Published:Updated:

“இது ஆண்கள் பார்க்க வேண்டிய பெண்கள் படம்”

ஜோதிகா
பிரீமியம் ஸ்டோரி
ஜோதிகா

எனக்கு இந்த கேரக்டர்ல இவங்க, இவங்க நடிச்சா நல்லா இருக்கும்னு தயாரிப்பாளர்கிட்ட சொன்னேன்.

“இது ஆண்கள் பார்க்க வேண்டிய பெண்கள் படம்”

எனக்கு இந்த கேரக்டர்ல இவங்க, இவங்க நடிச்சா நல்லா இருக்கும்னு தயாரிப்பாளர்கிட்ட சொன்னேன்.

Published:Updated:
ஜோதிகா
பிரீமியம் ஸ்டோரி
ஜோதிகா
`இயக்குநராக அறிமுகம் ஆகும் பல பேருக்கு முதல் படம் கிடைக்கிறது பெரிய போராட்டமா இருக்கும். ஆனால், கடவுளோட ஆசீர்வாதத்தால எனக்கு பெரிய போராட்டமெல்லாம் இல்லை. என்கிட்ட சில கதைகள் இருந்துச்சு.

அதில் ’பொன்மகள் வந்தாள்’ கதையை என்னோட முதல் படமா எடுக்கணும்னு ஆசைப்பட்டு, ஜோதிகா மேடம்கிட்ட கதையைச் சொன்னேன். கதையைக் கேட்டவுடனே எந்த மாற்றமும் செய்யச் சொல்லாமல், அவங்களே தயாரிச்சு, நடிக்கவும் ஓகே சொன்னாங்க. இப்படி டபுள் சந்தோஷத்தோடு இந்தப் படம் ஆரம்பமாச்சு’’ - அதே ஆனந்தத்தோடு பேச ஆரம்பித்தார், இயக்குநர் ஜே.ஜே.ஃப்ரெட்ரிக்

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ஜோதிகா
ஜோதிகா

‘` `பொன்மகள் வந்தாள்’ படத்தின் ஒன்லைன் என்ன?’’

‘`அன்றாடம் நம்ம வாழ்க்கையில நம்மளைச் சுற்றி நடக்குற பல பிரச்னைகளை இந்தப் படத்தில் பேசியிருக்கோம். இந்த ஒரு பிரச்னையை மட்டும்தான் பேசியிருக்கோம்னு சிங்கிள் லேயரில் எதுவும் சொல்லிட முடியாது. படத்தில் காட்டுற எல்லாப் பிரச்னைகளையும் படம் பார்க்கிற ஆடியன்ஸ் கனெக்ட் பண்ணிக்க முடியும். அந்த அளவுக்குப் பொதுவான விஷயங்கள் படம் முழுக்கவே இருக்கும்.’’

ஜோதிகா
ஜோதிகா

‘`ஜோதிகா முதல் முறையா வக்கீலா நடிக்கிறாங்க; என்ன சொன்னாங்க?’’

``இந்தப் படத்தோட ஷூட்டிங் ஆரம்பித்த முதல் நாள் ஜோதிகா மேடம் என்கிட்ட, ‘ஃப்ரெட்ரிக் இந்தக் கதை எனக்கு ரொம்ப முக்கியமானது. இதை மக்கள்கிட்ட சரியா கொண்டு போய்ச் சேர்க்கணும்’னு சொன்னாங்க. அன்னிலேருந்து படத்தோட டப்பிங்கை முடிக்கிற வரைக்கும் தினமும் அவங்க உழைப்பால எங்களை ஆச்சர்யப்படுத்திட்டே இருந்தாங்க. படத்தோட ஷூட்டிங் ஆரம்பிக்கிறதுக்கு ஆறு மாசம் முன்னாடியே முழு ஸ்கிரிப்ட்டையும் அவங்ககிட்ட கொடுத்துட்டேன். அதனால, ஸ்பாட்டில் அவங்க ஒரு நாளும் ஸ்கிரிப்ட் பேப்பரைப் பார்த்ததேயில்லை. எல்லா வசனத்தையும் மனப்பாடமா வெச்சிருந்தாங்க. குறிப்பா கோர்ட்டுல வாதாடுற சீன்ஸ் எடுக்கும் போது, பல ஷாட்டை ஒரே டேக்குல எடுத்தோம். எல்லாத்தையுமே ரொம்ப சூப்பரா பண்ணினாங்க. ஸ்பாட்டுல எங்களை மிரட்டுன மாதிரி, டப்பிங் பேசும் போதும் அதேதான். ஜோதிகா மேடம் நடிப்பை இந்தப் படத்தில் முழுமையாப் பார்க்கலாம். இதை அவங்களே என்கிட்ட சொன்னாங்க. அந்த அளவுக்கு நடிப்புல பிரமாதப்படுத்தியிருக்காங்க. அவங்களுக்கு இப்படியெல்லாம் பண்ணணும்னு அவசியமே கிடையாது. கூலா படங்கள் செலக்ட் பண்ணி நடிக்கலாம். ஆனால், அவங்க அதைப் பண்றதேயில்லை.’’

ஜோதிகா
ஜோதிகா

‘’தயாரிப்பாளர் சூர்யா என்ன சொன்னார்?’’

’’ஒரு தயாரிப்பாளரா சூர்யா சார் என் மேல பெரிய நம்பிக்கை வெச்சிருந்தார். படத்துல எதையுமே, ‘இப்படி மாத்திக்கோங்க; அப்படிப் பண்ணிங்கோங்க’ன்னு சொன்னதேயில்லை. ’இந்தக் கதைக்கு என்ன தேவையோ அதையெல்லாம் பண்ணுங்க’ன்னு சொன்னார். ’நீங்க கேட்டது கிடைச்சிருச்சா; ஷூட்டிங் எப்படிப் போயிட்டு இருக்கு’ன்னு அடிக்கடி என்கிட்ட விசாரிப்பார். இப்படி ஒரு தயாரிப்பாளரும், நினைச்சுப் பார்க்க முடியாத அளவுக்கு மெனக்கெடுற நடிகையும் ஒரு இயக்குநரோட முதல் படத்திலேயே கிடைக்கிறது பெரிய கொடுப்பினைதான்.’’

‘’பாக்யராஜ், பிரதாப் போத்தன், தியாகராஜன், பாண்டியராஜன், பார்த்திபன்னு முதல் படத்துலேயே இத்தனை பெரிய இயக்குநர்களை நடிக்க வெச்சிருக்கீங்க; இந்த அனுபவம் எப்படி இருந்தது?’’

’’எனக்கு இந்த கேரக்டர்ல இவங்க, இவங்க நடிச்சா நல்லா இருக்கும்னு தயாரிப்பாளர்கிட்ட சொன்னேன். நானும் அவங்களைச் சந்திச்சுக் கதையைச் சொன்னேன். எல்லாருக்கும் கதை பிடிச்சிருந்தனால, உடனே ஓகே சொல்லிட்டாங்க. இவங்க எல்லாருமே இயக்குநரா இருந்தாலும், ஸ்கிரிப்ட்டிலோ, வசனத்திலோ எந்தவிதத் தலையீடும் பண்ணவேயில்லை. நான் அறிமுக இயக்குநரா இருந்தாலும், என் ஸ்கிரிப்ட்டை நம்பி நான் சொல்றதை மட்டும் பண்ணினாங்க. இவங்களுக்குள்ள ஈகோன்னு ஒண்ணு இல்லவே இல்லை. ஒரு இயக்குநருக்கு அது ரொம்ப முக்கியம்னு முதல் படத்திலேயே அதை எனக்குக் கத்துக்கொடுத்திருக்காங்க. இதில் நடிச்ச நடிகர்கள் மட்டுமன்றி, கேமராமேன் ராம்ஜி சார், எடிட்டர் ரூபன்னு டெக்னிக்கல் டீமில் இருக்கிறவங்களும் பல படங்கள் பண்ணின சீனியர்ஸ். அதிலும் ராம்ஜி சார், தான் கமிட்டாகுற ஒவ்வொரு படத்தையும் பார்த்துப் பார்த்து செலக்ட் பண்ணக்கூடிய ஆள்.

ஜோதிகா
ஜோதிகா

அவர் என் படத்தில் கமிட்டானது ரொம்பவே சந்தோஷமான விஷயம். அதேமாதிரி, இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவும் இந்த ஆல்பத்தைச் சிறப்பா கம்போஸ் பண்ணியிருக்கார். ’96’ படத்துல வொர்க்கவுட்டான கோவிந்த் வசந்தா - சின்மயி காம்போ, இந்தப் படத்தோட ’வான் தூறல்கள்’ பாட்டுலேயும் வொர்க் ஆகியிருக்கு. இந்தப் படத்துல வொர்க் பண்ணின எல்லாருமே அவங்களோட முழு உழைப்பையும் கொட்டியிருக்காங்க.’’

ஜோதிகா
ஜோதிகா

‘’ பெண்களை மையப்படுத்திய கதைகள்தான் தமிழ் சினிமாவின் தற்போதைய டிரெண்ட். இந்த ஜானரில் வருகிற பல படங்களிலிருந்து இதெல்லாம் இந்தப் படத்தை தனியா தெரிய வைக்கும்னு நீங்க நினைக்கிற விஷயம் என்ன?’’

’’என்னைப் பொறுத்தவரைக்கும் ஒரு கதையை யார் சொன்னால் அது சரியா இருக்குமோ, அவங்கதான் சொல்லணும். சில கதைகளை ஹீரோ சொன்னால் சரியா இருக்கும். இந்தக் கதையை ஹீரோயின் சொன்னால்தான் சரியா இருக்கும்னு தோணுச்சு. அதுனாலதான், இதை வுமன் சென்ரிக் படமா எடுத்திருக்கோம். மத்தபடி, இந்த டிரெண்டை யூஸ் பண்ணிக்கணும்னு நான் நினைக்கவேயில்லை. முக்கியமா இது பெண்களுக்கான படமாக மட்டுமே இருக்காது. இதை அதிகமா ஆண்கள்தான் பார்க்கணும்.’’