ஒரு மழைநாளில்தான் நடிகை அர்ச்சனாவைச் சந்தித்தேன். மழை போலவே வார்த்தைகள் கொட்டத் தொடங்கின அர்ச்சனாவிடமிருந்து.

``என் குருநாதர் பாலு மகேந்திரா வுக்கும் மழைக்குமான உறவு சுவாரஸ்யமானது. `காரண காரியம் இல்லாம எதுவும் நடக்காது’ன்னு பாலு சார் அடிக்கடி சொல்வார். அதுபோல நீண்டகாலத்துக்குப் பிறகு பிரத்யேகமா நான் கொடுக்கிற இந்தப் பேட்டியின் போதும் மழைபெய்து அவரை நினைவுபடுத்தியிருக்கு” எனச் சொல்லும் அர்ச்சனாவின் உள்ளத்திலும் முகத்திலும் எல்லைகள் கடந்த உற்சாகம் ஆர்ப்பரிக்கிறது.

``பாலு மகேந்திராவுடனான உங்க முதல் சந்திப்பு எப்படி நிகழ்ந்துச்சு?”

``அடையாறு பிலிம் இன்ஸ்டிட்யூட்ல படிக்கும்போது, நடிக்கவும் முயற்சி பண்ணினேன். `இந்தப் பொண்ணு சினிமாவுக்குச் சரிவரமாட்டா. ஒரு ஃப்ரேமுக்குக்கூட இந்தப் பொண்ணை வெச்சுப் படம் பண்ண முடியாது’ன்னு சொல்லி நிராகரிக்கப்பட்டேன். அப்போ ஒரு நடிப்பு பயிற்சிப் பட்டறையில் கலந்துகிட்ட ஹாலிவுட் இயக்குநர் வில்லியம் க்ரீவ்ஸ், என் நடிப்பைப் பார்த்துப் பாராட்டியதுடன், `எனக்குத் தெரிஞ்ச இந்திய சினிமா இயக்குநர் ஒருத்தரிடம் உங்களை அறிமுகப்படுத்திவெக்கிறேன்’னு சொன்னார். அவர்தான் பாலு மகேந்திரா! என்னை போட்டோஷூட் பண்ணிட்டு ஒரு வாரம் கழிச்சு, `என் படத்துல நீ நடிக்கிறே’ன்னார்.

`என்ன ரோல் சார்?’னு கேட்டேன். `நீதான் ஹீரோயின்’னார். `நான்கூட நடிக்கலாமா? பலரும் என்னை ரிஜெக்ட் பண்ணியிருக்காங்க’ன்னு தயங்கிய படியே சொன்னேன். `என் சினிமா ரொம்ப எளிமையானது. அதில் நடிக்க நீ சரியா இருப்பே’ன்னார். சொன்ன மாதிரியே `நீங்கள் கேட்டவை’ படத்துல என்னை ஹீரோயினாக்கினார்.”

`` `வீடு’ படத்தில் உங்க நிஜப்பெயர் சுதாவாகவே நடிச்சிருப்பீங்க. அந்தப் படத்தின் தொடக்கப்புள்ளி எப்படி உருவாச்சு?”

`` `நீங்கள் கேட்டவை’ பட ஷூட்டிங்ல பத்திரிகையாளர் ஒருவர் பாலு சாரைச் சந்திக்க வந்தார். அவர், `இந்தப் பொண்ணை ரெண்டு இயக்குநர்கள் ஏற்கெனவே ரிஜெக்ட் பண்ணிட்டாங்க. நீங்க எப்படித் தேர்வு செய்தீங்க?’ன்னு பாலுகிட்ட கேட்டிருக்கார். பத்திரிகையாளர்கள் உட்பட சிலரிடம் தன் கருத்தைக் கைப்பட ஒரு கடிதத்தில் எழுதிக்கொடுப்பது பாலுவின் வழக்கம். அப்போ பேப்பரில் ஏதோ எழுதி அதைப் பத்திரிகையாளர்கிட்ட காட்டிட்டு, தன் சட்டை பாக்கெட்ல வெச்சுக்கிட்டார். அதுகுறித்து நான் கேட்க, `பிற்காலத்துல சொல்றேன்’னு சொல்லிட்டார். சில வருஷம் கழிச்சு, `நல்ல ஆர்ட் பிலிம்ல நடிக்க ஆசைப்படறேன்’னு பாலுகிட்ட கேட்டேன். `அப்படியான நல்ல படம் எடுக்கணும்னுதான் ஒரு வாரமா நானும் நினைச்சுகிட்டிருந்தேன்’னு அவர் சொன்னார். `வீடு’ படத்துக்கான தொடக்கப்புள்ளி அதுதான்!

சொந்த ஊர்ல வீடு கட்ட நிறைய சிரமங்களை எதிர்கொண்ட அவரின் அம்மாவை மையமா வெச்சுதான், பாலு சார் அந்தப் படத்தை உருவாக்கினார். அந்தப் படத்துக்காக, சென்னை சாலிகிராமத்துல தன்னோட நிலத்துல நிஜமாவே படிப்படியா வீடு கட்டிப் படமாக்கினார். ஒருநாள் யதேச்சையா கனமழை பெய்ய, `மழையால் ஷூட்டிங் நடக்காதே’ன்னு குழந்தைத்தனமா சந்தோஷப்பட்டு கார்ல உட்கார்ந்துட்டேன். பத்து நிமிஷம் தனியா உட்கார்ந்து யோசிச்ச பாலு, `கேமராவை வைங்க! ஷூட்டிங் ஸ்டார்ட்’ன்னு சொன்னார். அந்த நெருக்கடியான தருணத்தை, படத்துல பூமி பூஜையின்போது மழை வருவதுபோலப் படமாக்கிப் பிரமாதப்படுத்தினார். அந்தப் படத்துல மழை வர்ற காட்சிகள் எல்லாமே நிஜமாவே நடந்ததுதான். இந்திய சினிமாவில் முக்கியமான படங்கள்ல ஒன்றான `வீடு’ படத்துக்கு, பாலு தன் ஆன்மாவையே பயன்படுத்தினார்.’’

``நிராகரிப்புகளைக் கடந்து `வீடு’ படத்துக்காக முதல் தேசிய விருது வாங்கிய தருணம் பற்றி...”

``தேசிய விருது அறிவிக்கப்பட்டதும் முதல் நபரா என் வீட்டுக்கு வந்து பாராட்டிய பாலு சார்கிட்ட ஆசீர்வாதம் வாங்கினேன். பத்திரிகையாளர்கள் உட்பட எல்லோரும் போன பிறகு, நாலு வருஷமா அவர் பத்திரப்படுத்தி வெச்சிருந்த அந்த லெட்டரை என்னிடம் காட்டினார். `திஸ் ஆர்ட்டிஸ்ட் வில் பிக்கம் ஆன் இம்பார்ட்டன்ட் ஆக்டர் இன் இந்தியன் சினிமா. ஸீ வில் கெட் எ நேஷனல் அவார்டு’ன்னு எழுதியிருந்தார் அவர்”

``தெலுங்குப் படங்களான, `நிரக்ஷனா’ மற்றும் `தாசி’யில மிகச் சவாலான ரோல்களில் நடிச்சது பற்றி...”

`` `நிரக்ஷனா’வில் துளசி கேரக்டர்ல நடிக்க தைரியமும், ஒளிப்பதிவாளர் மேல முழு நம்பிக்கையும் இருக்கணும். அது பாலுவின் மீது எனக்கு முழுமையா இருந்துச்சு. பிளவுஸ் இல்லாம, படம் முழுக்க வெறும் மெல்லிய புடவையை மட்டுமே உடுத்தியிருப்பேன். துளிகூட கவர்ச்சியோ, ஆபாசமோ இல்லாமப் படமாக்கினார் பாலு. அந்தப் படத்தை இன்றளவும் ஆந்திராவில் கொண்டாடுறாங்க.

தெலங்கானா பகுதியில ஜமீன் குடும்பப் பெண்களைத் திருமணம் செய்துகொடுக்கும்போது உதவிக்கு ஒரு பெண்ணையும் அனுப்பிவைக்கிற பழக்கம் இருந்திருக்கு. அந்தப் பெண் வீட்டு வேலைகள் செய்வதுடன், அந்த வீட்டு ஆண்க ளின் பாலியல் தேவைக்கும் பயன்படுத்தப்படுவாள். தாசியாக இருந்த பெண்களின் உணர்வுகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைச்சுதுன்னு நினைச்சு, தைரியமா கமலி ரோல்ல நடிச்சேன். அந்தப் படத்துக்காக, 1989-ம் ஆண்டு மீண்டும் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றேன்.”

``புகழுடன் இருந்த காலத்திலேயே தமிழ் சினிமாவிலிருந்து பெரிய பிரேக் எடுத்தது ஏன்?”

``பாலு சாரும் நானும் இணைந்து பல படங்கள்ல தொடர்ந்து பணியாற்றியதால, எங்க மீது தேவையில்லாத விமர்சனங்கள் பரவுச்சு. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கணும்னு, `சந்தியா ராகம்’ படத்தின் கடைசி நாள் ஷூட்டிங்ல, `நான் கொஞ்ச நாள் மத்த இயக்குநர்கள் படங்கள்ல நடிக்கிறேன்; நீங்களும் வேறு ஆர்ட்டிஸ்டுகளை வெச்சுப் படம் எடுங்க’ன்னு அவரிடம் சொல்லி ஆசீர்வாதம் வாங்கினேன். என் உணர்வுகளைப் புரிஞ்சுகிட்டு, எந்தக் கேள்வியும் கேட்காம என்னை வழியனுப்பி வெச்சார். பொருளாதாரரீதியா என்னைக் கொஞ்சம் பலப்படுத்திக்கவே இந்தி, ஒடியா, தெலுங்கு, கன்னடம், மலையாளப் படங்கள்ல நடிச்சேன். அந்தக் காலங்கள்ல ஆர்ட் சாயல் பட வாய்ப்புகள் வராததால, தமிழ் சினிமாவுல நடிக்க 14 வருட இடைவெளி ஏற்பட்டுச்சு.”

``பாலு மகேந்திராவுடனான மறக்க முடியாத சில நினைவுகள் பற்றி...”

`` `மூன்றாம் பிறை’ படத்தின் க்ளைமாக்ஸ் சீன் எடுக்கிறப்போ, `ஸ்டார்ட் கேமரா’ன்னு அவர் சொல்ல, யதேச்சையா மழை வந்துச்சாம். அந்தக் காட்சிக்கு மழைதான் உயிர் கொடுத்ததா அவர் நினைச்சார். அந்தப் படத்தின் இந்தி ரீமேக் `சத்மா’வை இயக்கும்போது, அந்த க்ளைமாக்ஸ் சீன்ல செயற்கை மழைக்கு ஏற்பாடு செஞ்சிருக்காங்க. ஆனா, பாலுவின் உள்மனசு இயற்கையாகவே மழை வரணும்னு கேட்டிருக்கு. அதற்கான எந்த அறிகுறியும் இல்லாம நல்லா வெயில் அடிச்சிருக்கு. வருத்தத்துடன் வானத்தைப் பார்த்த அவருக்குக் கண்ணீர் வந்திடுச்சாம். சொன்னா ஆச்சர்யப்படுவீங்க! அரை மனதுடன், `ஸ்டார்ட் கேமரா’ன்னு அவர் சொன்னதுமே, மழை வந்திடுச்சாம். அதை அவர் என்னிடம் சொன்னப்போ, அழுதுட்டேன்.

பாலு சார் மறைந்து பத்து நாள்களுக்குப் பிறகு அவர் மகன் ஷங்கி மகேந்திரா என்னைக் கூப்பிட்டிருந்தார். `அப்பா எடுத்த படங்கள்ல உங்க புகைப்படங்கள் நிறைய இருக்கு. இதை நீங்களே வெச்சுக்கோங்க அக்கா’ன்னு அவர் கொடுக்க, வாங்கிக்கிட்டேன். பாலு என்னைப் பல புகைப்படங்கள் எடுத்திருக்கார். அவற்றில் நான் பார்க்காத ஒரு போட்டோவைப் பார்த்து நெகிழ்ந்தேன். அந்தப் போட்டோவை ஆவணப்படுத்தியிருக்கேன். எனக்கு குருவாக, தாயாக, நண்பராக, நலன் விரும்பியாக இருந்தவர் பாலு.”

`` `அழியாத கோலங்கள் 2’ படத்தில் என்ன ஸ்பெஷல் இருக்கு?”

``அந்தப் படமே ரொம்ப ஸ்பெஷல்தான்! பாலு சார் காலமாகிறதுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு, `சின்ன பட்ஜெட்ல நல்ல படங்கள் எடுங்கப்பா’ன்னார். அதன்படி, ஒருமுறை என் இளமைக்கால நண்பர் எம்.ஆர்.பாரதியுடன் பேசியதுதான் இந்தப் படத்துக்கான விதை. எங்க குருநாதருக்குச் சமர்ப்பணம் செய்ற மாதிரி, அவரின் முதல் படப் பெயரையே இந்தப் படத்துக்கும் வெச்சோம். கல்லூரிக்கால நண்பர்கள் பலரும் திடீர்னு சந்திச்சுக்கிற ஒருநாள் நிகழ்வுதான், இந்தப் படத்தின் மூலக்கதை. நான், ரேவதி, பிரகாஷ் ராஜ், நாசர் ஆகியோர் முக்கிய ரோல்கள்ல நடிச்சிருக்கோம். படத்தில் ரேவதிதான் தனித்துவமாத் தெரிவாங்க.”

``ரீ-என்ட்ரியில் நாலு தமிழ்ப் படங்கள்ல மட்டுமே நடிச்சிருக்கீங்களே...”

``அம்மா ரோல் பிடிச்சுப்போனதால், `பரட்டை என்கிற அழகு சுந்தரம்’ படத்துல நடிச்சு ரீ-என்ட்ரி கொடுத்தேன். `ஒன்பது ரூபாய் நோட்டு’ படத்துல சத்யராஜுடன் நடிச்சது மறக்க முடியாத அனுபவம். அவர்கூட நடிச்சது மிக நிறைவா இருந்துச்சு. சினிமாப் பயணத்துல நான் எதையும் திட்டமிட்டுச் செய்றதில்லை. தமிழ் சினிமாவில் எனக்குன்னு தனி அடையாளத்தை மக்கள் கொடுத்திருக்காங்க. அதில் எனக்குப் பொருந்துற படங்கள்ல மட்டுமே இனியும் நடிப்பேன்.”