Published:Updated:

எவர்கிரீன் நாயகி: “கல்யாணமானாலோ, குழந்தை பிறந்தாலோ கரியர் முடிஞ்சிடறதில்லை!”

ராதிகா சரத்குமார்
பிரீமியம் ஸ்டோரி
ராதிகா சரத்குமார்

வெற்றிச் சூத்திரம் சொல்லும் ராதிகா சரத்குமார்

எவர்கிரீன் நாயகி: “கல்யாணமானாலோ, குழந்தை பிறந்தாலோ கரியர் முடிஞ்சிடறதில்லை!”

வெற்றிச் சூத்திரம் சொல்லும் ராதிகா சரத்குமார்

Published:Updated:
ராதிகா சரத்குமார்
பிரீமியம் ஸ்டோரி
ராதிகா சரத்குமார்

கி.ச.திலீபன்

திரைத்துறைக்கு வந்து 40 ஆண்டுகளைக் கடந்துவிட்ட போதிலும், இன்னும் வெற்றிகரமான நடிகையாக வலம் வருகிறார் ராதிகா சரத்குமார். ஐ.பி.எல், பிக் பாஸ் என டி.ஆர்.பி ரேட்டிங்கில் கடும் போட்டிகள் நிலவும் சூழலில்கூட `சித்தி 2' சீரியலுக்கு 7.1 ரேட்டிங் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறார். படப்பிடிப்பு இடைவெளியில் அவரிடம் பேசினோம்…

மறக்க முடியாத தீபாவளி கொண்டாட்டம்?

எல்லாப் பண்டிகைகளுமே எனக்கு ரொம்பப் பிடிக்கும். தீபாவளி கொஞ்சம் கூடுதல் ஸ்பெஷல். குடும்பத்தோட மகிழ்ச்சியா கொண்டாடுவேன். சொல்லப்போனா எனக்கு எல்லா நாளும் தீபாவளிதான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`சித்தி 2'-க்குக் கிடைச்சிருக்குற வரவேற்பை எப்படிப் பார்க்கிறீங்க?

ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. இத்தனைக்கும் பல விஷயங்கள் எங்களுக்குப் போட்டியா இருந்த போதும் அதையெல்லாம் தாண்டி ரேட்டிங்ல முன்னாடி வந்திருக்கோம். எங்க குழுவில் உள்ள அத்தனை பேருடைய உழைப்பு, மக்கள் தரும் ஆதரவு இவையெல்லாம் சேர்ந்துதான் இதைச் சாத்தியப்படுத்த முடிஞ்சுது.

சீரியல்னாலே பெண்களுக்கானதுன்னு ஒரு பொதுப்பார்வை இருக்கு. `சித்தி 2' சீரியல் பத்தி ஆண்கள்கிட்ட இருந்து ஏதாவது ரெஸ்பான்ஸ்...

பெண்களுக்கானதுங்குற நிலையெல்லாம் எப்பவோ மாறிடுச்சு. இப்ப ஆண் - பெண் ரெண்டு பேருமே சீரியல் பார்க்குறாங்க. `சித்தி 2'-வைப் பொறுத்தவரை எல்லாத் தரப்பையும் கவர்கிற மாதிரிதான் கதை பண்ணியிருக்கோம். பெண் கதாபாத்திரங்களுக்கு நிகராக ஆண் கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கு. பாலின பாரபட்சமே இல்லாம எல்லோரும் சித்தியை ரசிக்கிறாங்க.

எவர்கிரீன் நாயகி: “கல்யாணமானாலோ, குழந்தை பிறந்தாலோ கரியர் முடிஞ்சிடறதில்லை!”

சினிமா, டெலிவிஷன் சேனல்னு ரெண்டு தளங்களிலும் இயங்கிட்டிருக்கீங்க. புது வரவான ஓ.டி.டி தளங்களை எப்படிப் பார்க்குறீங்க... `சூரரைப் போற்று' படம் நேரடியாக ஓ.டி.டி-யில் வெளியாவதற்கு எதிராக எழுந்த சர்ச்சை பற்றி என்ன நினைக்கிறீங்க?

புதுசா எது வந்தாலும் சில பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சினிமாங்குறது வியாபாரம். இந்த வியாபாரத்தை நம்பி அதுக்குன்னு ஒரு முதலீட்டை போட்டிருக்கிற தயாரிப்பாளர்தான் படத்தை எந்தத் தளத்தில் வெளியிடணும்னு முடிவு செய்யணும். அவர் முடிவே இறுதியானதுங்குறப்ப மத்தவங்க எப்படி அந்த முடிவுக்குள்ள தலையிட முடியும்? நாம இப்ப நெருக்கடியான காலகட்டத்துல இருக்கோம். இப்படியான சூழலில் ஒரு தயாரிப்பாளர் அவருக்கு சரின்னு படுறதை பண்ணும்போது அதை எதிர்க்குறது முறை யில்லை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சினிமா, தொலைக்காட்சிக்கு அடுத்தகட்டமா வெப் சீரிஸ் பண்ற ஐடியா இருக்கா?

நிச்சயமா இருக்கு. அதுக்கான வேலைகள் போய்க்கிட்டிருக்கு. எல்லாம் உறுதியானதும் அது பற்றின அறிவிப்பை விரைவில் சொல்வேன்.

சினிமாவுக்கு வந்து 40 ஆண்டுகளைக் கடந்துட்டீங்க. இந்த ஒட்டுமொத்த பயணத்தைப் பற்றி…

நடிகைகள் நீண்ட காலம் ஃபீல்டுல நிற்க முடியாதுன்னு நான் நடிக்க வந்த காலத்திலிருந்து சொல்லிக்கிட்டிருக்காங்க. கல்யாணம் ஆனா, கரியர் முடிஞ்சுது, குழந்தை பிறந்துட்டா அவ்வளவுதான்னு என்னவெல்லாமோ சொன்னாங்க. ஆனா, அவற்றையெல்லாம் தாண்டித்தான் நான் இந்த இடத்துல இருக்கேன். பொதுவா, நிலவுற கருத்தையெல்லாம் நாம் பொருட்படுத்தத் தேவையில்லை. நம்ம தொழில் மேல நமக்கு ஒரு நம்பிக்கை இருக்கணும். நான் என் தொழிலை முழுவதுமா நம்புறேன்.

40 ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் ஆக்டிவ்வா இருக்கேன். அந்த நம்பிக்கைக்குக் கிடைச்ச வெற்றி இது.

முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது எனப் பல எதிர்ப்புகள் கிளம்பினபோது நீங்க விஜய் சேதுபதியை ஆதரிச்சீங்க... இதுபோன்று அரசியல் ரீதியில் திரைப்படங்களுக்கு வரும் எதிர்ப்புகளை எப்படிப் பார்க்குறீங்க?

சினிமா, விளையாட்டுக்குள்ள அரசியல் வரவே கூடாது. ஹிட்லர் வாழ்க்கை வரலாற்றை படமெடுக்குறவன் தேசத்துரோகியா? முத்தையா முரளிதரன் வாழ்க்கையை ஒரு கதையாத் தான் பார்க்கணும். இங்க எல்லாருக்கும் கருத்துரிமை இருக்கு. தான் விரும்புற கதையை படமா பண்றதுக்கான சுதந்திரம் இருக்கு. இப்படியிருக்கும்போது ஒரு நடிகனை நீ இதுல நடிக்கக் கூடாதுன்னு சொன்னதுல எனக்கு உடன்பாடில்லை. நாங்கள் நடிகர்கள். வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கும் ஆசை எங்க எல்லோருக்குமே இருக்கும். விஜய் சேதுபதிக்கு அப்படி ஒரு வாய்ப்பு அமையுறப்போ, `தமிழ் மக்கள் உங்களை ரொம்ப விரும்புறாங்க. அதனால நீங்க இந்த கதாபாத்திரத்துல நடிக்கக் கூடாது'ன்னு சொன்னதை என்னால புரிஞ்சுக்க முடியலை.

இந்தச் சர்ச்சையை அடுத்து விஜய் சேதுபதி மகளுக்கு சமூக வலைதளத்தில் பாலியல் ரீதியில் மிரட்டல் விடப்பட்டிருக்கு. அது மாதிரியான ஒரு மோசமான செயல் எதுவுமே கிடையாது. அதைக் கேள்விப்பட்டதும் என் ரத்தம் கொதிச்சுப்போச்சு. இனிமேல் இது மாதிரி நடக்கவே கூடாது.