Published:Updated:

சினிமா விகடன்: “நடிக்கப் போற சினிமாக் கதை கனவில் வந்தது!”

நிவேதா பெத்துராஜ்
பிரீமியம் ஸ்டோரி
நிவேதா பெத்துராஜ்

காஸ்டியூம் டிசைனர்: சஹானா பிரபாகர், மேக்கப் ஆர்ட்டிஸ்ட்: தனா ரம்யா, ஹேர் ஸ்டைலிஸ்ட்: ராஜேஸ்வரி

சினிமா விகடன்: “நடிக்கப் போற சினிமாக் கதை கனவில் வந்தது!”

காஸ்டியூம் டிசைனர்: சஹானா பிரபாகர், மேக்கப் ஆர்ட்டிஸ்ட்: தனா ரம்யா, ஹேர் ஸ்டைலிஸ்ட்: ராஜேஸ்வரி

Published:Updated:
நிவேதா பெத்துராஜ்
பிரீமியம் ஸ்டோரி
நிவேதா பெத்துராஜ்

`அடியே அழகே’ எனத் தமிழ் சினிமாவில் அறிமுகமான நிவேதா பெத்துராஜ், தற்போது ‘ராமுலோ ராமுலு’ எனத் தெலுங்குப் படத்தில் அல்லு அர்ஜுனுடன் நடனமாடி யிருக்கிறார். தமிழ் - தெலுங்கு சினிமாக்கள், பர்ஷனல் பக்கங்கள் எனப் பல கேள்விகளோடு நிவேதாவைச் சந்தித்தேன்.

சினிமா விகடன்: “நடிக்கப் போற சினிமாக் கதை கனவில் வந்தது!”

``டோலிவுட் உங்களுக்கு நல்லா செட்டாகிடுச்சா..?’’

``எனக்கு தமிழ் சினிமாவும் தெலுங்கு சினிமாவும் ரொம்ப வித்தியாசமா தெரியலை. ஏன்னா, பெரும்பாலும் தமிழ் சினிமா டெக்னீஷியன்ஸ்தான் அங்கேயும் வேலை பார்க்கிறாங்க. தெலுங்கு நடிகர்கள் பல பேருக்கும் தமிழ் நல்லாத் தெரியும். அதனால், நான் அங்கே போயும் தமிழில்தான் பேசிட்டிருக்கேன். எந்த மொழி சினிமாவாக இருந்தாலும், ஒரு நடிகை ஒருசில படங்கள் நடிச்சதுக்கு அப்புறம், ‘இவங்க இந்தமாதிரியான கதைகளுக்கு மட்டும்தான் பொருத்தமா இருப்பாங்க’ன்னு முடிவு பண்ணிக்கிறாங்க. அதை நம்மால மாத்தவே முடியாது. ஹாலிவுட்டில் பார்த்தீங்கன்னா, ஒரு நடிகரும் நடிகையும் எல்லாவிதமான கேரக்டர்களும் பண்ணுவாங்க. குறிப்பா, நடிகை மார்கட் ராபி (Margot Robbie) ‘தி வுல்ப் ஆப் வால் ஸ்ட்ரீட்’ (The wolf of wall street) படத்தில் கிளாமராகவும் நடிச்சிருப்பாங்க; `ஐ, டோன்யா’ (i, Tonya) படத்தில் கதைக்கு முக்கியத்துவமளிக்கும் கேரக்டரிலும் நடிச்சிருப்பாங்க. இந்த மாதிரி இங்கேயும் இருந்தால் ரொம்ப நல்லா இருக்கும்னு தோணுது.”

சினிமா விகடன்: “நடிக்கப் போற சினிமாக் கதை கனவில் வந்தது!”

``மாடலிங், பிட்னஸ் பயிற்சியாளர், தற்காப்புக் கலைஞர், ஓவியர், நடிகைன்னு உங்களுக்குப் பல முகங்கள் இருக்கு; இதுல உங்களுக்கு ரொம்பப் பிடிச்சது, எது, ஏன்?’’

``நடிப்புதான் என்னோட ஆல்டைம் பேவரைட். சமீபத்தில் ஹீலிங் எனக்குப் பிடிச்ச ஒண்ணா மாறியிருக்கு. இப்போதைக்கு என்னை நானே ஹீல் பண்றதுக்குத்தான் கத்து வெச்சிருக்கேன்.”

சினிமா விகடன்: “நடிக்கப் போற சினிமாக் கதை கனவில் வந்தது!”

``நீங்க நடிச்ச படங்களிலேயே பிடிச்ச ஒரு தமிழ்ப்படம், தெலுங்குப் படம் சொல்லுங்க; ஏன் பிடிக்கும்?’’

``தமிழில் `திமிரு புடிச்சவன்’ எனக்கு ரொம்பப் பிடிச்ச படம். ஏன்னா, அதுவரைக்கும் நான் நடிச்ச படங்கள் எல்லாமே கதை கேட்கும் போதும் ஸ்பாட்டில் நடிக்கும்போதும், இந்தப் படம் எப்படி வரும்கிற ஒரு ஐடியா எனக்குக் கிடைச்சிடும். ஆனால், `திமிரு புடிச்சவன்’ படத்தில் நடிச்சப்போ நான் ஒரு முறைகூட மானிட்டர் பார்க்கவேயில்லை. அந்தப் படம் பண்ணும்போது, எனக்கு அவ்வளவு சுதந்திரம் கொடுத் தாங்க. நான் என்னோட சொந்த வசனத்தைப் பேசி யெல்லாம் நடிச்சேன். அதுக்கு இயக்குநரும் விஜய் ஆண்டனி சாரும் ரொம்ப சப்போர்ட் பண்ணினாங்க. அதுமட்டு மல்லாமல், அந்தப் படத்தில் நான் நடிச்ச எல்லா சீனும் படத்திலும் வந்துச்சு.

தெலுங்கில் என்னோட முதல் படம் `மென்டல் மதிலோ’தான் எனக்கு ரொம்பப் பிடிச்சது. ஏன்னா, அந்தப் படத்தோட ஷூட்டிங்கைப் பார்க்கிற துக்குத்தான் எங்க அப்பா, அம்மா முதன்முதலில் ஸ்பாட்டுக்கு வந்தாங்க. அவங்க துபாயில் இருக்காங்க. இந்தியாவுக்கு வரும்போது, என் வேலை சம்பந்தமான விஷயங்களுக்கு அவங்க வந்ததேயில்லை. அவங்க நேரில் வந்து என் நடிப்பைப் பார்த்த முதல் படம் இதுதான்.’’

சினிமா விகடன்: “நடிக்கப் போற சினிமாக் கதை கனவில் வந்தது!”

``உங்களுக்கு ஒரு கனவு வந்தால் அது நிஜத்திலும் நடக்குமாமே; உண்மையா..?’’

‘`என்னோட கனவு எல்லாம் அப்படியே நிஜத்துல நடக்காது. ஆனால், அதோட சாயலில் சில விஷயங்கள் நடக்கும். எனக்கு ஒரு முறை, ஏலியன் பூமிக்கு வந்த மாதிரியும் அவங்களுக்கு நான் தண்ணீர் கொடுத்த மாதிரியும் கனவு வந்துச்சு. அந்தக் கனவில் வந்த இடம் ஆரஞ்சு கலர்ல இருந்துச்சு. இந்தக் கனவு வந்த ஆறாவது நாள் துபாயில் மணல் புயல் வந்துச்சு. அந்த போட்டோஸைப் பார்த்தீங் கன்னா, புல்லா ஆரஞ்சு கலர்ல இருக்கும். என் கனவுல வந்த அதே இடம் மாதிரி இருந்துச்சு. அதுமட்டுமல்லாமல், அந்தக் கனவு வந்த ஆறாவது மாசத்துல `மேட் மேக்ஸ்: புயூரி ரோடு’ (Mad Max: Fury Road) படம் ரிலீஸாச்சு. அந்தப் படக் காட்சிகளும் என் கனவில் வந்த மாதிரியே இருந்துச்சு. ஆறு நாளில் ஒண்ணு, ஆறு மாசத்தில் ஒண்ணு நடந்த மாதிரி, ஆறு வருஷம் கழிச்சு இப்போ சமீபத்திலும் இதே மாதிரி ஒரு சம்பவம் நடந்துச்சு. சமீபத்தில் ஒரு தமிழ்ப்படத்தில் நடிக்கிறதுக்காகக் கதை கேட்டேன். அந்தக் கதையும் இந்தக் கனவில் வந்தது மாதிரியே இருந்துச்சு. இந்தக் கனவு வந்தபோதே அதை நான் ஓவியமா வரைந்து வெச்சிருந்தேன். அதை அந்த டைரக்டர்கிட்ட காட்டினதும், ஷாக் ஆகிட்டார்.இப்படித் தான் என் கனவெல்லாம் நிஜத்திலும் நடக்குது.’’

சினிமா விகடன்: “நடிக்கப் போற சினிமாக் கதை கனவில் வந்தது!”

``நிவேதாவுக்கு அட்வெஞ்சர் ரொம்பப் பிடிக்கும்னு சொல்றாங்களே..?’’

``ஆமா. ஆனால், இப்போ அட்வெஞ்சர் ட்ரிப் போறது கொஞ்சம் குறைஞ்சிடுச்சு. முன்னாடியெல்லாம், எனக்குத் தோணும்போது பேக்கை எடுத்துட்டுக் கிளம்பிடுவேன். தனியாகத்தான் ட்ரிப் போவேன். 10 நாள், 15 நாள்னு சின்ன, சின்ன ட்ரிப்பா கிளம்பி மலைப்பிரதேசங்களுக்குப் போவேன். அதில் புது மனிதர்களை அதிகம் சந்திப்பேன்; புதுப் புது விஷயங்களைக் கத்துப்பேன். அதெல்லாம், எனக்கு நிறைய விஷயங்களைக் கத்துக்கொடுத்துச்சு. கொரோனா எப்போ முடியும், சீக்கிரம் ஒரு ட்ரிப் போகலாம்னு காத்துட்டு இருக்கேன்.”

``அல்லு அர்ஜுன் படத்துல மதுரப் பொண்ணு நடிக்கிறாங்கன்னு கேள்விப்பட்டப்போ ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு; ஆனால், அந்தப் படத்துல உங்களுக்கான ஸ்பேஸ் ரொம்பக் குறைவா இருந்துச்சுன்னு வருத்தப்பட்டீங்களா?’’

‘` ‘அலா வைகுந்தபுரம்லோ’ படத்துக்காக நிறைய சீன்ஸ் ஷூட் பண்ணினாங்க. ஆனால் அதில் 50 சதவிகிதம்தான் படத்தில் வந்துச்சு. இது எனக்கு மட்டுமல்ல, அந்தப் படத்தில் நடிச்ச சீனியர் நடிகர்களான ஜெயராம், தபுன்னு பலருக்கும் நடந்துச்சு. ஆனால், இது ஏன் நடந்துச்சுன்னு எங்க எல்லாருக்கும் தெரியும். பெரிய ஹீரோவோட படம்; பல சீனியர் நடிகர், நடிகைகள் நடிச்சிருக்கிற படம்; நிச்சயமா சில சீன்ஸ் கட்ல போகும்னு தெரியும். ஆனா அந்தப் படம் எனக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்திருக்கு.’’

சினிமா விகடன்: “நடிக்கப் போற சினிமாக் கதை கனவில் வந்தது!”
சினிமா விகடன்: “நடிக்கப் போற சினிமாக் கதை கனவில் வந்தது!”

``தமிழ் பேசும் ஹீரோயின்களுக்கு தமிழில் பெரிய வாய்ப்புகள் கிடைக்காதுன்னு பல பேர் சொல்லியிருக்காங்க. உங்க கரியரிலும் அப்படித்தான் நடக்குதா..?’’

``நான் அந்த மாதிரி யோசிச்சது இல்லை. அதுக்கு காரணம், நான் தெலுங்கு சினிமாவில் பிஸியாக இருக்கிறதுதான். ஒரு வேளை, எனக்குத் தெலுங்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்திருந்தால், அப்படி யோசிச்சிருக்கலாம். சினிமாவைப் பொறுத்தவரைக்கும் திறமையை மீறி, அழகை மீறி, அதிர்ஷ்டமும் ரொம்ப முக்கியம். அது எப்போ வரும்னு சொல்ல முடியாது. திடீர்னு ஒரு படம் நம்மை உச்சத்துக்கும் கொண்டு போகலாம். தமிழ் சினிமாவில் எனக்கான நேரம் இன்னும் வரலைன்னு சில சமயங்களில் எனக்குத் தோணியிருக்கு.’’

சினிமா விகடன்: “நடிக்கப் போற சினிமாக் கதை கனவில் வந்தது!”
சினிமா விகடன்: “நடிக்கப் போற சினிமாக் கதை கனவில் வந்தது!”

``எனக்கு இந்தி தெரியாது. அதனால பாலிவுட் படம் கம்பர்ட்டா இருக்காது’ன்னு ரெண்டு பாலிவுட் பட வாய்ப்பை மறுத்ததா போன வருஷம் கொடுத்த விகடன் பேட்டியில சொல்லியிருக்கீங்க. இப்போ இந்தி கத்துக்கிட்டீங்களா?’’

``எனக்கு இப்போதும் இந்தி தெரியாது; இந்திப் படங்களில் நடிக்கிறதுக்கு ரொம்பவே பயமாகவும் இருக்கு. ஏன்னா, ஒரு மொழியை முழுமையாகக் கத்துக்காமல், அந்த மொழியில் நடிக்க முடியாதுன்னு நினைக்கிறேன். தெலுங்கு கத்துக்கிட்டுத்தான் இப்போ தெலுங்குப் படங்களில் நடிச்சிட்டிருக்கேன். இனிமேல் இந்தி கத்துக்கிட்டு, பாலிவுட் படங்களில் நடிக்கலாம். அது நடக்குதான்னு பார்க்கலாம்.’’

சினிமா விகடன்: “நடிக்கப் போற சினிமாக் கதை கனவில் வந்தது!”

``உங்களோடு நடிச்ச ஹீரோக்களைப் பற்றி ’நச்’சு ஒரு வரியில் சொல்லுங்க..?’’

‘அட்டகத்தி’ தினேஷ்: செம துறுதுறு கேரக்டர்

உதயநிதி ஸ்டாலின்: ரொம்ப ஒழுக்கமானவர்

`ஜெயம்’ ரவி: ஹியுமர் சென்ஸ்

விஜய் ஆண்டனி: ஆல் ரவுண்டர்

பிரபு தேவா: டெடிகேஷன் - ஆல் ரவுண்டர்

விஜய் சேதுபதி: என்சைக்ளோபீடியா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism