Published:Updated:

வைரல் போட்டோஷூட், குட்டி நயன்தாரா, பிளாஸ்டிக் தவிர்ப்பு பிரசாரம்... அசத்தும் ‘விஸ்வாசம்’ அனிகா!

அனிகா
பிரீமியம் ஸ்டோரி
அனிகா

வைரல் ஸ்டார்

வைரல் போட்டோஷூட், குட்டி நயன்தாரா, பிளாஸ்டிக் தவிர்ப்பு பிரசாரம்... அசத்தும் ‘விஸ்வாசம்’ அனிகா!

வைரல் ஸ்டார்

Published:Updated:
அனிகா
பிரீமியம் ஸ்டோரி
அனிகா

`விஸ்வாசம்’ படத்தில் அஜித்தின் செல்ல மகளாக நடித்து ரசிகர்களின் மனம்கவர்ந்தவர் அனிகா சுரேந்திரன். 2015-ல் `என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். ‘நானும் ரௌடிதான்’, `மிருதன்’ உள்ளிட்ட படங்களிலும், மறைந்த முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதாவின் பயோகிராபியான `குயின்’ வெப் சீரிஸில் பள்ளிப் பருவ ஜெயலலிதாவாகவும் நடித்து கவனம் ஈர்த்தார்.

தற்போது டீன்ஏஜில் இருக்கும் அனிகா சமூக வலைதளங்களில் பகிர்ந்துவரும் புகைப்படங்கள் எல்லாம் அதிரடி ரகம். ‘என்னம்மா உங்க திட்டம்...’ என்ற கேள்வி யோடு அனிகாவிடம் பேசினோம்.

வைரல் போட்டோஷூட், குட்டி நயன்தாரா, பிளாஸ்டிக் தவிர்ப்பு பிரசாரம்... அசத்தும் ‘விஸ்வாசம்’ அனிகா!

‘‘போன வருஷம் பத்தாவது படிச்சிட்டு இருந்ததால, படிப்புல மட்டும் கவனம் செலுத்திட்டு வந்தேன். இப்போ ப்ளஸ் ஒன் படிச்சிட்டு இருக்கேன். ஆன்லைன் கிளாஸ் போயிட்டு இருக்கு. டென்த் எக்ஸாம் முடிஞ்சதும் படங்களில் நடிக்கலாம்னுதான் இருந்தேன். ஆனா, கொரோனா பிரச்னை, லாக்டௌன் காரணமா ஷூட்டிங் எதுவும் நடக்கல. வாய்ப்புகளும் வரல. இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா இயல்பு நிலைக்குத் திரும்பி ஷூட்டிங் எல்லாம் எடுக்கத் தொடங்கியிருக்காங்க. இனிமேல் வாய்ப்புகள் வந்தா கண்டிப்பா பயன்படுத்திக்குவேன்’’

- படங்களில் காணாமல்போன காரணத்தோடு பேச ஆரம்பிக்கிறார் அனிகா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வைரல் போட்டோஷூட், குட்டி நயன்தாரா, பிளாஸ்டிக் தவிர்ப்பு பிரசாரம்... அசத்தும் ‘விஸ்வாசம்’ அனிகா!

லாக்டௌன் எப்படிப் போச்சு..?

கிட்டத்தட்ட ஆறு மாசமா கேரளாவில் என் வீட்டை விட்டு வெளியில வேற எங்கேயும் போக முடியல. ஹாலிவுட் மூவிஸ் நிறைய பார்த்தேன். பரத நாட்டியம், களரி கத்துக்கிட்டேன். பாட்டில் பெயின்ட்டிங் பண்ண ஆரம்பிச்சிருக் கேன். யூடியூபை பார்த்துக் கொஞ்சம் சமைக்கவும் கத்துக்கிட்டேன். ஃப்ரீ டைம்ல போட்டோஷூட்னு பிஸியாதான் இருக்கேன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
வைரல் போட்டோஷூட், குட்டி நயன்தாரா, பிளாஸ்டிக் தவிர்ப்பு பிரசாரம்... அசத்தும் ‘விஸ்வாசம்’ அனிகா!

சமீபத்திய போட்டோஷூட் எல்லாம் வேற லெவலில் இருக்கே... கமென்ட்ஸ் எல்லாம் கவனிக்கிறீங்களா?

புதுசா ட்ரை பண்ணலாம்னு யோசிச்சபோது வந்த ஐடியாதான் இந்த கான்செப்ட் போட்டோஷூட். ஓணம், நேச்சர் லவ், பாரம்பர்யம், மாடர்ன் லுக்குன்னு ஏதவாது ஒரு கான்செப்டை எடுத்துக்கிட்டு அதுக்கு ஏற்ற மாதிரி காஸ்ட்யூம், ஃப்ரேம் எல்லாம் செட் பண்ணிட்டு போட்டோஷூட் எடுப்போம். போட்டோஸை சோஷியல் மீடியா பக்கங்களில் ஷேர் பண்ணுவேன்.

நிறைய பாசிட்டிவ் கமென்ட்ஸ் வருது. சிலர் என் வயசு, டிரஸ் பத்தி மோசமா கமென்ட் பண்றாங்க. நான் கண்டுக்கிறதில்லை. கருத்து சொல்லட்டும், தப்பில்லை. அடுத்தவங்க மனசைக் காயப்படுத்தாம பண்ணினா ஓகே.

வைரல் போட்டோஷூட், குட்டி நயன்தாரா, பிளாஸ்டிக் தவிர்ப்பு பிரசாரம்... அசத்தும் ‘விஸ்வாசம்’ அனிகா!

நீங்க குட்டி நயன்தாராவாமே...

என்னோட சமீபத்திய போட்டோஸ் எல்லாம் நயன்தாரா மேடம் லுக்ல இருக்குன்னு நிறைய பேர் சொல்றாங்க. சிலர் என்னை ‘குட்டி நயன்தாரா’ன்னு கூட சொல்றாங்க. அது கொஞ்சம் ஓவரா இருந்தாலும் ஒருபக்கம் சந்தோஷமா இருக்கு. நயன்தாரா மேடம் தான் எனக்கு ரோல் மாடல். ஆனா, அவங்கள மாதிரியே லுக் வரணும்னு நான் ஸ்பெஷலா மேக்கப் எதுவும் பண்றதில்லை. சில காஸ்ட்யூம்ல அவங்களை மாதிரி லுக் வருது. அவ்ளோதான்!

 அனிகாவின் சணல் பைகள்...
அனிகாவின் சணல் பைகள்...

பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலா சணல் பைகளைப் பயன்படுத்தச் சொல்லி பிரசாரம் பண்றீங்கபோல...

எதுக்கெடுத்தாலும் பிளாஸ்டிக் பைகளைத்தான் எடுத்துட்டுப்போறோம். அதுக்குப் பதிலா சணல் மாதிரி இயற்கையான, மக்கும் பொருள்களிலான பைகளைப் பயன்படுத்துறது நமக்கும் சுற்றுப்புறத்துக்கும் நல்லது. அதனால சணல் பைகளைப் பயன்படுத்தும்படி என்னோட நண்பர்கள், ரசிகர்கள்கிட்ட சொல்லிட்டு இருக்கேன். நாங்களே சணல் பைகளைத் தயார் செய்து குறைந்த விலையில கொடுத்துட்டு இருக்கோம். விற்பனை மூலமா வர்ற பணத்தை கேரளாவுல உள்ள ஏழை மாணவர்களின் படிப்பு செலவுக்குக் கொடுக்கறோம்.