சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“ரெண்டுபேரும் நடிப்பு கத்துக்கொடுத்தாங்க!”

கல்யாணி பிரியதர்ஷன்
பிரீமியம் ஸ்டோரி
News
கல்யாணி பிரியதர்ஷன்

``அப்புறம் ஏன் இந்த ஆசை?’’

அப்பா பிரியதர்ஷன் இயக்குநர்... அம்மா லிசி நடிகை... முதல் படத்திலேயே ஜூனியர் நாகர்ஜுனாவுடன் ஜோடி. தெலுங்கில் ‘ஹலோ’ சொன்ன, கல்யாணி பிரியதர்ஷன், தற்போது தமிழுக்கு ‘ஹீரோ’ சிவகார்த்திகேயனுக்கு ஹீரோயின் ஆகிறார். Hi madam என டெக்ஸ்ட் செய்தால், Call me Kalyani என ஜாலியாகப் பேட்டிக்குத் தயாராகிறார்.

``குடும்பமே சினிமால இருக்கிறதால, நீங்களும் நடிக்க வந்துட்டீங்களா?”

``அம்மா, அப்பா ரெண்டு பேருக்கும் சினிமா மேல் தீராத காதல். இந்தக் காதல் எனக்குள்ளேயும் துளிர்விட ஆரம்பிச்சிருச்சு. இப்பவும் அவங்க ரெண்டு பேரும் அவ்ளோ பிஸி. ரெண்டு பேரோட அன்பும், காதலும் எனக்கும், தம்பிக்கும் கிடைச்சிருக்கு.

Kalyani Priyadarshan
Kalyani Priyadarshan

அட்வைஸ் கொடுக்கவே மாட்டாங்க. இதை மட்டும் பண்ணுன்னு எப்போவும் கட்டாயம் பண்ணுனதில்லை. சினிமாதான் கரியர்னு முடிவு பண்ணிட்டுதான் வந்தேன். ஆனா, ஹீரோயின் ஆகணும்னெல்லாம் நினைக்கலை.”

``அப்புறம் ஏன் இந்த ஆசை?’’

‘` `நடிப்புங்கிறது தனியா கிளாஸுக்குப் போய்க் கத்துக்குற விஷயமில்லை. ஒரு நல்ல இயக்குநர் கிடைச்சிட்டாலே நடிப்பு கத்துக்கலாம். உனக்கான டீச்சர் அவங்கதான்’னு அப்பா எங்கிட்ட சொல்வார். ரெண்டு வருஷமா இதை மட்டும்தான் ஃபாலோ பண்ணிட்டு வரேன். என் முதல் படம் பார்த்துட்டு அம்மா அழுதுட்டாங்க. அப்பா எந்த உணர்வுக்கும் பெருசா இடம் தரமாட்டார். அவர் அமைதியா இருந்துட்டா எல்லாம் சரியா இருக்கும்னு அர்த்தம்.”

`` `ஹீரோ’ வாய்ப்பு எப்படி?”

“தெலுங்கு, மலையாள சினிமாவுல என்ட்ரி ஆயாச்சு. அடுத்ததா, தமிழ்ல நல்ல கேரக்டர்ல நடிக்கணும்னு காத்துட்டிருந்தேன். அப்போதான் மித்ரன் சாரை மீட் பண்ணினேன்.

“ரெண்டுபேரும் நடிப்பு கத்துக்கொடுத்தாங்க!”
“ரெண்டுபேரும் நடிப்பு கத்துக்கொடுத்தாங்க!”

கதையின் முதல் பாதி சொல்லிட்டிருக்கும் போதே, ‘படத்துல நடிக்குறேன்’னு சொல்லிட்டேன். அந்த அளவுக்கு முதல் பாதி ரொம்ப வெயிட்டான சப்ஜெக்ட்டா இருந்தது. மித்ரன் சார் கதை சொல்ற ஸ்டைல் ரொம்ப ஸ்பெஷலா இருக்கும். கதை சொல்றதையும் தாண்டி, காட்சிகளை நடித்துக்காட்டுவார். நான் நினைச்ச மாதிரியே ‘ஹீரோ’ படம் அமைஞ்சிருக்கு.இப்போதைய சூழலுக்கு ஒரு நல்ல மெசேஜோட இந்தப் படம் வந்திருக்கு. இந்தியா முழுமைக்குமான கதை இது.”

``சிவகார்த்திகேயன், அர்ஜுன்னு தேர்ந்த நடிகர்கள். ஷூட்டிங் ஸ்பாட் எப்படியிருக்கும்?’’

“சிவகார்த்திகேயன் சாரோட தீவிர ரசிகை நான். அவரை எப்போதும் எண்டர்டெயினராதான் பார்த்திருக்கேன். ஆனா, இந்தப் படத்தோட ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரை இயக்குநராகவும் பார்த்தேன். மித்ரன் சாருடன் சிவகார்த்திகேயன் சாரும் எனக்கு நடிப்பு கத்துக்கொடுத்தார்.

“ரெண்டுபேரும் நடிப்பு கத்துக்கொடுத்தாங்க!”

படத்துல அர்ஜுன் சாருக்கும் எனக்கும் காம்பினேஷன் காட்சிகள் இல்லை. இருந்தும் அவரோட போர்ஷனை என்கிட்ட போட்டுக் காட்டுவாங்க. இந்த டீம் செம்ம ஃபன். டீசர் மிக்ஸிங் அப்போ யுவன் சாரோட ஸ்டூடியோவுல இருந்தேன். ரொம்ப உற்சாகமா இருந்துச்சு!”

``அப்பாவோட இயக்கத்துல அடுத்த படம் நடிக்கறீங்க போல..?”

``ஆமா, இது என் குடும்பப்படம்னு சொல்லலாம். தம்பி இந்தப் படத்துல வொர்க் பண்ணியிருக்கான். தவிர, கீர்த்தி சுரேஷும் அவங்க அப்பாவும் நடிச்சிருக்காங்க. கீர்த்தியின் தங்கை உதவி இயக்குநரா வேலை பார்த்திருக்காங்க. மோகன்லால் சார் மற்றும் அவரின் பையன் பிரணவும் நடிச்சிருக்காங்க.

“ரெண்டுபேரும் நடிப்பு கத்துக்கொடுத்தாங்க!”

அர்ஜுன் சாரும் படத்துல நடிச்சிருக்கார். படத்தோட வேலைகள் முடிஞ்சிருச்சு. போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் போயிட்டிருக்கு. மலையாளத்துல இந்தப் பட ரிலீஸுக்காக நாங்கல்லாம் வெயிட்டிங்.”

`` `மாநாடு’ பத்தி உங்களுக்காவது ஏதாவது தெரியுமா?’’

“ ‘ஹீரோ’ படத்துக்குப் பிறகு தமிழ்ல அதிகாரபூர்வமா கமிட்டான படம் ‘மாநாடு.’ வெங்கட்பிரபு சாரோட படங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர் ஜாலியா ஒன்லைன் சொன்னபோதே ஓகே சொல்லிட்டேன். முழுக்கதையும் கேட்டதுக்கப்புறம், ‘யப்பா... என்ன மாதிரியான படம் இது’ன்னு ஆச்சர்யமா இருந்தது. சில காரணங்களால ஷூட்டிங் தள்ளிப்போயிருச்சு. ஜனவரியில் ஷூட்டிங் இருக்குன்னு சொல்லியிருக்காங்க. இப்பவே நான் தயாராயிட்டேன்!”

Kalyani Priyadarshan
Kalyani Priyadarshan

கல்யாணி சிரிக்கிறார். மத்தாப்புகள் சிதறுகின்றன.