Published:Updated:

அவரை சந்திக்கவில்லையேன்னு ரொம்ப வருத்தப்படுறேன்! - ரம்யா கிருஷ்ணன்

ரம்யா கிருஷ்ணன்
பிரீமியம் ஸ்டோரி
ரம்யா கிருஷ்ணன்

ஸ்டார்

அவரை சந்திக்கவில்லையேன்னு ரொம்ப வருத்தப்படுறேன்! - ரம்யா கிருஷ்ணன்

ஸ்டார்

Published:Updated:
ரம்யா கிருஷ்ணன்
பிரீமியம் ஸ்டோரி
ரம்யா கிருஷ்ணன்

ரம்யா கிருஷ்ணன், சிறு வட்டத்துக்குள் சுருக்க முடியாத சிறந்த நடிகை. சூப்பர் ஸ்டாரிடமே ஸ்டைல் காட்டும் நீலாம்பரியாகவும் மிரட்டுவார், துஷ்ட சக்திகளை அழித்தெறியும் அம்மனாகவும் அசத்துவார், காமெடியில் மேகி (எ) மரகதவல்லியாக கலக்குவார், லீலாவாக கண்களையும் கலங்கடிப்பார். `பாகுபலி’யில் அரசியாக மகிழ்மதியை ஆண்டவர், இப்போது `குயின்’ வெப் சீரிஸில் மாநிலத்தை ஆள்பவராக வலம் வருகிறார். சினிமாவில் 35 ஆண்டுகள் கோலோச்சிவிட்டு, அடுத்த கட்டமாக வெப் சீரிஸில் காலடி வைத்திருக்கிறார். அந்த அனுபவத்தை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.

அவரை சந்திக்கவில்லையேன்னு ரொம்ப வருத்தப்படுறேன்! -  ரம்யா கிருஷ்ணன்

‘குயின்’ பத்தி கெளதம் மேனன் சொல்லும்போது எப்படி ஃபீல் இருந்துச்சு?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எனக்கு குயின் கதை ரொம்ப பிடிச்சிருந்தது. இந்த மாதிரி அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிக்கிறதுன்னா எனக்கு இஷ்டம். நீலாம்பரி, சிவகாமிதேவி வரிசையில் `ஷக்தி சேஷாத்ரி' கதாபாத்திரமும் நிச்சயம் பேர் வாங்கும். வாழ்க்கையில் தனக்கு வர்ற ஒவ்வொரு தடையையும் தாண்டி சாதிக்கிற ஷக்தி சேஷாத்ரியை எல்லா பெண்களுக்கும் நிச்சயம் பிடிக்கும். எனக்கு இந்த வாய்ப்பு கிடைச்சதில் பெருமையாவும் மகிழ்ச்சியாவும் இருக்கு!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இனி வரப்போறது வெப் சீரிஸ் காலம்னு சிலரும், என்னதான் இருந்தாலும் தியேட்டர் ஃபீல் வருமான்னு சிலரும் சொல்றாங்க. உங்க பார்வை என்ன?

இரண்டு தளமுமே தன்னை அப்டேட் பண்ணிக்கும்னு நினைக்கிறேன். வெப் சீரிஸ் வந்ததால் மக்கள் தியேட்டருக்கு வராம இருக்க மாட்டாங்க. வெப் சீரிஸ் உலகத்துக்குள்ள கன்டென்ட் கொட்டி கிடக்கு. ஒரு சீரிஸ் பார்க்க ஆரம்பிச்சால், அடுத்தடுத்த எபிசோடுன்னு அப்படியே நம்மை உள்ளே இழுத்திடுது. வெளியே வர மனசே வர்றதில்லை. ஐ லவ் வெப் சீரிஸ்.

படத்தைத் தேடி தியேட்டருக்கு நாம போறோம்; வெப் சீரிஸ்ல நம்மளை தேடி வருது. ஆக, மொத்தம், மக்களுக்கு என்டர்டெயின்மென்ட் உறுதி!

`குயின்' வெப் சீரிஸுக்கு ஹோம் வொர்க் தேவைப் பட்டுச்சா?

இல்லை. என்கிட்ட ‘யாரையும் இமிடேட் பண்ண வேண்டாம். யாரை மாதிரியும் இருக்க முயற்சி செய்ய வேண்டாம். கதையை உள்வாங்கிட்டு நீங்க எப்படி பண்ணு வீங்களோ அப்படி பண்ணுங்க, போதும்’னு சொல்லிட்டாங்க. அதைத்தான் நானும் செய்திருக்கேன்.

ரம்யா கிருஷ்ணன்
ரம்யா கிருஷ்ணன்

இந்த கேரக்டருக்கு காரணமானவங்களை நேர்ல சந்திச்சிருக்கீங்களா?

அவங்களைச் சந்திக்காமல் விட்டுட் டோமேன்னு ரொம்ப வருத்தமா இருக்கு.

உங்களுடைய 35 ஆண்டு சினிமா பயணத்துல, `இப்படிப்பட்ட கேரக்டரை நாம இன்னும் பண்ணலியே'ன்னு தோணினது உண்டா?

அப்படி நான் நினைச்சதே இல்லை. அம்மன், `பஞ்சதந்திரம்’ மேகி, ‘படையப்பா’ நீலாம்பரி, ‘பாகுபலி’ சிவகாமிதேவி, ‘சூப்பர் டீலக்ஸ்’ லீலான்னு நான் பண்ணினது எல்லாமே ரொம்ப சவாலான கேரக்டர்கள். இனி வரப்போற கதாபாத்திரங்களும் இப்படியே இருக்கணும்னு ஆசைப்படறேன்.

ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் எப்படி தேர்ந்தெடுக்கறீங்க?

ஃபார்முலா எல்லாம் கிடையாது. ஒரு கதையைக் கேட்கும்போது என் மனசுல ஏதாவது ஃபீல் ஆச்சுன்னா, உடனே `ஓகே’ சொல்லிடுவேன். சில நேரங்கள்ல அப்படி மனசு ஃபீல் ஆகும். சில நேரங்கள்ல பணத்துக்காக மனசு `ஓகே’ன்னு சொல்லும். இந்த மாதிரி வெவ்வேறு காரணங்களை வெச்சுதான் தேர்ந்தெடுக்கிறேன்.

நீங்க நடிக்கிற வித்தியாசமான கதாபாத்திரங்களுக்குள் எப்படி உங்களை பொருத்திக்கிறீங்க?

`ஸ்டார்ட், கேமரா, ஆக்‌ஷன்’னு சொன்னா அதுவாவே வந்திடுது, ஹாஹா... மத்தபடி அந்த மேஜிக் பத்தி சொல்ல தெரியலை!

நீலாம்பரி, சிவகாமிதேவி கேரக்டர்கள்தான் தங்களின் இன்ஸ்பிரேஷன்னு பல ஹீரோயின்கள் சொல்றாங்க. இப்போ இருக்கிற ஹீரோயின்களுக்கு நீங்க என்ன சொல்ல நினைக்கிறீங்க?

`இந்த கேரக்டர்தான் பண்ணுவேன், இது பண்ண மாட்டேன்'னு சொல்லா தீங்க. மனசை ஓபனா வெச்சுக்கோங்க. உங்களுக்குப் பிடிக்கலைங்கிறதுக்காக அந்த கேரக்டர் வொர்க் அவுட் ஆகாதுன்னு இல்லை. ஏன்னா, நீலாம்பரி கேரக்டர் பத்தி என்கிட்ட சொல்லும்போது, எனக்கு ரொம்பவே பயமா இருந்தது. அப்போ வேற சாய்ஸ் இல்லைன்னுதான் அதை பண்ணினேன். ஆனா, அந்த கேரக்டருக்கு உண்மையா நடிச்சேன். அதுதான் என் கரியர்ல பெரிய மைல்ஸ்டோனா அமைஞ்சது. அதுமாதிரி நாம எதிர்பார்க்காதது எல்லாம் சில இடங்கள்ல நடக்கும். வித்தியாசமான கதாபாத்திரங்கள்ல உங்களை நடிக்கச் சொல்லிக்கேட்டால், எதனால அப்படி கேட்கறாங்கன்னு யோசிச்சு முடிவெடுங்க. மைண்டை பிளாக் பண்ணி வெச்சுக்காதீங்க.

நிறைய மொழிகள்ல நடிக்கறீங்க, இடையில கொஞ்ச காலம் சீரியல், ரியாலிட்டி ஷோ, இப்போ வெப் சீரிஸ்... நேரத்தை எப்படி மேனேஜ் பண்றீங்க?

எனக்கு ஓவரா வேலை செய்ய பிடிக்காது. என்னுடைய பர்சனல் நேரம், நிச்சயம் எனக்கானது. அதைக் கணக்குப் பண்ணிதான் மத்த வேலைகளை அமைச்சுக்குவேன். நம்மை வருத்திக்கிட்டு வேலை பார்த்தால் மனசார வேலை செய்ய முடியாது. எனக்கான நேரத்தை எடுத்துக்கிட்டால்தான் அமைதியான மனநிலை கிடைக்கும்; நிம்மதியா நடிக்க முடியும். குடும்பத்துடன் தேவையான நேரம் செலவு பண்றேன். ஒரேடியா குடும்பம்னோ, வேலைன்னோ இல்லாம 50-50ன்னு சரியா பேலன்ஸ் பண்ணிட்டு இருக்கேன்.

சினிமாத்துறையில் உங்களின் சிறந்த நண்பர் யார்?

எல்லோருமே எனக்கு நல்ல நண்பர்கள். ரொம்ப ரொம்ப நெருக்கம்னா மதுபாலாவைச் சொல்லலாம்.

உங்க மகன் இப்போ என்ன பண்றார்?

ஒன்பதாவது படிச்சுக்கிட்டு இருக்கார். மியூசிக் பற்றி அவ்ளோ அப்டேட்டா இருக்கார். மியூசிக்ல இப்போ என்ன டிரெண்டுன்னு அவரை கேட்டா தெரிஞ்சுக்கலாம். ஆச்சர்யமா இருக்கு!

உங்களுக்கான பொழுதுபோக்கு என்ன?

பொழுதுபோக்குன்னு தனியா எதுவும் கிடையாது. எப்பல்லாம் நேரம் கிடைக்குதோ அப்பல்லாம் ரெஸ்ட்டாரன்ட்டுக்குப் போய் வித்தியாசமான உணவுகளை சாப்பிடப் பிடிக்கும். மற்றபடி, குடும்பத்தோடும் நண்பர்களோடும் சந்தோஷமா இருக்கிறதைத் தாண்டி வேற என்ன இருக்க முடியும்!