Published:Updated:

“முதல் ஷாட்டில் ரஜினி, கடைசி ஷாட்டில் கமல்...” - நாஸ்டால்ஜியா பகிரும் விஜி சந்திரசேகர்

விஜி தன் குடும்பத்தினருடன்
பிரீமியம் ஸ்டோரி
விஜி தன் குடும்பத்தினருடன்

நல்லதொரு குடும்பம்

“முதல் ஷாட்டில் ரஜினி, கடைசி ஷாட்டில் கமல்...” - நாஸ்டால்ஜியா பகிரும் விஜி சந்திரசேகர்

நல்லதொரு குடும்பம்

Published:Updated:
விஜி தன் குடும்பத்தினருடன்
பிரீமியம் ஸ்டோரி
விஜி தன் குடும்பத்தினருடன்

படம்: கேமரா செந்தில்

டிப்புக்காக ரசிக்கப்படுகிற மிகச் சில நடிகைகளில் விஜி சந்திரசேகரும் ஒருவர். `தில்லு முல்லு’வில் ரஜினிக்குத் தங்கையாக கே.பாலசந்தரால் அறிமுகமானவர், ஒரே படத்துடன் நடிப்பை நிறுத்தினார். அதன்பிறகு சட்டப்படிப்பு, திருமணம், குழந்தைகள் என செட்டிலானவர், இரண்டாவது சுற்றில் ஆரோகணம், மதயானைக்கூட்டம், வெற்றிவேல் என அசத்திக் கொண்டிருக்கிறார். விஜியின் மகள் லவ்லினும் தமிழ்த்திரையுலகில் அடியெடுத்து வைத்திருக்கிறார். அழகான அந்தக் குடும்பத்தினரிடம் பேசினோம்.

“முதல் படத்தின் முதல் ஷாட்டில் ரஜினியோடு நடிச்சேன். அந்தப் படத்தோட கடைசி ஷாட்ல கமலோடு நடிச்சேன். எவ்ளோ லக்கி நான்’’ கலகல ஓப்பனிங்குடன் பேட்டியை ஆரம்பித்தார் விஜி சந்திரசேகர்.

 லவ்லின்,சந்திரசேகர்,விஜி, சுரக்‌ஷா
லவ்லின்,சந்திரசேகர்,விஜி, சுரக்‌ஷா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``ஸ்கூல் படிக்கிறப்போ ஒரு சம்மர் ஹாலிடேலதான் ‘தில்லு முல்லு’ படத்துல நடிச்சேன். அந்தப் படத்துக்குப் பிறகு, மறுபடியும் படிக்கப் போயிட்டேன். பெங்களூருல லா படிச்சேன். கொஞ்ச நாள் பிராக்டிஸ் பண்ணேன். அமெரிக்காவுல ஹையர் ஸ்டடீஸ் முடிச்சிட்டு சென்னை வந்தப்போ, சந்திரசேகர் குடும்பத்துல இருந்து என்னை பொண்ணு கேட்டு வந்தாங்க. சந்திரசேகர் எங்க குடும்ப நண்பர். சரிதாக்கா, ‘ரொம்ப நல்ல பையன். விஜியை நல்லா பார்த்துப் பான்’னு சொன்னாங்க. வீட்டுப் பெரியவங்க எது செஞ்சாலும் சரியா இருக்கும்னு நினைக்கிறவள் நான். ஸோ, கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட் டேன். கல்யாணத்தப்போ அவர் ஏர் இந்தியாவுல பைலட்டா இருந்தார். இப்போ இண்டிகோவுல பைலட்டா இருக்கார்’’ என்றவர், தன்னுடைய ரீ என்ட்ரியைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார்.

‘`கிட்டத்தட்ட 15 வருஷங்கள் குடும்பம், குழந்தைகள்னு இருந்தேன். அப்போ, பாலசந்தர் சாரோட மருமகள் கீதா கைலாசம் அவங்களோட சீரியல்ல என்னை நடிக்கக் கேட்டாங்க. எனக்கும் நடிக்கணும்கிற எண்ணம் இருந்துச்சு. ‘வயசான காலத்துல என்னோட சினிமா கனவுகள் உங்களாலதான் கலைஞ்சுபோச்சுன்னு நீ சொன்னா, அந்தக் குற்றவுணர்ச்சியை என்னால தாங்க முடியாது. அதனால நீ தாராளமா நடி. ஆனா, வேலைக்காக ஊருக்குக் கிளம்பும்போதும், திரும்ப நான் வீட்டுக்கு வரும்போதும் நீ வீட்ல இருந்தா சந்தோஷப்படுவேன். மாசத்துல 20 நாள்கள் நான் வானத்துல இருக்கேன். மிச்சமிருக்கிற 10 நாள்கள் நீ வீட்ல இருந்தா சந்தோஷம்’னு சொன்னார். அவர் கேட்டுக்கிட்ட மாதிரியே இப்போ வரைக்கும் அவர் வெளியூர் போயிருக்கிற நாள்கள்ல தான் நான் நடிச்சிட்டிருக்கேன். இத்தனை வருஷங்கள்ல நான் வெறும் முப்பத்தி நாலு படங்கள்தான் பண்ணியிருக்கேன்னா அதான் காரணம்’’ என்பவர், தான் நடித்து விரைவில் திரைக்கு வரவிருக்கிற ‘மருத’ பட கேரக்டரை ‘லைஃப் டைம் ரோல்’ என்று பூரிக்கிறார். இந்தப் படத்தில், விஜியும் அவரின் மகள் லவ்லினும் அம்மா - மகளாகவே நடிக்கிறார்கள்.

‘‘மருத படத்துல கதாநாயகனோட அம்மா ராதிகா. கதாநாயகியோட அம்மா நான். ஒரு நாள் என் வீட்டுக்கு வந்த டைரக்டர் கிருஷ்ணா, லவ்லினைப் பார்த்துட்டு ‘இவங்களே ஹீரோயினா நடிச்சா அம்மா - பொண்ணு கனெக்‌ஷன் நல்லாயிருக்குமே’னு சொன்னார். அப்படித்தான் இது நடந்துச்சு’ என்றார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘`ஷூட்டிங் ஸ்பாட்ல அம்மா பொண்ணு சென்டிமென்ட்டெல்லாம் கிடையாது’’ என்றபடி பேச ஆரம்பித்தார் லவ்லின்...

‘`நான் நடிக்கிறப்போ ராதிகா ஆன்ட்டிதான் ஃபுல் சப்போர்ட். ஆன்ட்டியோட நான் வரும் சீன்கள்ல டேக் மேல டேக் வாங்கினாகூட பொறுமையா இருப்பாங்க. ‘என்னோட முதல் படத்தையும் உன்னோட முதல் படத்தையும் கம்பேர் பண்ணா நீ ரொம்ப பெட்டரா பண்ணியிருக்கே’ன்னு சொல்லி என்கரேஜ் பண்ணுவாங்க. இந்தப் படத்துல ரொம்ப கஷ்டப்பட்டு மதுரை பாஷைல பேசியிருக்கேன். படம் பார்த்துட்டு எப்படியிருக்குன்னு சொல்லுங்க’’ என்ற மகளைத் தொடர்ந்த விஜி...

‘`சினிமாவுல நடிக்கிறது டைம் பாஸ் கிடையாது. சினிமாதான் கரியர்னு முடிவெடுத்திட்டா கஷ்டப்பட்டுதான் ஆகணும். சுலபமா கிடைக்கிற எதுவுமே நிலைக்காது’’ என்கிறார் கறாராக.

``அம்மா பேரை சொல்லி நான் யார்கிட்டேயும் சினிமா சான்ஸ் கேட்டதே இல்ல. அம்மாவோட பின்னணி இல்லாம என் திறமையை வெச்சு ஒண்ணு, ரெண்டு படம் நடிச்சா கூட போதும்’’ என்ற மகளைப் பெருமிதமாகப் பார்க்கிறார் அம்மா விஜி.

‘`வாழ்க்கையில சுயமரியாதையை மட்டும் இழந்துடக் கூடாதுன்னு ரெண்டு பொண்ணுங் களுக்கும் சொல்லி வளர்த்திருக்கேன். அவங்களும் அப்படித்தான் வளர்ந்திருக்காங்க’’

- நிறைவோடு பேசும் விஜி சந்திரசேகரின் மூத்த மகள் சுரக்‌ஷா டாக்டர். ஐக்கிய நாடுகள் சபைக்கான கோவிட் புராஜெக்டில் தற்போது ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்.