லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
Published:Updated:

ஜோதிகா மேடம் பாராட்டை மறக்கவே முடியாது! - நிவேதிதா

நிவேதிதா
பிரீமியம் ஸ்டோரி
News
நிவேதிதா

நினைத்தாலே சிரிப்பு

``பொதுவா, ஒரு நல்ல படம் வெளிவரும்போது ரசிகர்கள் கொண்டாடுகிற மாதிரியே, சினிமா இண்டஸ்ட்ரியும் கொண்டாடும். அது `சில்லுக்கருப்பட்டி'க்கு நடந்ததில் ரொம்பவே சந்தோஷம்'' என தெத்துப்பல் தெரிய சிரிக்கிறார் நிவேதிதா... இவர்தான் `காக்கா கடி'யின் மது!

ஜோதிகா மேடம் பாராட்டை மறக்கவே முடியாது! - நிவேதிதா

கரியர் தொடங்கிய கதை?

டான்ஸ்தான் என் கரியர்ங்கிறதை வீட்ல சொன்னப்ப அதை ஏத்துக்கிட்டு அதுக்கான சுதந்திரம் கொடுத்தாங்க. தியேட்டர் ஆக்டிங் மூலமா சினிமாத்துறைக்குள்ள வரணும்னு நினைச்சேன். அதுக்குள்ளே, `மகளிர் மட்டும்' படத்தின் வாய்ப்பு வந்துடுச்சு. அதில் கிடைச்ச வரவேற்பு மூலமா, `சில்லுக்கருப்பட்டி' வாய்ப்பு!

‘காக்கா கடி’ல ஒரு சீன்ல நிறைய புரபோசல் வந்ததா சொல்லுவீங்க. ரியல் லைஃப்ல மறக்க முடியாத புரபோசல் எது?

ஸ்கூல்ல டாம்பாய் மாதிரிதான் இருந்தேன். யாரையும் மதிக்க மாட்டேன். பசங்க கூடவேதான் சுத்துவேன். அப்படியிருந்தும் ஒரு பையன் எனக்கு ஐபோனை கிஃப்ட்டா வெச்சு, ரத்தத்துல லெட்டர் எழுதிக் கொடுத்தான். அப்போ அந்த லெட்டரைப் பார்த்து பயந்துட்டேன். இப்போ நினைச்சா சிரிப்பு வருது!

நிவேதிதா
நிவேதிதா

அடுத்து..?

`மகளிர் மட்டும்’, ‘சில்லுக்கருப்பட்டி’, தெலுங்கில் ‘ஹலோ’ன்னு இதுவரை பண்ணிய மூணு படங் களிலுமே வெவ்வேறுவிதமான அனுபவம். இப்போ ஜோதிகா மேம்கூட அடுத்த படம் கமிட்டாகியிருக்கேன்.

‘சில்லுக்கருப்பட்டி’ பார்த்துட்டு ‘ரொம்ப நல்லா பண்ணிருக்கே!’ன்னு ஜோ மேம் பாராட்டினாங்க. செட்ல உள்ளவங்க கிட்ட அவங்க மகளைப் பத்தி பெருமையா சொல்ற மாதிரியே என்னைப் பத்தியும் அவ்ளோ சந்தோஷப்பட்டு சொன்னாங்க. அடுத்த படத்திலும் இப்படி ஒரு பாராட்டு வாங்கணும்!