக்கான குறிப்புகள். கலைக்கு இத்தனை கடமை இருக்கும்பட்சத்தில் அதைப் படைக்கும் கலைஞர்களுக்கும் அது இருக்கவேண்டியது அவசியம்.

Nerkonda Paarvai vs Pink - 6 Differences!

நம்மிடம் ஒரு கோப்பை தூய்மையான இனிப்பான பால் தரப்படுகிறது. ஆனால், அதைத் தருபவர், "பதறவேண்டாம் இதுல ரெண்டே ரெண்டு சொட்டு விஷம் கலந்திருக்கு. உடம்புக்கு ஒண்ணும் பண்ணாது. நம்பி நீங்க குடிக்கலாம்" என்றால், நம்மால் அதைப் பருகமுடியுமா? மனம் அதற்கு ஒத்திசைக்குமா? இப்படித்தான் தமிழில் வெளிவரும் பல நல்ல படங்களில், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த கண்ணோட்டத்தை இரு துளி விஷமாகக் கலந்திருப்பதுதான் சிக்கலாகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு