சினிமா
Published:Updated:

“டிராவல் பண்ணுங்க லைஃப் நல்லா இருக்கும்!”

Priya Bhavani Shankar
பிரீமியம் ஸ்டோரி
News
Priya Bhavani Shankar

2 கே கிட்ஸ் ‘மேயாத மான்’ படம் பார்த்து அவர் ரசிகர்கள் ஆனார்கள்.

90’ஸ் கிட்ஸ் ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியல் பார்த்து ரசிகர் ஆனார்கள். ஆனால், 80’ஸ் கிட்ஸ் அவர் செய்தி வாசிப்பாளராக இருக்கும்போதே ரசிகர்கள் ஆகிவிட்டனர். ஆமாம்... ப்ரியா பவானி ஷங்கருக்கு எல்லாத் தலைமுறையிலும் ரசிகர்கள் உண்டு.

கமல்ஹாசனுடன் `இந்தியன்-2’, அருண் விஜய்யுடன் ‘மாஃபியா’, ராதா மோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன் ஒரு படம் என ப்ரியாவின் டயரியில் எல்லாப் பக்கங்களும் ஃபுல்! அவரிடம் பேசினேன்.

“டிராவல் பண்ணுங்க லைஃப் நல்லா இருக்கும்!”

“வேணும்னேதான் என்னை நானே பிஸியா வெச்சிருக்கேன். எதுவும் பண்ணாம சும்மா இருக்குறது எனக்கு செட்டே ஆகாது!” எனச் சிரிக்கிறார் ப்ரியா.

‘`செய்திச் சேனல் டு சினிமா... எப்படி நடந்தது?’’

‘`தெரியல. மீடியால ஒரு பெரிய இடத்துக்குப் போகணும்னுதான் கனவு இருந்தது. அதுவுமில்லாம, ஒரு வருஷத்துல கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைச்ச சமயத்துலதான் நடிக்கிற வாய்ப்பு வந்தது. நடிக்க வரலைனா ஒரு பெரிய பத்திரிகையாளராகி, வெளிநாட்டுக்குப் போய் இன்டர்நேஷனல் பியூரோல வேலை பார்த்திருப்பேன். அங்கேயே கல்யாணம் ஆகியிருக்கும். இப்போதைய வாழ்க்கை கனவு மாதிரி இருக்கு.”

“டிராவல் பண்ணுங்க லைஃப் நல்லா இருக்கும்!”

‘`இந்தியன்-2 வாய்ப்பு எப்படி வந்தது?’’

“முதல்முதலா நடிக்க வரும்போது நாம சில இயக்குநர்கள் படங்களில் நடிக்கணும்னு நினைச்சு ஒரு பக்கெட் லிஸ்ட் வச்சிருப்போம்ல. அப்பகூட நான் ஷங்கர் சார் படத்துல நடிப்பேன்னு நினைக்கல. ஆனா, இந்தியன்-2 படத்துல நடிக்கக் கூப்பிட்டது எனக்கு ஷாக்கிங் சர்ப்ரைஸ்.”

‘`ரத்னகுமார், நெல்சன், கார்த்திக் நரேன்னு இளம் இயக்குநர்களோட படங்கள் பண்ணியிருக்கீங்க. இவங்க படங்களில் நடிக்கலாம்கிற நம்பிக்கை எப்படி வந்தது?’’

“கமர்ஷியல் படங்கள்னாலே ஹீரோ சென்ட்ரிக்னு இருந்த சமயத்துலதான் இவங்க எல்லாருமே சினிமாவுக்குள்ள வந்து நிறைய மாத்துனாங்க. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இருக்கிற மாதிரி படங்களில் நடிக்கணும்னு நினைச்சுட்டே இருந்தேன். அப்போ வந்த வாய்ப்புதான் ‘மேயாத மான்.’ ஒரு படத்துல நடிக்கலாமான்னு முடிவு பண்ண தயாரிப்பாளர் யாரு, கதைல என் முக்கியத்துவம் இந்த ரெண்டு விஷயங்களும் பார்ப்பேன்.

இந்தியன்-2
இந்தியன்-2

“இந்தியன்-2 கதை கேட்கும்போதும் இந்தக் கட்டுப்பாடெல்லாம் வெச்சிருந்தீங்களா?”

“ஷங்கர் சார் ஆபீஸ்ல இருந்து கால் வந்தபோதே என்ன ஆனாலும் இந்தப் படத்தில் நடிச்சே ஆகணும்னு முடிவு பண்ணிட்டேன். அங்க போனா, ரெண்டு மணி நேரம் கதையை நரேட் பண்ணுனாங்க. கதையைச் சொல்லிட்டு இதுல இந்த கேரக்டர்தான் நீங்க பண்ணுவீங்கன்னு சொன்னாங்க. எனக்குத் தலை கால் புரியல. அப்படி ஒரு கேரக்டரெல்லாம் கனவுதான். இதைச் சொல்லிட்டு ஷங்கர் சார் உங்களுக்கு ஓகேவான்னு யோசிச்சுச் சொல்லுங்கன்னு சொன்னார். ‘இதுல யோசிக்க என்ன இருக்கு சார். இப்போவே எங்க கையெழுத்து போடணும்னு சொல்லுங்க. ரெண்டு கையாலயும் சைன் பண்ணிட்டுப் போறேன்’னு சொன்னேன்.”

‘`அடிக்கடி ஃபாரின் பறந்துடுறீங்களே... உங்க இன்ஸ்டாகிராம் முழுக்க டூர் போட்டோஸா இருக்கு?’’

“நான் முதல்லயே சொன்னேன்ல. என்னால எந்த வேலையும் பண்ணாம சும்மா இருக்க முடியாது. ஒரு பத்து நாள் பிரேக் கிடைச்சா டூர் போயிடுவேன். மொபைல், இன்டர்நெட் எதுவும் இல்லாம இருப்பேன். டூர் முடிஞ்சு வந்த பிறகுதான் அங்க எடுத்த ஃபோட்டோஸ், வீடியோஸ்லாம் இன்ஸ்டால்மென்ட்ல இன்ஸ்டால அப்டேட் பண்ணுவேன். நான் எல்லாருக்கும் சொல்லுற அட்வைஸ் ஒண்ணே ஒண்ணுதான். ஒரு நாள் கிடைச்சாக்கூட எங்கேயாவது ட்ராவல் பண்ணுங்க.”