Published:Updated:

ஹீரோயின் ஒல்லியாதான் இருக்கணும்னு ஏதாவது ரூல் இருக்கா? - அபர்ணா பாலமுரளி

அபர்ணா பாலமுரளி
பிரீமியம் ஸ்டோரி
அபர்ணா பாலமுரளி

#Entertainment

ஹீரோயின் ஒல்லியாதான் இருக்கணும்னு ஏதாவது ரூல் இருக்கா? - அபர்ணா பாலமுரளி

#Entertainment

Published:Updated:
அபர்ணா பாலமுரளி
பிரீமியம் ஸ்டோரி
அபர்ணா பாலமுரளி

``நான் நடிகையாவேன்னு நினைக்கலை. சூர்யா சாருக்கு ஜோடியா நடிப்பேன்னு நம்பலை. அந்தப் படம் என் நடிப்பைக் கொண்டாடும்னு எதிர்பார்க்கலை... ஆனா, எல்லாமே நடந்திருக்கு...’’ - பிரமிப்பு விலகாமல் பேசுகிறார் அபர்ணா பாலமுரளி. ‘சூரரைப் போற்று’ நாயகி.

லாக்டௌனில் மலையாளப் படங்கள் பார்த்தவர்கள் கட்டாயம் ‘மகேஷிண்ட பிரதிகாரம்’, ‘சண்டே ஹாலிடே’வைத் தவறவிட்டிருக்க வாய்ப்பில்லை. அந்தப் படங்களின் நாயகி அபர்ணா பாலமுரளி யையும். தமிழில் வேற லெவல் வெறித்தன பெர்ஃபாமன்ஸுடன் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுத்திருக்கிற அபர்ணாவிடம் பேசினோம்.

‘`ஐயோ... நான் யாருக்கும் டஃப் கொடுக் கலை. யார் இடத்தையும் பிடிக்கிறது என் நோக்கமும் இல்லை. ‘சூரரைப் போற்று’ மாதிரி படங்கள், பொம்மி மாதிரியான கேரக்டர்ஸ்... போதும் எனக்கு’’ என்று டிஸ்கிளெய்மருடன் பேச ஆரம்பிக்கிறார்.

ஹீரோயின் ஒல்லியாதான் இருக்கணும்னு ஏதாவது ரூல் இருக்கா? - அபர்ணா பாலமுரளி

பொம்மியின் சாயல் அபர்ணாவிடமும் உண்டா?

‘‘பொம்மி ரொம்ப போல்டான கேரக்டர். அம்மா, அப்பா. கணவர் சொல்றதையெல்லாம் தாண்டி, தனக்குனு ஒரு வாழ்க்கை இருக்குனு நம்பறவள். தனக்கான ராஜாங்கத்தை அமைக்க ஆசைப்படுறவள். பொம்மிக் கும் எனக்கும் உள்ள ஓர் ஒற்றுமை, அவங்க ரெண்டு பேர்கிட்டயும் உள்ள சந்தோஷம். பொம்மி மாதிரியே நானும் ரொம்ப ஹேப்பி பெர்சன். ஆனா, அபர்ணாவைவிட பொம்மி கொஞ்சம் போல்டு அண்டு ஸ்ட்ராங்’’

- அபர்ணாவின் பேச்சில் கொஞ்சூண்டு கேரள வாடை.

‘‘தமிழ் நல்லா பேசுவேன். ஆனா, அந்த மதுரை ஸ்லாங்தான் பிரச்னை. நல்லா தெரிஞ்ச வார்த்தைகளுக்குக் கூட மதுரை ஸ்லாங்ல அர்த்தம் தெரியலை. அதுக்கெல்லாம் அர்த்தம் கேட்டுப் புரிஞ்சுகிட்டு அப்புறம் பேசினேன். எனக்கு சூப்பரா டிரெயினிங் கொடுத் தாங்க. என் டயலாக்ஸையெல்லாம் வாய்ஸ் நோட்ஸா அனுப்பினாங்க. அதைக் கேட்டுக் கேட்டு என்னை அறியாமலேயே அந்த ஸ்லாங் கொஞ்சம் கொஞ்சமா எனக்குப் பழகிடுச்சு. படத்துல நானே டப்பிங் பேசியிருக்கேன். நானே பேசினாதான் அந்த கேரக்டர் இன்னும் ரியலா இருக்கும்னு சொல்லி அந்த விஷயத்துல சுதா மேம் ரொம்பவே உறுதியா இருந்தாங்க. எல்லாரும் பாராட்டும்போது பெருமையா இருக்கு...’’ - சிலிர்க்கிறார்.

ஆர்கிடெக்ட் ஆகியிருக்க வேண்டியவர், ஆக்டரானது நடிகை களின் பாஷையில் சொல்வதென்றால் ஒரு விபத்து...

``நாலாவது வரைக்கும் கத்தார், தோஹாவுல படிச்சேன். அப்புறம் எங்க பூர்வீகமான திருச்சூருக்கு வந்தோம். நான் ஒரே பொண்ணு. ஆர்கிடெக்சர் படிச்சேன். உன்னிமாயானு என்னுடைய டீச்சர், இன்னிக்கு கேரளாவுல முக்கியமான நடிகை. அவங்கதான் முதன்முதல்ல என்னை நடிக்கச் சொல்லிக் கேட்டாங்க. அவங்க சொன்னதால ஆடிஷன் போனேன். ‘மகேஷிண்ட பிரதிகாரம்’ படம் என் வாழ்க்கையில மிகப் பெரிய திருப்புமுனையா அமைஞ்சது. அடுத்து ‘சண்டே ஹாலிடே’னு ஒரு படம். என் கரியர்ல முக்கியமான இன்னொரு படம். இப்பவும் அந்தப் படத்தைப் பார்க்கிறவங்க எனக்கு போன் பண்ணி பாராட்டுவாங்க.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இப்படியே பிசியான நடிகையா யிட்டேன். வேற வழியில்லாம ஆர்கிடெக்சர் படிப்புல ரெண்டு வருஷம் பிரேக் எடுத்தேன். அது நான் ரொம்ப விரும்பித் தேர்ந்தெடுத்த படிப்பு. அதனால எப்படியோ மேனேஜ் பண்ணி, படிப்பை முடிச்சிட்டேன்’’ - பெருமையாகச் சொல்லும் பி.ஆர்க் பட்டதாரிக்கு தமிழ் சினிமா புதிதல்ல.

ஹீரோயின் ஒல்லியாதான் இருக்கணும்னு ஏதாவது ரூல் இருக்கா? - அபர்ணா பாலமுரளி

`` `எட்டு தோட்டாக்கள்' தமிழ்ல என் முதல் படம். அப்போ எனக்கு ஒண்ணுமே தெரியாது. ரொம்ப பயந்திருக்கேன். அடுத்து ராஜீவ் மேனன் சார் டைரக்‌ஷன்ல ‘சர்வம் தாள மயம்’ல நடிச்சபோதும் அப்படித்தான் இருந்தேன். ‘சூரரைப் போற்று’ படம் வேற மாதிரியான எக்ஸ்பீரியன்ஸைக் கொடுத்தது. கலைராணி மேடம்கிட்ட முறைப்படி பயிற்சி எடுத்துக்கிட்டு, ஸ்கிரிப்டை படிச்சு ஹோம்வொர்க் பண்ணி பக்காவா ரெடியானேன்.

எனக்கும் சுதா மேமுக்குமான கெமிஸ்ட்ரி சூப்பரா வொர்க் அவுட் ஆச்சு. அவங்க தன்னு டைய கரியர்ல எத்தனையோ போராட்டங்கள், சவால்களைச் சந்திச்சிட்டுதான் இந்த இடத்துக்கு வந்திருக்காங்க. ‘இறுதிச்சுற்று’ படம் பார்த்ததுலேருந்து அவங்களை அவ்வளவு பிடிக்க ஆரம்பிச்சது. முதல் சந்திப்புல இது இவ்வளவு பெரிய படம்னோ, சூர்யா சார்தான் ஹீரோன்னோ தெரியாது. சூர்யா மாதிரி லீடிங் ஹீரோவோடு அவருக்கு சமமான ஸ்கிரீன் ஸ்பேஸ் ஷேர் பண்ணி நடிக்கக் கிடைச்ச வாய்ப்பு ரொம்பப் பெருசு. ரெண்டு பேருக்கும் ஈக்வலான எமோஷன்ஸ், நடிப்புக்கு ஸ்கோப் வெச்சு எழுதப்பட்ட கேரக்டர் அது. படம் முழுக்க சூர்யா சார் என்னை மோட்டிவேட் பண்ணிகிட்டே இருந்தார். போட்டோஷூட் பார்த்துட்டு ஜோ மேம் பாராட்டினாங்க...’’ - பன்னாகப் பூரிக்கிறது முகம்.

பொண்ணு பன்னு மாதிரி இருக்கு என்ற வசனத்துக்குப் பிறகு, அபர்ணாவை பலரும் அப்படியே அழைக்கிறார்களாம்.

‘‘ரொம்ப க்யூட்டான டயலாக் இது. அதை நான் காம்ப்ளிமென்ட்டாதான் எடுத்துக்கிறேன்’’ என்பவருக்கு சைஸ் ஸீரோ உடல்வாகில் உடன் பாடில்லையாம்.

‘‘ஒரு படத்துல அந்த கேரக்டர் ஒல்லியாதான் இருக்கணும்னு நியாயமான காரணங்கள் இருந்து, அதுக்காக வெயிட்டை குறைக்கச் சொன்னா நான் ரெடி. ஆனா, அதை விட்டுட்டு ஹீரோயின்னாலே சைஸ் ஸீரோவாதான் இருக்கணும்னு சொல்றதை நான் ஏத்துக்க மாட் டேன்.

இந்தப் படத்துல என் காஸ்டி யூம்ஸுக்காக நானும் கொஞ்சம் வெயிட் குறைச்சேன். பெண்கள்னா ஒல்லியாதான் இருக்கணும்னு எந்த விதியும் இல்லையே...

ஆரோக்கியமா இருக்கணும், அவ்வளவுதான். இது ஹீரோயின்களுக்கும் பொருந்தும்...'’ - மாஸ் மெசேஜ்!

லாக்டௌனில் கிச்சனைக் கண்டுபிடித்த பிரபலங்களில் அபர்ணாவும் ஒருவர்.

‘`லாக்டௌன்ல நிறைய டைம் கிடைச்சதால அடிக்கடி பேக் பண்ணியிருக்கேன். ஆனா, பேக் பண்றதை எல்லாம் நானே சாப்பிட்டு, கொஞ்சம் வெயிட் ஏறிடுச்சு. அதனால நிறுத்தினேன். நான் பண்றது இந்தக் கால பேக்கிங். ஆனா, படத்துல சுதா மேடம், அந்தக் காலத்து பேக்கரி ஸ்டைல்தான் வரணும்னு சொன்னாங்க. அவங்க பாட்டி அப்படித்தான் அந்தக் கால ஸ்டைல்ல பேக் பண்ணுவாங்களாம். அது எப்படியிருக்கும்னு தெரிஞ்சு கிட்டது வித்தியாசமான அனுபவமா இருந்தது.’’

அப்புறம்?

‘‘சூரரைப் போற்று’ல ஹீரோ கேரக்டருக்கு கொஞ்சமும் சளைக் காத ஹீரோயின் கேரக்டர் மாதிரி அமைஞ்சா போதும். தனக்கு இணையா ஹீரோயினும் ஸ்கிரீன் ஸ்பேஸை ஷேர் பண்றதை அனுமதிச்ச சூர்யா நிஜமாவே கிரேட். அப்படிப்பட்ட படங்களுக்காக, கேரக்டர்களுக்காக, 2021-க்காக ஐ'ம் வெயிட்டிங்...’’

வெல்கம் நடிப்பரக்கி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism