Published:Updated:

நான் பெண் காவலர்! - ஸ்ரீபிரியங்கா

ஸ்ரீபிரியங்கா
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீபிரியங்கா

முகங்கள்

நான் பெண் காவலர்! - ஸ்ரீபிரியங்கா

முகங்கள்

Published:Updated:
ஸ்ரீபிரியங்கா
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீபிரியங்கா

பெண் காவலர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை அப்படியே வெளிக் கொண்டு வந்திருக்கிறது அண்மையில் திரைக்கு வந்த ‘மிக மிக அவசரம்’ திரைப்படம். இதில், பெண் காவலர் சாமந்தி பாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார் தமிழ்ப்பெண் ஸ்ரீபிரியங்கா. தமிழ்த் திரையுலகில் கால்பதித்திருக்கும் ஸ்ரீபிரியங்காவுக்கு வாழ்த்துகளைச் சொன்னோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உங்கள் கேரக்டரை எப்படி எடுத்துக்கொண்டார்கள் தமிழகப் பெண் காவலர்கள்?

‘மிக மிக அவசரம்’ திரைப்படத்தை முதல்ல தமிழக காவல்துறையில இருக்கிற உயரதிகாரிகள்தான் பார்த்தாங்க. நாங்க சொல்லியிருந்த விஷயம் அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. ‘இந்தத் திரைப்படத்தைப் பெண் காவலர்களுக்கும் திரையிடுங்கள். அவங்க கண்டிப்பா இதைப் பார்க்கணும்’னு சொன்னாங்க. அதுக்கப்புறம்தான் பட இயக்குநர் சுரேஷ் காமாட்சி சார் 200 பெண் காவலர்களுக்குப் படத்தைப் போட்டுக் காண்பித்தார்.

அந்தப் பெண்கள் படத்தைப் பார்த்துட்டிருந்த நேரத்தில் நான் அவங்களையே பார்த்துட்டிருந்தேன். எனக்குள் ஒருவிதப் படபடப்பு. படம் முடியும் வரை அந்த இடமே அமைதியாயிருந்தது. ‘நல்லா பண்ணியிருக்கோமா, இல்லையா... ஒருத்தர்கிட்டகூட ரியாக்‌ஷன் இல்லையே’ன்னு பயந்துட்டே இருந்தேன்.

படம் முடிஞ்சதும் அத்தனை பெண் காவலர்களும் என் கையைப் பிடிச்சுக்கிட்டு ‘எங்களை மாதிரியே வாழ்ந்து காட்டியிருக்கீங்க’ன்னு நெகிழ்ச்சியாகச் சொன்னாங்க. ஒருகணம் உடம்பெல்லாம் புல்லரிச்சுப் போச்சு. குறிப்பா, திரைப்படத்துல நான் என் அப்பாகிட்ட பேசுற ‘நீங்க பாட்டுக்கு `வேலையை வாங்கிக் கொடுத்துட்டேன்... கொடுத்துட்டேன்'னு சொல்லிட்டு இருக்கீங்க. ஆனா, நான் எவ்ளோ பிரச்னைகளைச் சந்திச்சுக்கிட்டிருக்கேன் தெரியுமா’ங்கிற வசனம் அவங்களை ரொம்ப பாதிச்சதுன்னு சொன்னாங்க.

திருக்கனூர் டு கோலிவுட் டிராவல் எப்படி?

புதுச்சேரில இருக்கிற திருக்கனூர் கிராமம்தான் எங்க சொந்த ஊர். அங்கதான் அப்பா குணசேகரன் ஜூஸ் கடை வெச்சிருந்தாங்க. அம்மா பூங்கொடி, அண்ணா பிரவீன் குமார், நான்... இதுதான் எங்க குடும்பம். அப்பா கடைக்கு ஜூஸ் குடிக்க வந்த இயக்குநர் ஆண்டாள் ரமேஷ் என்னைப் பார்த்துட்டு, அப்பாகிட்ட விசாரிச்சிருக்கார். `சினிமாவுல நடிக்க வெக்கிற எண்ணம் இருக்கா'ன்னு கேட்டிருக்கார். அப்பா தயங்க, நான் ஓகே சொன்னேன். இப்படித்தான் `ஆசாமி'ங்கிற படம் மூலமா திரைத்துறைக்குள் நுழைஞ்சேன். அந்தப் படத்துல எனக்கு அம்மன் வேஷம். இதுவரைக்கும் 10 படங்களுக்கு மேல நடிச்சிட்டேன். நான் நடிச்ச படங்கள் எல்லாமே குறைந்த பட்ஜெட்ல உருவான படங்கள்தாம்.

ஸ்ரீபிரியங்கா
ஸ்ரீபிரியங்கா

நான் நடிக்க வந்ததுல என் அண்ணன் பிரவீனுக்கு இஷ்டமே இல்லை. பல வருஷம் என்கிட்ட பேசாமலேயே இருந்தவன், சில வருஷங்களுக்கு முன்னாடிதான் பேசினான். இப்போ அவனும் சினிமாவுல புரொடக்‌ஷன் சைடுல வேலை பார்க்கிறான்.

புதுச்சேரி முதல்வர், தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜுன்னு ஒரே அரசியல் சந்திப்பா இருக்கே?

நம்ம ஊர் பொண்ணு சினிமா நடிகை ஆகியிருக்கா என்கிற சந்தோஷத்தை என்கிட்ட பகிர்ந்துகிட்டார் புதுச்சேரி முதல்வர்.

நான் நடிச்ச படத்தைப் பார்த்த தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு, அவர் வீட்டுக்கு என்னைக் கூப்பிட்டு ‘ரொம்ப நல்லா நடிச்சிருக்கேம்மா’ன்னு வாழ்த்தினதை பெருமையா நினைக்கிறேன்.

விஜய் சேதுபதி என்ன சொன்னார்?

எங்க பட புரொமோஷனுக்கு விஜய் சேதுபதி வந்திருந்தார். நான் பேசி முடிச்சதும் ‘நிச்சயம் என் படத்துல உனக்கு வாய்ப்பு தர்றேன்'னு சொல்லியிருக்கார். ஐயாம் வெயிட்டிங், சார்!

வாழ்த்துகள்... வெற்றியைச் சூடுங்கள்!