சினிமா
Published:Updated:

"எதிர்க்குரல் இல்லாமல் எதுவும் நடக்காது!"

சமுத்திரக்கனி
பிரீமியம் ஸ்டோரி
News
சமுத்திரக்கனி

நாயகன் ரங்கன் கேரக்டரும் அவர் நண்பரான கம்யூனிஸ்ட் தோழரின் கேரக்டரும்தான் நாவலில் பிரதானமா இருக்கும்.

`` ‘தறியுடன்’ நாவலைப் படமாக்கணும்னு நினைச்சுப் படிக்கலை; படிச்ச பிறகும் அதைப் படமாக்கணும்னு நினைக்கல. அது ஒரு தனி உலகத்தையும், கம்யூனிஸ்ட் தோழர்களின் இன்னொரு பக்கத்தையும் காட்டுச்சு. ஒருநாள் கருணாஸ் சார், வெற்றிமாறன்கிட்ட ‘ஒரு படம் பண்ணலாம்’னு பேசிட்டி ருந்தார். அப்பதான் `தறியுடன்’ நாவல் ரங்கன் கேரக்டர் எனக்கு ஞாபகத்துக்கு வந்துச்சு’’ எனப் பேச ஆரம்பித்தார் இயக்குநர் மணிமாறன். வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மணிமாறன் ‘அசுரன்’ படத்தில் அவரோடு இணைந்து திரைக்கதை எழுதியதோடு, சில காட்சிகளையும் இயக்கியிருந்தார். சித்தார்த் நடித்த ‘உதயம் NH4’ படத்தின் மூலம் இயக்குநரானவரின் மூன்றாவது படம் ‘சங்கத்தலைவன்.’

சங்கத்தலைவன்
சங்கத்தலைவன்
சமுத்திரக்கனி
சமுத்திரக்கனி

‘`கம்யூனிஸ்ட் கதையில் கருணாஸ் எப்படி?’’

``நாயகன் ரங்கன் கேரக்டரும் அவர் நண்பரான கம்யூனிஸ்ட் தோழரின் கேரக்டரும்தான் நாவலில் பிரதானமா இருக்கும். நெசவாளரான ரங்கன் கேரக்டருக்கு, நெசவாளர்கள் சங்கத் தலைவரான அந்த கம்யூனிஸ்ட் தோழர் பண்ற போராட்டங்கள் மேல பெரிய நம்பிக்கையோ ஈடுபாடோ இருக்காது. ஆனால், ஒரு கட்டத்தில் முதலாளித் துவத்தைப் பற்றியும் கம்யூனிஸ்ட் போராட்டங்களைப் பற்றியும் ரங்கனுக்குச் சரியான புரிதல் கிடைக்கும். அதன்பிறகு இரண்டு பேரும் சேர்ந்து பயணிப்பாங்க. ரங்கன் கேரக்டர் கம்யூனிஸ்ட் தோழரோடு சேரும் வரைக்கும் சில நகைச்சுவைக் காட்சிகளும் இருக்கும். அதுக்கும் கருணாஸ் சரியா இருப்பார்னு தோணுச்சு. கதை கேட்டதில் இருந்தே ரொம்ப ஈடுபாட்டோடு இருந்தார். நிஜ வாழ்க்கையில் அவர் வேறமாதிரியான கட்சித் தலைவரா இருந்தாலும், இந்தக் கதைக்கு அடிப் படையான சித்தாந்தத்தைப் புரிஞ்சிக்கிட்டு, அதுக்கு எவ்வளவு உண்மை சேர்க்க முடியுமோ அதைப் பண்ணியிருக்கார். எந்த சீன்லயும் அவர் மாற்றங்களோ, அதுகுறித்து மறுப்போ எதுவுமே சொல்லாமல் நடிச்சுக்கொடுத்தார்.’’

சங்கத்தலைவன்
சங்கத்தலைவன்
சமுத்திரக்கனி
சமுத்திரக்கனி

‘`சமுத்திரக்கனியின் வழக்கமான கருத்துப் படங்களிலிருந்து இது வேறுபட்டதாக இருக்குமா?’’

‘`இந்தக் கதையைக் கேட்டதும் அவர், `நிச்சயமா பண்ணலாம்’னு சொல்லிட்டார். ஒரு சங்கத்தின் தலைவரா இருக்கிறதுக்கான ஆளுமை, அவரோட இயல்பான தோற்றத்திலேயே இருக்கிறனால, இந்தக் கதைக்கும் இந்த பட்ஜெட்டுக்கும் சரியான நடிகரா இருந்தார். படத்தில் சில இடங்களில் அவர் அதிகம் பேச வேண்டியது இருந்துச்சு. ஆனால், கதையைத் தாண்டி அவர் ஒரு வார்த்தைகூடக் கூடுதலாப் பேசியிருக்க மாட்டார். குறிப்பா, பார்வையாளர் களைப் பார்த்து அவர் கருத்து சொல்லலை.’’

சங்கத்தலைவன்
சங்கத்தலைவன்
சங்கத்தலைவன்
சங்கத்தலைவன்

‘`படத்தோட ஹீரோயின்ஸ் பற்றிச் சொல்லுங்க?’’

``ஹீரோ இன்ஜினீயரிங் படிச்சிட்டு, பொது வாழ்க்கைக்கு வந்திருப்பார். அவருக்கு ஜோடியாக, தொலைக்காட்சித் தொகுப்பாளர் ரம்யா நடிச்சிருக்காங்க. கல்யாணத்துக்குப் பிறகு கணவரை நேசிச்சு வாழுற ஒரு மனைவி. கணவர் போராட்டங்கள், சிறைன்னு பொது வாழ்க்கையில் தீவிரமா இருந்தாலும், அதைப் பெரிதுபடுத்தாமல் வீட்டைப் பார்த்துக்கிற ஒரு மனைவி கேரக்டர். ரொம்பவே நல்லா நடிச்சிருக்காங்க. ‘அறம்’ படத்துல நடிச்ச சுனு லட்சுமி இன்னொரு நாயகியா நடிச்சிருக்காங்க.’’

சங்கத்தலைவன்
சங்கத்தலைவன்
சங்கத்தலைவன்
சங்கத்தலைவன்

‘`கம்யூனிசத்தைப் பற்றிய படம் இப்போதுள்ள சூழ்நிலையில் எந்த அளவுக்கு முக்கியம்னு நினைக்கிறீங்க?’’

``இப்ப மட்டுமல்ல, எப்பவும் கம்யூனிசத்தைப் பற்றிய படங்கள் நாட்டுக்கு ரொம்ப முக்கியம். கம்யூனிஸ்ட்கள்னு சொன்னாலே, ’உண்டியல் குலுக்குவாங்க; வறுமையில் இருப்பாங்க’ன்னு பேசுற பல பேர் இருக்காங்க. இப்போ தமிழக கம்யூனிஸ்ட்டுகளும் சரி, தேசிய கம்யூனிஸ்டுகளும் சரி, பலர் நல்ல வேலைகளில் இருக்காங்க. அதையெல்லாம் யாரும் பேசுறது இல்லை. போராட்டத்தின் அவசியத்தை நாம் ஒவ்வொரு தலைமுறைக்கும் கடத்திக்கிட்டே இருக்கணும். எதிர்க்குரல் இல்லாமல், போராட்டம் இல்லாமல் எதுவுமே கிடைக்காது. ஜல்லிக்கட்டு, எட்டு வழிச்சாலை, ஐந்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு போன்ற சமூகப்பி ரச்னைகளுக்குப் போராட்டத் தால்தான் தீர்வு கிடைச்சிருக்கு. போராடாமல் இருந்திருந்தால், அதையெல்லாம் நடைமுறைக்குக் கொண்டுவந்திருப்பாங்க. இதை உணர்த்துவதற்காகவே கம்யூனிசப் படங்கள் அதிகம் வரணும்.’’