Published:Updated:

“நொச்சிக்குப்பம் என் ஃபேவரைட்!”

ரித்திகா சிங்
பிரீமியம் ஸ்டோரி
ரித்திகா சிங்

முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றவர் சினிமாவோடு, கிக் பாக்ஸிங்கையும் கைவிடவில்லை.

“நொச்சிக்குப்பம் என் ஃபேவரைட்!”

முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றவர் சினிமாவோடு, கிக் பாக்ஸிங்கையும் கைவிடவில்லை.

Published:Updated:
ரித்திகா சிங்
பிரீமியம் ஸ்டோரி
ரித்திகா சிங்

ன்ஸ்டாகிராம் பக்கத்தில் வந்துகுவிகின்றன ரித்திகா சிங்கின் கிக் பாக்ஸிங் ஆக்‌ஷன்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`` ‘பாக்ஸர்’ படத்துல ஸ்போர்ட்ஸ் ஜர்னலிஸ்ட்டா வர்றீங்களாமே?’’

“ஆமா. ‘ஆண்டவன் கட்டளை’ படத்திலேயும் எனக்கு ஜர்னலிஸ்ட் கேரக்டர். இதுலேயும் நான் ஜர்னலிஸ்ட். இதுல நான் ரொம்ப போல்டான பொண்ணா வர்றேன். இதுக்கு முன்னாடி நான் பண்ணாத கேரக்டர். இந்தப் படத்துடைய இயக்குநர் விவேக் என்கிட்ட கதை சொன்ன அடுத்த நிமிஷம் நான் ஓகே சொல்லிட்டேன். அருண் விஜய் சாருடைய ஃபிட்னஸ் பார்த்து அசந்துட்டேன். கஷ்டப்படாம இந்தளவுக்கு உடம்பை வெச்சிருக்க முடியாது. அந்த ஃபிட்னஸே அவர் மேல இருக்கிற மரியாதையை அதிகமாக்குது.”

``அசோக் செல்வனுடன் ‘ஓ மை கடவுளே’ படம் எந்த அளவுல இருக்கு?’’

“ஷூட்டிங் ரொம்ப ரொம்ப ஜாலியா இருந்தது. படத்துல வேலை செஞ்சவங்க எல்லோரும் யங்ஸ்டர்ஸ். அசோக் செல்வனும் அவங்க அக்கா அபிநயாவும் சேர்ந்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறாங்க. நானும் அபியும் ரொம்ப க்ளோஸாகிட்டோம். அசோக் செல்வன்கூட நடிக்கிறது செம ஃபன். எப்படி மதி கேரக்டர் பேசப்பட்டுச்சோ அதே மாதிரி அனு கேரக்டரும் கவனிக்கப்படும். இந்த மாதிரி ஜாலியான ஒரு படம் நான் பண்ணுனதில்லை.”

ரித்திகா சிங்
ரித்திகா சிங்

``இன்ஸ்டாகிராம்ல கராத்தே பயிற்சி பண்ற வீடியோக்கள் போடுறீங்க. போட்டிகளில் இன்னும் கலந்துக்கிட்டுதான் இருக்கீங்களா?’’

“போட்டிகள்ல கலந்துக்கிறதுக்கு முறையான பயிற்சி வேணும். ஒரு நாளைக்கு மூணு செஷனா பயிற்சி எடுக்கணும். சரியான டயட்டைக் கடைப்பிடிக்கணும், நல்லாத் தூங்கணும். தியானம், யோகா எல்லாம் பண்ணணும். இது எல்லாத்தையும்விட அந்த விளையாட்டுக்கான மரியாதையைக் கொடுக்கணும். சினிமாவுல நடிச்சிக்கிட்டே இதையெல்லாம் என்னால பேலன்ஸ் பண்ண முடியலை. அதனால நேரம் கிடைக்கும்போதெல்லாம் பிராக்டீஸ் மட்டும் பண்ணிக்கிட்டிருக்கேன். என்னதான் நான் சினிமாவுக்குப் பிடிச்சு வந்தாலும் என்னுடைய பாக்ஸிங்கை ரொம்பவே மிஸ் பண்றேன். அடுத்த வருஷம் தென்னாப்பிரிக்காவுல நடக்குற உலக சாம்பியன்ஷிப் கராத்தே போட்டியில கலந்துக்கலாம்னு பிளான் பண்ணி அதுக்கான வேலைகளைச் செஞ்சுட்டிருக்கேன்... பார்ப்போம்.”

 “நொச்சிக்குப்பம் என் ஃபேவரைட்!”

``ரொம்ப வருஷம் தமிழ்ப் படங்கள் பண்ணுனாலும் தமிழ் பேசப் பழகாத ஹீரோயின்கள் மத்தியில இவ்வளவு தெளிவா தமிழ் பேசுறீங்களே?’’

“எனக்கு மொழிகளைக் கத்துக்கிறது ரொம்பப் பிடிக்கும். தமிழ் மட்டுமல்ல, தெலுங்கு, மராத்தி, பெங்காலின்னு நிறைய மொழிகள் ஓரளவு பேசுவேன். என்னை நடிகையாக்கியது தமிழ்நாடுங்கிறதனால தமிழ் மேல தனிப் பிரியம் உண்டு. எனக்கு சென்னை ரொம்பப் பிடிக்கும். நான் எப்போ சென்னை வந்தாலும் என் வேலை எல்லாம் முடிச்சுட்டு நொச்சிக்குப்பம் மீன் மார்க்கெட்டுக்குப் போயிடுவேன். கேமரா முன்னாடி நான் நின்னு என் கரியர் ஆரம்பிச்ச இடம். அதனால அங்கே போனா எனக்கு நாஸ்டால்ஜியாவா ஃபீல் ஆகும். என் வாழ்க்கையில மிக முக்கியமான இடம் நொச்சிக்குப்பம் மீன் மார்க்கெட்.”