Published:Updated:

செல்வராகவன்... இன்னொரு கல்யாணம்... புதிய பிசினஸ்... மனம் திறக்கும் சோனியா அகர்வால்!

சோனியா அகர்வால்
பிரீமியம் ஸ்டோரி
சோனியா அகர்வால்

எவர்கிரீன் நாயகி

செல்வராகவன்... இன்னொரு கல்யாணம்... புதிய பிசினஸ்... மனம் திறக்கும் சோனியா அகர்வால்!

எவர்கிரீன் நாயகி

Published:Updated:
சோனியா அகர்வால்
பிரீமியம் ஸ்டோரி
சோனியா அகர்வால்

டுத்தென்ன என்ற எதிர்பார்ப்பில் ஒட்டுமொத்த திரையுலகமும் காத்திருக்கிறது. பாதியில் நின்றுபோன படப்பிடிப்புகள், கதவடைக்கப்பட்ட புதிய வாய்ப்புகள், என எங்கும் நிலையற்ற தன்மை. இவர்களுக்கு மத்தியில் கவனம் ஈர்க்கிறார் நடிகை சோனியா அகர்வால். புதிய பிசினஸ், விளம்பர நடிப்பு, வெப் சீரிஸ் என தன் செகண்டு இன்னிங்ஸில் செம பிசியாக இருக்கிறார்.

‘`வழக்கமா அம்மா, தம்பி, நான் மூணு பேரும் ஆளுக்கொரு மூலையில இருப்போம். மூணு பேரும் சேர்ந்திருந்து ரொம்ப காலமாச்சு. லாக்டௌன் வந்தபோது மூணுபேரும் சென்னையில ஒண்ணா இருந்தோம். லாக்டௌன்ல நடந்த நல்ல விஷயத்துல இதுவும் ஒன்று’’ - சந்தோஷமாக ஆரம்பிப்பவர், பிசினஸ்வுமன் ஆகியிருப்பதும் லாக்டௌன் நாள்களில்தான்.

சோனியா அகர்வால்
சோனியா அகர்வால்

‘`என் ஃப்ரெண்ட் பிரியாகிட்ட சில வருஷங்களுக்கு முன்னாடி வெடிங் பிளானிங் கம்பெனி ஆரம்பிக்கலாமானு பேசியிருந்தேன். அவங்க கணவர் ஆனந்த் ஈவென்ட் மேனேஜ்மென்ட்ல இருக்கார். லாக்டௌன்ல மறுபடி அதைப் பத்தி நிறைய பேசினோம். எப்படிப் பண்ணலாம்னு பிளான் பண்ணினோம். முதல்ல நாங்க மூணு பேர்தான் பேச ஆரம்பிச்சோம். கல்யாணத்துல காஸ்ட்யூம்ஸுக்கு முக்கியமான இடமுண்டு. செலிபிரிட்டி டிசைனர் சிட்னி ஸ்லேடன் என் க்ளோஸ் ஃப்ரெண்ட். காஸ்ட்யூம் டிசைனிங்கையும் இதுல ஒரு பேக்கேஜா சேர்க்கலாம்னு யோசிச்சபோது சிட்னியும் இதுக்குள்ள வந்தார். நாலு பேரும் சேர்ந்து ‘டேல் ஆஃப் டூ’ வெடிங் பிளானிங் கம்பெனி ஆரம்பிச்சிட்டோம். ‘லாக்டௌன்ல கல்யாணங்கள் எளிமையாகியிருக்கு, கல்யாணத்துக்கு வரும் நபர்களின் எண்ணிக்கை குறைஞ்சிருக்கு, பட்ஜெட் கம்மியாயிருக்கு... இந்த நேரத்துல இப்படியொரு பிசினஸா’ என்ற கேள்வியும் வந்தது. கல்யாணம் என்பது எல்லாருக்கும் வாழ்நாள் அனுபவம். கோவிட்-19 மாதிரியான அசாதாரண சூழல்கள்ல கல்யாணங்களை நாம நினைச்ச மாதிரி பிரமாண்டமா வேணா நடத்த முடியாமப் போகலாம். ஆனா, அந்தத் தருணத்தை ஸ்பெஷாக்கலாம். அதுக்கு ஆயிரம் பேர் அவசியமில்லை. அம்பது பேர் வந்தாலும் ஸ்பெஷலாகவும் மறக்க முடியாத நிகழ்வாகவும் மாற்றலாம். யாருக்கு என்ன பட்ஜெட்ல தேவையோ, அதுக்கேத்த பேக்கேஜை பெஸ்ட்டா கொடுக்கணும்ங்கிற முடிவோடுதான் பிசினஸை ஆரம்பிச்சோம்.’’ அழகு தமிழில் பேசுபவர், லாக்டௌனில் தன் நிறுவனம் சார்பாக முதல் திருமணத்தை நடத்திப் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார்.

செல்வராகவன்... இன்னொரு கல்யாணம்... புதிய பிசினஸ்... மனம் திறக்கும் சோனியா அகர்வால்!

சானிட்டைசர் விளம்பரம், பெயரிடப் படாத தமிழ்ப் படம், வெப் சீரிஸ் என நடிப்பிலும் பிசியாக இருக்கிறார் சோனியா.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘`குயின் வெப் சீரிஸின் அடுத்த சீசன்ல நடிக்கிறேன். முதல் சீசன் பண்ணதே மறக்க முடியாத அனுபவம். ஜெயலலிதா அம்மாவைப் பார்த்து பிரமிச்ச தருணங்கள் நிறைய. தயக்கத்தோடுதான் இதுல கமிட் ஆனேன். ஆனா, நடிச்சபோது ஜெயலலிதா அம்மாவோட வாழ்க்கையில அவங்க பட்ட கஷ்டங்களும் வலிகளும் தெரியவந்தபோது அவங்க மேல இருந்த மரியாதை இன்னும் அதிகமாச்சு. செகண்டு சீசனுக்கு ஆர்வத்தோடு வெயிட் பண்ணிட்டிருக்கேன்’’ - அப்டேட் தருபவருக்கு ஒரு விஷயத்தில் தீரா கோபம் தொடர்கிறது.

‘`பாலிவுட்லயும் சரி, தெலுங்குலயும் கல்யாணத்துக்குப் பிறகும் நடிகைகள் ஹீரோயினா நடிக்கிறாங்க. ஆடியன்ஸுக்கு அவங்களை ஹீரோயினா பார்க்கறதுல எந்தப் பிரச்னையும் இருக்கிறதில்லை. புரொடியூசர்ஸுக்கும் டைரக்டர்ஸுக்கும்தான் தடையும் தயக்கமும் இருக்கு. கல்யாணமானாலே நடிகையோட தோற்றமோ, வயசோ மாறிடப் போறதில்லை. 24 வயசுல கல்யாணம் பண்ணதால அடுத்த நாளே நான் 50 வயசு லேடியா மாறிடப் போறேனா? ஹீரோயின் எப்படி நடிக்கிறாங்க, அவங்க தோற்றத்தை எப்படி மெயின்டெயின் பண்றாங்க என்பதுதான் முக்கியம். கல்யாணத்தை நடிகைகளின் தகுதிக்குறைவா பார்க்கிற மனப்பான்மை இங்கே மாறணும். கல்யாணமானதுமே ஹீரோயினோட சேப்டரை க்ளோஸ் பண்றது எந்த வகையில நியாயம்?’’- சீறுபவரை கூலாக்க அடுத்த கேள்வி.

உங்களுடைய கிளாஸிக் படங்களில் ஃபேவரைட் எது? அதை ரீமேக் செய்தால் உங்களின் கேரக்டரில் நடிக்க எந்த நடிகை சாய்ஸ்?

‘`சந்தேகமே இல்லாம ‘7ஜி ரெயின்போ காலனி’தான். அனிதா கேரக்டருக்கு என் சாய்ஸ் கீர்த்தி சுரேஷ். சூப்பரா நடிப்பாங்க.’’

அடுத்தவங்க கல்யாணங்களை அழகாக்கறீங்க... உங்க கல்யாணம் பற்றி என்ன பிளான்?

“கண்டிப்பா இன்னொரு கல்யாணம் பண்ணுவேன். எனக்குன்னு ஒரு குடும்பம் வேணும்னு ஆசைப்படறேன். அடுத்த கல்யாணத்துல நான் இன்னும் கவனமா முடிவெடுக்கணும். இப்போதைக்கு என் லைஃப்ல யாரும் இல்லை. நான் சிங்கிள்தான்.’’

 `டேல் ஆஃப் டூ'வின் முதல் திருமணம்
`டேல் ஆஃப் டூ'வின் முதல் திருமணம்

முதல் கல்யாணத்துல எங்கே தப்பு நடந்ததா ஃபீல் பண்றீங்க?

‘`கரியரையும் பர்சனல் லைஃபையும் ஒண்ணா பார்த்ததுதான் நான் பண்ணின பெரிய தப்பு. ரொம்ப சின்ன வயசுல கல்யாணம் பண்ணியிருக்கக் கூடாது. கரியர்ல ஃபோகஸ் பண்ணிட்டு, பிறகு கொஞ்சம் வயசானதும் கல்யாணத்தைப் பத்தி யோசிச்சிருக்கணும். ஆனா, அது விதி. நடந்திருச்சு. அந்த ரிலேஷன்ஷிப் விஷயத்துல யோசிக்காம முடிவெடுத்துட்டேன்னு நினைக்கிறேன். அந்த வயசுல எனக்குப் பக்குவம் இல்லை. எல்லாப் பெண்களுக்கும் ஒரு அட்வைஸ்... கரியர் வேற; பர்சனல் லைஃப் வேற. ரெண்டையும் குழப்பிக்காதீங்க. கரியர்ல ஃபோகஸை விட்ராதீங்க. உங்க வேலை ரொம்ப முக்கியம். அதுல நீங்க ஜெயிச்ச பிறகு கல்யாணம் பண்ணிக்கலாம், தப்பில்லை. இப்ப உள்ள பக்குவம் அப்போ இருந்திருந்தா, அந்த வயசுல கல்யாணமே பண்ணியிருக்க மாட்டேன் அல்லது பிரச்னைகளை இன்னும் கொஞ்சம் பெட்டரா சமாளிச்சிருப்பேன். வயசுதான் பிரச்னையே தவிர என் சாய்ஸ்ல தப்பே இல்லை. செல்வராகவன் அருமையான மனிதர். பிரமாதமான டைரக்டர். அதுக்காகவே அவரை லவ் பண்ணினேன். இன்னிக்கும் அவர் மேல எனக்கு அந்த பிரமிப்பு உண்டு.’’

செல்வராகவனை சந்திப்பதோ, பேசுவதோ உண்டா?

‘`ரொம்ப நாள் முன்னாடி ஒரு ஃபங்ஷன்ல செல்வாவையும் அவர் மனைவி கீதாஞ்சலியையும் மீட் பண்ணினேன். மனசுல எந்த நெகட்டிவிட்டியும் இல்லாம பேசினோம். அதுக்குப் பிறகு சந்திக்கலை, பேசலை. அதுக்காக ஒருத்தரை ஒருத்தர் வெறுக்கறோம், அவங்களைப் பார்த்தாலே விலகிப் போகணும்னு எல்லாம் நினைக்கிறதில்லை.பார்த்தா ஹாய், ஹலோ சொல்லிப்போம்.’’

அடுத்து?

‘`ஸ்க்ரிப்ட் எழுதறது, சின்னதா ஒரு புரொடக்‌ஷன் யூனிட் ஆரம்பிச்சு புது டேலன்ட்ஸை அறிமுகப்படுத்தறதுன்னு நிறைய பிளான்ஸ் இருக்கு. எல்லாமே நடக்க வேண்டிய டைம்ல நல்லபடியா நடக்கும் என்ற நம்பிக்கையும் இருக்கு.’’

நடக்கட்டும்.