
வேற லெவல்
`காதலில் விழுந்தேன்' மீராவாக நுழைந்து, `நீர்ப்பறவை' எஸ்தராக ரசிக்க வைத்து, `சில்லுக்கருப்பட்டி' அமுதினியாக மனம்கவர்ந்திருக்கிறார் சுனைனா. படம் தந்த வெற்றியை ஸ்வீட் எடுத்து கொண்டாடுகிறவரிடம் மினி சாட்...

மூணு குழந்தைகளுக்கு அம்மாவா நடிச்சிருக் கீங்களே?
ஹலீதா கதை சொன்னப்ப அதிர்ச்சியா இருந்தது. ஆனா, ஸ்க்ரிப்டை படிக்கிறப்ப சிரிச்சுட்டே இருந்தேன். ரொம்ப என்ஜாய் பண்ணி நடிச்சேன்!
கிருத்திகா உதயநிதி, நந்தினி ஜே.எஸ், ஹலீதா ஷமீம்னு பெண் இயக்குநர்கள்கூட வேலை பார்த்த அனுபவம் எப்படியிருக்கு?
வேலையில சின்சியராவும் சென்ஸி பிளாவும் இருப்பாங்க. பிரச்னைன்னு வந்தா பொறுமையா தீர்வு காண்பது, எல்லாரையும் கண்ணும் கருத்துமா கவனிச்சுக்கறதுன்னு எல்லாருமே வெரி நைஸ்!

தெலுங்குல வெப் சீரிஸ் பண்றீங்களே... வெப் சீரிஸ் கதைகளை எப்படி தேர்வு செய்றீங்க?
கதை வேற லெவல்ல இருக்கணும்... அவ்வளவுதான். இதே பாணிதான் சினிமாவுக்கும்.
அடுத்து..?
`தெறி', `எனை நோக்கி பாயும் தோட்டா'ல ஸ்பெஷல் அப்பியரன்ஸ்ல வந்திருப்பேன். அதெல்லாம் என் கரியர்ல ஸ்வீட் மெமரீஸ். `தெறி'ல என் போர்ஷன் ரொம்ப கலகலப்பா இருந்ததுதானே... அது மாதிரி, ஒரு முழுநீளப் படத்துல, ரியலிஸ்டிக்கான காமெடி ரோல் பண்ண ஆசை இருக்கு!